Election bannerElection banner
Published:Updated:

``என்னடா இது கேர்ள் பெஸ்ட்டிக்கு வந்த சோதனை!" - பிக்பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா

தார்மிக் லீ
``என்னடா இது கேர்ள் பெஸ்ட்டிக்கு வந்த சோதனை!" - பிக்பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா
``என்னடா இது கேர்ள் பெஸ்ட்டிக்கு வந்த சோதனை!" - பிக்பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா

பிக் பாஸ் மார்னிங் & மிட்நைட் மசாலா

சிறுவர்களே ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்.பாக்ஸ் என விளையாட்டில் தங்களை அப்டேட் செய்துகொண்டனர். இன்னும் பொம்மைகளுக்காக அடித்துக்கொண்டு, சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகள்தான், பிக் பாஸ் வீட்டில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. வாய் வார்த்தைகளில் ஆரம்பித்த சண்டை, கைகலப்பு வரை சென்றுள்ளது. பொம்மைகளுக்கான போர்க்களத்தைத் தொடர்ந்து, பிக் பாஸ் மிட்நைட் மற்றும் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது? 

* `பொம்மலாட்டம்' டாஸ்க் ஒரு வழியாக முடிவடைந்துவிட்டது. இதுக்குமேல் போனால் கொலை கேஸ் ஆகிவிடும் என்பது பிக் பாஸுக்கே தெரிந்திருக்கும். பணியாளர்கள் உடையில் இருந்த வீட்டார்கள், நார்மல் உடையணிந்து வழக்கம்போல் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். மஹத், ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா என சிலர் முடிந்துபோன `பொம்மலாட்டம்' டாஸ்க்கைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். டாஸ்கின்போது, `தொட்றா பாக்கலாம்..!' என்று டேனியலும், மஹத்தும் மல்லுக்கு நின்றதைக் கடந்த இரு எபிசோடுகளில் பார்த்திருப்போம். ஆனால், டாஸ்க் முடிந்து, வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியதும், `அடிச்சாலும் புடிச்சாலும் நீயும் நானும் நண்பன்தானேடா!' என்ற ரேஞ்சில் மாமா, மச்சான் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். நல்லா இருக்கு ப்ரோ உங்க பெர்ஃபாமன்ஸு!

* டேனியலும், சென்றாயனும் கிச்சனில் அனைவருக்கும் டீ போட்டுக்கொண்டிருந்தனர். உலக வரலாற்றிலே டீயைக் கரண்டியில் போட்டவர்கள்  இந்த இருவரும்தாம். டீக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் போட்டுவிட்டு, குழம்புக் கரண்டியை வைத்து டீயைக் கிண்டிக்கொண்டிருந்தார், டேனியல். ஆஸம் ப்ரோ! இன்னொரு பக்கம் வைஷ்ணவி, மாங்கு மாங்கென்று வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். `பஞ்சம், பஞ்சு பஞ்சாய்ப் பறந்துபோகட்டும்' என்றபடிதான் `பொம்மலாட்டம்' டாஸ்க் நடந்தது. தொடர்ந்து ஒட்டுமொத்த வீடுமே பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலைபோலக் காட்சியளித்தது. அங்கு கட் ஆன கேமரா, கார்டன் ஏரியா பக்கம் திரும்பியது. வைஷ்ணவி, ஜனனி, சென்றாயன் பேசுவதைப் பார்க்கும்போது, `பொம்மலாட்டம்' டாஸ்கின் `ஒர்ஸ்ட் பெர்ஃபாமர்' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், நேரடியாக எவிக்‌ஷனின் நாமினேஷனில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த நபர் யார் என்று சொல்ல வருவதற்குள் கேமரா கட் ஆகி வேறு இடத்துக்கு வந்துவிட்டது. 

* பாலாஜியும், சென்றாயனும் கார்டன் ஏரியாவில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தனர். `காத்தால கக்கூஸ் கழுவுனேன், மதியம் வீடு பெருக்கினேன்' என வைஷ்ணவி தனது அருமை பெருமைகளை பாலாஜியிடம் தெரிவித்துக்கொண்டிருந்தார். இதெல்லாம் அந்தந்த சீஸன்ல அவன் அவன் திங்கிறதுதான் மொமன்ட்! `அப்படியே கார்டனையும் சுத்தம் பண்ணு... நீதான் டைட்டில் வின்னர்' எனப் பதிலுக்கு பாலாஜி நக்கலடித்ததுதான் ஹைலைட். அப்படியே முகம் சுருங்கிய வைஷ்ணவி, `ஹலோ நேத்து என்னைய அடிக்க வரேன்னு சொன்னீங்க, வரவேயில்ல' என்றபடி உள்ளே மஹத்திடம் சென்றுவிட்டார். இதற்கு நடுவில் மஹத்துக்கும், ஜனனிக்கும் லேசாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதுபோல. வீட்டில் இருக்கும் எல்லோரிடமும் புலம்பிக்கொண்டிருந்தார், மஹத். என்னடா இது கேர்ள் பெஸ்டிக்கு வந்த சோதனை!

* மஹத், காலையில் எழுந்ததும் பாத்ரூம் ஏரியாவில் இருந்த கேமராவிடம் தனது குடும்பத்திடமும், காதலியிடமும் பேசிக்கொண்டிருந்தார். `நான் நல்லா இருக்கேன். நீங்க எல்லோரும் நல்லா இருக்கீங்களா... உங்க எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரம் வந்திடுறேன்' என்று கண்ணீர் விடாத குறையாக கேமரா முன் நின்று பாசத்தில் உருகிக்கொண்டிருந்தார். பிறகுதான் தெரிந்தது, எல்லாம் யாஷிகாவுக்காக நடத்தப்பட்ட அரங்கேற்றம் என்று. மஹத் அருகில் நின்றுதான் யாஷிகா பல் துலக்கிக்கொண்டிருந்தார். அவரிடம் சொல்லும் சாக்கில், யாஷிக்காவுக்கான மெசேஜா மஹத் ப்ரோ. நல்லா இருக்கு உங்க வியூகம்!

எப்படியோ பிக் பாஸ் வீட்டில் ஒரு கொலை விழுவதற்குள் டாஸ்க்கை முடித்துவைத்துவிட்டார், பிக் பாஸ். வார இறுதியும் நெருங்கிவிட்டது. `எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான்' என்பதுபோல் எல்லாத்தையும் இனிமேல் ஆண்டவர் பார்த்துக்குவார் என்று பிக் பாஸும் அமைதியாக இருப்பார். மீதியுள்ள இரண்டு நாள்களும் ஏதாவது மைல்டான டாஸ்க் கொடுக்கப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு