Election bannerElection banner
Published:Updated:

இந்த வார கான்செப்ட் இவங்க ரெண்டு பேரும்தான். பிக் பாஸ் மார்னிங் மசாலா!

தார்மிக் லீ
இந்த வார கான்செப்ட் இவங்க ரெண்டு பேரும்தான். பிக் பாஸ் மார்னிங் மசாலா!
இந்த வார கான்செப்ட் இவங்க ரெண்டு பேரும்தான். பிக் பாஸ் மார்னிங் மசாலா!

இந்த வார கான்செப்ட் இவங்க ரெண்டு பேரும்தான். பிக் பாஸ் மார்னிங் மசாலா!

ஆண்டவர் நேற்று வேஷ்டி சட்டை போடும்போதே தெரிந்துவிட்டது, இந்த வாரத்தின் எலிமினேஷன் பொன்னம்பலம்தான் என்று. அவரே வீட்டுக்குள் சென்று, அவரைக் கூட்டிக்கொண்டு வந்தது, இதில் கூடுதல் சிறப்பு. காரசாரமான பேச்சுகள் நேற்று அரங்கேறவில்லை என்றாலும், ஒரு சில எக்ஸ்ப்ரஷன்களில் மக்கள் மனதைக் கவர்ந்துவிட்டார், ஆண்டவர். இதைத் தொடர்ந்து இன்று காலை பிக் பாஸ் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது? 

* வைஷ்ணவியின் மனதை உருக்கும் பாடலை பிக் பாஸ் போட்டிருக்கிறார் போல! அதற்காக பிக் பாஸிடம் சாஷ்டாங்க `நன்றி' சொல்லிக்கொண்டிருந்தார். முன்பு இருந்ததைவிட வைஷ்ணவி சற்று இறுக்கமாகவே காணப்படுகிறார். பட்டும்படாத பேச்சு, இவரைப் பற்றி ஏதேனும் சொன்னால் `என்னை அப்படிச் சொல்ல அவங்க யார்' என்று வெளிப்படையாகக் கோபப்படுவதாகட்டும், சின்ன விஷயத்துக்கெல்லாம் முகம் சுழிப்பதாகட்டும், இது குறிப்பாக டேனியலிடம் அதிகமாக நடக்கிறது. எப்போதும் தன்னை ஏதோ ஒரு கூண்டுக்குள் வைத்திருப்பது போல் இறுக்கமான முகத்துடனே காணப்படுகிறார். 

* கிச்சன் ஏரியாவில் டேனியல், `காதலன்' படத்தின் வடிவேலு கதாபாத்திரத்தைப் புகழ்ந்து கூறிக்கொண்டிருந்தார். `ஷங்கர் சார் அந்த கேரக்டருக்கு வடிவேலு சாரைப் போட்டதே பெரிய விஷயம், அதையும் அவ்வளவு அழகா யூஸ் பண்ணிக்கிட்டது, வடிவேலு சாருடைய திறமை' என்று கூறியதோடு, அந்தப் படத்தின் ஒரு வசனத்தையும் இமிடேட் செய்து காட்டினார். `பெண்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஜில், ஜங், ஜக்' என்ற வடிவேலு மாடுலேஷனில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வைஷ்ணவி டேனியலை முறைத்துப் பார்த்துக்கொண்டே போனார். 

* இதைத் தொடர்ந்து `காதலன்' படத்தைப் பற்றிய அதிகமாக டாக் போய்க்கொண்டிருந்தது. மஹத்துடன் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த வைஷ்ணவி, `அப்படியே ஒரு பேட்டாராப் போட்டா நல்லா இருக்கும்ல' என்று சிரித்துக்கொண்டே கூறினார். இந்த இடத்தில்தான் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. `பேசுற தமிழே எனக்குப் புரியலை' என்று கமலிடம் குற்றம்சாட்டிய வைஷ்ணவிதான், இதையும் சொல்கிறார். ஹ்ம்ம். தட் வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம்னு பேரு வெச்சாங்கலாம் மொமன்ட்! சென்றாயன், கார்டன் ஏரியாவில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். என்ன செய்வதென தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்த வைஷ்ணவி, `இந்தா தொக்கா மாட்டிக்கிச்சுல்ல' என்ற மோடில் அவரை நோக்கிச் சென்று, `சென்டு அண்ணா உங்ககிட்ட பேசி ரொம்ப நாளாச்சு...' எனச் சொல்லி டாய்லட் க்ளீனிங் விஷயத்தில் பேச ஆரம்பித்து, டேனியல் வரை `அன்னிக்குக் காலையில ஆறு மணி இருக்கும்' என்ற டோனில் சொன்னதையே சொல்லி சென்டுவை எந்தப் பக்கமும் செல்லவிடாமல் கேட் போட்டுக்கொண்டிருந்தார். இவரும் வேறு வழியின்றி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். பாவம் சென்டு ப்ரோ!

* இன்னும் மும்தாஜை மட்டும்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. உடல் நலம் சரியில்லை எனச் சொல்வதும், அதற்காக வருந்துவதும் ஓகே. ஆனால் எந்நேரமும் சோர்வாகவே காணப்படுகிறவர், வார இறுதியில் கமலைக் காணப்போகும் போது மட்டும் செம எனர்ஜெட்டிக்காகச் செயல்படுகிறார். கடந்த வாரம், கமல்கூட `ஹைஜீன் குயின், டாஸ்க் வந்துட்டா மட்டும் பயங்கரமா செயல்படுறீங்களே...' எனக் கிண்டலாகச் சொல்லிக் காண்பித்தார். எல்லோரும் எழுந்து காலை உணவு சமைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் இவர் படுக்கையை விட்டே எழுந்தார். எழுந்ததும், லிவ்விங் ஏரியாவுக்கு நேராகச் சென்றவர், அங்கிருக்கும் சோஃபாவில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். 

இதற்கு நடுவில் வீட்டின் அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் திரைகளால் மூடப்பட்டன. இரு பாலரின் பெட்ரூம்கள் கூட திரைபோட்டு மூடப்பட்டிருந்தன. நடுவில் டேனியலும், வைஷ்ணவிக்கும் இடையே சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. ரைட்டு இந்த வாரத்தின் கான்செப்ட் இதுதான். எவிக்‌ஷனுக்கான நாமினேஷனும் ஏதோ நூதனமான முறையில் நடக்கவிருக்கிறது போல! வைஷ்ணவியை டேனியலும், டேனியலை வைஷ்ணவியும் நாமினேட் செய்துகொண்டார்கள். தொடர்ந்து பார்ப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு