Election bannerElection banner
Published:Updated:

`அமைதியா வேல பாருங்க டா அப்ரசன்டிகளா..!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா

தார்மிக் லீ
`அமைதியா வேல பாருங்க டா அப்ரசன்டிகளா..!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா
`அமைதியா வேல பாருங்க டா அப்ரசன்டிகளா..!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா

`அமைதியா வேல பாருங்க டா அப்ரசன்டிகளா..!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா

ஸ்கூலில் மதிய உணவு முடித்துவிட்டு, முதல் வகுப்பில் உட்கார்ந்திருந்த எஃபெக்ட்டைக் கொடுத்தது நேற்றைய பிக் பாஸ் ஷோ. `என்னயா சவசவன்னு பேசிகிட்டே இருக்காய்ங்க' என்பதுபோல் பயங்கர சோர்வை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? 

* மிட்நைட் மசாலாவின் ஆரம்பக் காட்சியே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பிக் பாஸ், தனது சித்து வேலைகளை ஆரம்பித்துவிட்டார் போல. `மறுக்கப்பட்டது' என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த இடத்தில் வைஷ்ணவி தன்னந்தனியாக உட்கார்ந்து ஏதோ ஒரு ரிப்பனை பிய்த்துக்கொண்டிருந்தார். `மங்காத்தா' படத்தில், `கடைசியிலதான் வந்து சேர்ந்தாரு, விநாயக்' என்ற வசனத்தைப்போல் வைஷ்ணவியுடன் கை கோத்தார், ஜனனி. இப்படி நீல நிற ஆடையணிந்து மும்தாஜ், சென்றாயன் என  இவர்கள் ஒரு புறம் இருக்க, ரித்விகா, பாலாஜி, ஐஸ்வர்யா, டேனியல், யாஷிகா போன்றவர்கள் ஆரஞ்ச் நிற ஆடையணிந்து அவர்களுக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர். இவர்கள் அணிந்திருக்கும் உடைகளைப் பார்த்தால், லேபர்களாக டாஸ்க் விளையாடுகிறார்கள் போல! ப்ரோமோவில் இவர்கள் குடுமிச் சண்டை போடுவதைப் பார்க்கும்போது `அமைதியா வேல பாருங்கடா அப்ரசன்டிகளா' என்ற வடிவேலு வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

* டேனியல், முதன்முதலாக நாமினேஷனில் வந்துவிட்டதால், `ஃப்ரெண்டு... நாமினேஷன் ப்ராசஸு. மொதோ மொதலா லிஸ்ட்ல வந்துட்டாப்ல. சேஃப் ஆகிட்டா கூல் ஆகிருவாப்ல' என்ற ரேஞ்சில் ஃபீல் செய்துகொண்டிருந்தார். அதற்கு ரித்விகா, `நீ நாமினேஷன்ல வந்துட்டீள்ள. இனி உனக்கு செம எனர்ஜியா இருக்கும்' என்று டேனியலுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். இதன் பிறகு மீண்டும் ஃபார்முக்கு வந்து ஜாலியாகக் கலாய்த்துக்கொண்டிருந்தார், டேனியல். 

* டேனியல், ஐஸ்வர்யா, யாஷிகா, மஹத் என இந்த நான்கு பேர் கூட்டணி ஆரம்பத்தில் ஒன்றாக இணைந்து எல்லோரையும் கிண்டலடித்து ஜாலியாக இருந்து வந்தனர். மஹத்தைத் தவிர மற்ற மூவரும் `பேபி பேபி' பாட்டுப் பாடி டான்ஸ் ஆடி ஹேப்பி மோடிலே இருந்து வந்தார்கள். பின் நாள்களில் இவர்களுக்குள்ளே கருத்து வேறுபாடுகளும், மனக்கசப்பும் ஏற்பட்டு சண்டையிட்டுக்கொண்டனர். முதலில் ஐஸ்வர்யா, பின் டேனியல் எனக் கூட்டணி மாறிக்கொண்டேயிருந்தது. இப்போது மஹத்தின் டைம் வந்துவிட்டது. இவர்கள் கேங்கிலிருந்து மஹத் கொஞ்சம் விலகியே இருப்பது, பார்த்தாலே தெரிகிறது. மீண்டும் கூட்டணியில் சேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அடித்து சண்டை போட்டுக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 

* நுழைவு வாயிலில் குத்த வைத்து உட்கார்ந்திருந்த சென்றாயன், வாழ்க்கையே வெறுத்தது போல் உணர்ச்சிவசப்பட்டு வருந்திக்கொண்டிருந்தார். அவரது அருகில் உட்கார்ந்த மஹத், `மாப்ள இதுக்குலாம் ஃபீல் பண்ணா எப்டி டா. எண்ட் ஆஃப் தி டே இதையெல்லாம் நெனைச்சுப் பார்த்தா, இது ஒரு மேட்டரே கிடையாது. வெளியில போய் நான் ஒரு படம் ரிலீஸ் பண்ணிட்டேன்னா எல்லாமே வேற மாதிரி மாறிடும் மாப்ள' என்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், சென்றாயன் எதற்கு வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார் என்பதையே இவர் கேட்கவில்லை. உண்மையிலேயே விவரம் அறிந்துதான் சென்றாயனுக்கு ஆறுதல் கூறுகிறாரா, இல்லை இவருக்கு இவரே ஆறுதல் கூறிக்கொள்கிறாரா என்பது தெரியவில்லை. சென்றாயன் ப்ரோதான் ரொம்பப் பாவம். இவர் ஃபீல் பண்ணாலும் இவரைதான் வெச்சு செய்கிறார்கள், மற்றவர்கள் ஃபீல் பண்ணினாலும் இவரைதான் வெச்சு செய்கிறார்கள். சென்றாயன் பரிதாபங்கள்! தட் `அவ என்னைய அடிக்க, என்னைய அவ அடிக்க மொமென்ட்!'

* பாத்ரூம் கண்ணாடி முன் நின்று அமைதியாக முகம் பார்த்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, திடீரென தலையை விரித்துப்போட்டு டான்ஸ் ஆடத் தொடங்கினார். இதை பாஸிங்கில் பார்த்துச் சென்ற யாஷிகா, குடுகுடுவென ஓடிவந்து இவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடத் தொடங்கினார். நீண்ட நேரம் மைக்கேல் ஜாக்சனின் சகோதரிகள் போல் ஆடிக்கொண்டே... இருந்தார்கள். `பார்... முழுசா சந்திரமுகியா மாறியிருக்க இந்த இரண்டு பேரையும் பார்..!'

சண்டை போட்டால் வீட்டில் நிலைக்கலாம் என்று நினைத்து இப்படிச் செய்கிறார்களா... இல்லை உண்மையிலேயே சண்டை போடுகிறார்களா என்பது தெரியவில்லை. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டு வீட்டையே ரெண்டாக்கிவிடுகிறார்கள். அது சரி எல்லோரும் `மானிக்' பாலாஜி ஆகிவிட முடியுமா. கொஞ்ச நாள் எந்த டாஸ்க்கும் கொடுக்காத பிக் பாஸ் மீண்டும் ஃபார்முக்கு வந்து நூதனமான சில டாஸ்க்குகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு