"மும்தாஜின் தாய்ப்பாசத்தில் போலியில்லை. ஆனால், ஷாரிக்தான்...!" உமா ரியாஸ்

"ஐஸ்வர்யாகிட்ட `ஐ லைக் யூ'னு மட்டும்தான் சொல்லியிருக்கான். `ஐ லவ் யூ'னு சொல்லலை. அவனைப் பற்றி எனக்குத் தெரியும். அவன் இதை ஏதாச்சும் ஒரு தந்திரத்துக்காக விளையாடறதாவும் இருக்கலாம்."

ண்டைச் சச்சரவுகள் எனத் தொடர்ந்த `பிக் பாஸ்' நிகழ்ச்சியில், சில விநோத டாஸ்க்குகளால் பரபரப்பு கூடியிருக்கிறது. அதில், மும்தாஜ் - ஷாரிக் இடையிலான அம்மா மகன் உறவிலான அன்பும் விரிசல்களும். ஷாரிக் ஹாசன் செயல்பாடுகள் குறித்து அவரின் அம்மாவும், நடிகையுமான உமா ரியாஸிடம் பேசினோம்.

``ஆரம்பத்துல ஷாரிக்கை செல்லப் பிள்ளையாகத்தான் எல்லோரும் பார்த்துக்கிட்டாங்க. ஷாரிக்கை தன் மகனாகவே பாசம் காட்டினாங்க மும்தாஜ். இருவருக்குள்ளும் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டபோதும், மும்தாஜ் இதுவரை தாயாகக் காட்டிய அன்பில் போலித்தனம் இல்லை. ஷாரிக்கும் மும்தாஜை அம்மாவாதான் பார்க்கிறான். மும்தாஜ் தரப்பிலிருந்து பார்த்தால், சில நேரங்களில் அவருக்கு எதிராக ஷாரிக் செயல்பட்டதையும் ஒப்புக்கிறேன். ஒருமுறை டாஸ்க்கை சரியா செய்யாத மும்தாஜூக்கு ஹவுஸ் மேட்ஸ் தண்டனை கொடுத்தாங்க. அதைச் செய்யச்சொல்லி ஷாரிக் சொன்னான். அதன்பிறகு, டாஸ்க்குக்காக மும்தாஜிடம் சில நேரங்களில் ஷாரிக் முரண்பட்டார். அதனால், பார்வையாளர்கள் பலருக்கும் ஷாரிக் மேலே கோபம் வந்திருக்கும். 

உமா ரியாஸ்

ஒருமுறை, `இந்த டாஸ்க் முடியட்டும். மும்தாஜ்கிட்ட ஸாரி கேட்கிறேன்'னு மஹத்கிட்ட சொன்னான். இந்த விடுபட்ட காட்சியை ஹாட் ஸ்டார்ல ஒளிபரப்பினாங்க. ஆனால், இதைப் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நேரப் பற்றாக்குறை காரணமா குறிப்பிட்ட காட்சிகளை மட்டும்தான் ஒளிபரப்புறாங்க. அதனால், இரவில் காட்டப்படும் காட்சிகளை மட்டுமே பார்த்து ஒருத்தரின் செயல்பாட்டை மதிப்பிடுறது தப்பு. நம்ம குடும்பத்திலேயே ஒருத்தரிடம் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி அன்பாகவும் சில சமயம் வெறுப்பாகவும் நடந்துப்போம். அப்படித்தான் ஷாரிக்கும் மும்தாஜ் மற்றும் மத்தவங்களிடம் நடந்துக்கிறான். அதில் என்ன தப்பு? அவன் ஒரே மாதிரியே இருந்தால்தான் நடிப்பு. யாரா இருந்தாலும் முழுமையா `பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, ஷாரிக் மீது குற்றம் சாட்டினால் பதில் சொல்ல தயார்'' என்கிறார் உமா ரியாஸ். 

உமா ரியாஸ்

`இங்கே வந்த நோக்கத்தை மறந்துட்டு செயல்படறீங்க' என கமல்ஹாசனும், `வயசுக் கோளாறில் நடந்துக்கிறார்' என வெளியேறிய போட்டியாளர்களும் ஷாரிக் பற்றி சொன்னது பற்றிக் கேட்டோம்.

``கமல் சார் எதற்காக அப்படிச் சொன்னார்னு எனக்குத் தெரியலை. அது பற்றிப் பெரிசாவும் எடுத்துக்கலை. `ஷாரிக்கும் ஐஸ்வர்யாவும் பெட்ல என்ன பண்ணிட்டிருந்தாங்க தெரியுமா?'னு பொன்னம்பலம் ஒருமுறை சொன்னார். அதைக் கேட்ட பலருக்கும் அதிர்ச்சியா இருந்துச்சு. `அவங்க ரெண்டு பேரும் பேசிட்டிருக்கும்போது நாங்க எல்லோரும் பக்கத்துலதான் இருந்தோம். பொன்னம்பலம் சொன்னது மாதிரி எதுவும் நடக்கலை'னு `பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய ரம்யாவே சொல்லியிருக்காங்க. அதனால், உண்மையைத் தெரிஞ்சுக்காம யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம். வயசுக்கோளாறில் ஷாரிக் சில செயல்களில் ஈடுபடுறதா சொல்றாங்க. எனக்கு அப்படித் தோணலை. ஐஸ்வர்யாகிட்ட `ஐ லைக் யூ'னு மட்டும்தான் சொல்லியிருக்கான். `ஐ லவ் யூ'னு சொல்லலை. அவனைப் பற்றி எனக்குத் தெரியும். அவன் இதை ஏதாச்சும் ஒரு தந்திரத்துக்காக விளையாடறதாவும் இருக்கலாம்.

ஷாரிக் ஹாசன்

ஐஸ்வர்யா இப்போ ரொம்ப மோசமா நடந்துக்கிறதா பலரும் குற்றம் சொல்றாங்க அது டாஸ்கா இருக்கலாமே! வரும் நாள்களின் நிகழ்வுகளைப் பார்த்தால்தான் உண்மை தெரியவரும். தற்போதைய சில டாஸ்குகளால், நிகழ்ச்சியின் விறுவிறுப்பு கூடியிருக்கு. முன்பு, சிலர் போலியா இருந்ததா தோணுச்சு. இப்போ, எல்லோரின் உண்மை முகமும் வெளிப்படுது. பலரின் பெயரும் டேமேஜ் ஆகியிருக்கு. மும்தாஜிடம் நடந்துகொண்ட விதம், ஐஸ்வர்யாவுடன் பழகின விதத்தில் ஷாரிக் மீது சில விமர்சனங்கள் எழுந்துச்சு. அதனால், ஷாரிக் மீது மக்களுக்குத் தவறான கண்ணோட்டம் இருந்திருக்கலாம். ஆனால், இப்போ ஷாரிக்கை எல்லோருக்கும் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. எங்க வீட்டுல அவன் பெரிசா வேலைகள் செய்ய மாட்டான். `பிக் பாஸ்' வீட்டுல சமைக்கிறது, கிச்சன் கிளீனிங், டாய்லட் கிளீனிங்னு எல்லாம் செய்யுறான். அதைப் பார்க்கவே  ஆச்சர்யமா இருக்கு. சுயமா செயல்படுறதைத் தெரிஞ்சுகிட்டான். இன்னும் கொஞ்சம் போல்டு ஆகணும். தனித்துவமா தெரியணும். அதுக்கான செயல்பாடுகளைச் செய்தால், நிச்சயம் எல்லோரின் ஆதரவையும் பெற முடியும். அதுதான் என் அட்வைஸ்" என்கிறார் உமா ரியாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!