Published:Updated:

மஹத்தை `யூஸ்' செய்யும் ஐஸ்வர்யா, யாஷிகா! #BiggBossTamil2

மஹத்தை `யூஸ்' செய்யும் ஐஸ்வர்யா, யாஷிகா! #BiggBossTamil2

தாங்கள் வில்லன்களாக மாறியபோது, `அவங்க பண்ண பிச்சைக்காரத்தனத்தையெல்லாம் நம்ம பண்ண வேண்டாம்” என்று பாலாஜி கூறியது பெருந்தன்மையின் ஒரு வடிவம்தான்.

மஹத்தை `யூஸ்' செய்யும் ஐஸ்வர்யா, யாஷிகா! #BiggBossTamil2

தாங்கள் வில்லன்களாக மாறியபோது, `அவங்க பண்ண பிச்சைக்காரத்தனத்தையெல்லாம் நம்ம பண்ண வேண்டாம்” என்று பாலாஜி கூறியது பெருந்தன்மையின் ஒரு வடிவம்தான்.

Published:Updated:
மஹத்தை `யூஸ்' செய்யும் ஐஸ்வர்யா, யாஷிகா! #BiggBossTamil2

‘இன்னிக்கு மேலே இருக்கறவன் நாளைக்குக் கீழே போவான். கீழே இருக்கிறவன் மேலே வருவான். வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்று விஜய் சொன்ன அதே தத்துவத்தையே பிக்பாஸ்ஸூம் இந்த உலகத்துக்குச் சொல்ல நினைக்கிறார் போலிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே ஹீரோ, வில்லன் அணியை மாற்றியமைத்தார். ஆனால், ஹீரோவாகக் கழுவி நடுவீ்ட்டில் அமர்த்தினாலும் வில்லனாகத்தான் இருப்பேன் என்பது மஹத்தின் பிடிவாதம். எனவே, இன்றும் அவரது அலப்பறைகள் தொடர்ந்தன. அவருக்கு ‘விஸ்வரூபம்’ கமலின் பாத்திரம் தரப்பட்டது, கமலின் ஆசி மஹத்துக்கு இருக்கிறது என்பதற்கான குறியீடோ என்னவோ!. 

என்னதான் மஹத்தைத் திட்டித் தீர்த்தாலும் அவரால்தான் TRP உயர்கிறது என்பதும், அதனால்தான் நாம் சுவாரஸ்யமாகப் பார்க்கிறோம் என்பதும் யதார்த்தம். பார்வையாளர்கள் அவரை வெளியேற்ற நினைத்தாலும்கூட, பிக்பாஸின் சம்மதமின்றி அது சாத்தியமல்ல என்று தோன்றுகிறது. ‘மனிதன் பாதி, மிருகம் பாதி’யாக இருந்தால்தான் பிக்பாஸ் வீட்டில் பிழைக்க முடியும். 

என்னதான் டேனி ஆகாதவராக இருந்தாலும்கூட அவர் மீது உடல் வன்முறை நிகழ்த்தப்படும்போது பதறும் பாலாஜி பாராட்டுக்குரியவராக இருக்கிறார். இதைப் போலவே மஹத்தால் தூக்கி வீசப்பட்ட எதிரணி யாஷிகாவின் மீதும் அவர் கரிசனம் காட்டியது நன்று. ‘மஹத்துக்கு, தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதே புரியவில்லை. வெளில போனாத்தான் தெரியும். மும்தாஜ் வேற அடிக்கடி ‘வீடியோ பார்த்தா தெரியும்’ங்கிறாங்க.. என்ன நடக்கப் போகுதோ” என்று அவர் எச்சரிப்பது மஹத்தின் மீதும் உள்ள கரிசனத்தில்தான் என்பதைப் புரிந்துகொள்ளும் நிலைமையில் மஹத் இல்லை என்று தோன்றுகிறது. 

தாங்கள் வில்லன்களாக மாறியபோது, ‘அவங்க பண்ண பிச்சைக்காரத்தனத்தையெல்லாம் நம்ம பண்ண வேண்டாம்” என்று பாலாஜி கூறியது பெருந்தன்மையின் ஒரு வடிவம்தான். யாஷிகாவிடமும் இது குறித்து எச்சரிக்கலாம் என்று பாலாஜி கூறியபோது ‘அவங்க செய்யுறதைச் செய்யட்டும். அப்போதான் ஒவ்வொருத்தரோட தன்மை வெளிப்படும். நான் எதுவும் பண்ணப்போறதில்லை. இங்க வந்தவுடனேயே முடிவு பண்ணிட்டேன். பிக்பாஸ்ல தோக்கறது முக்கியமில்ல. வாழ்க்கைல ஜெயிக்கணும்’ என்று டேனி கூறியது அருமையான அபிப்ராயம். 

மருத்துவர் ஹெலனாவைக் காப்பாற்றும் டாஸ்க்கில், நான்கு சாவிகள் மட்டும் முடிந்த நிலையில் அதைத் தற்காலிகமாக நிறுத்திய பிக்பாஸ், முன்னாள் வில்லன்களை ஹீரோக்களாக மாற்றினார். கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து வெடிகுண்டுகளை அழித்து உலகத்தைக் காப்பாற்றும் பொறுப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்காக மஹத்துக்கு `விஸ்வரூபம்-1' படத்தின் நடன ஆசிரியர் ‘விஸ்வநாத்’ வேடமாம். பெண்மைத்தனமான பாத்திரத்துக்குள் மறைந்துகொண்டு தகுந்த நேரத்தில் வீரத்தை வெளிப்படுத்துவதுதான் அந்த வேடம். ஆனால், ஏற்கெனவே வில்லனாக ஃபார்ம் ஆகிவிட்ட மஹத்துக்கு இதைத் தந்திருப்பது காமெடி. ஜனனி ‘ஜெனிலியா’வாம். இந்த மாதிரி கேரக்டர்களையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படி வெடிகுண்டை அழிப்பது. ‘வெடிகுண்டு என் தலைல பட்டுடுச்சு. நான் திருப்பிப்போய் அது மேல முட்டினாதான் என் தலைல கொம்பு முளைக்காம இருக்கும்” என்றெல்லாம் ‘ஜெனிலியா’ உளறினாலும் ஆச்சர்யமில்லை.

சென்றாயனுக்கு என்ன வேடம் என்றே தெரியவில்லை. பழைய ஜெகன்மோகினி படத்தில் வரும் பேய் மாதிரி உலவிக்கொண்டிருந்தார். ரித்விகாவுக்கு 'பருத்திவீரன்' பிரியாமணி வேடம். 

‘வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கறது” என்று கமல் எழுதிய வசனம் உண்மையாயிற்று. ‘அடிச்சுடுவானோன்னு பயமாயிருந்தது’ என்று மஹத் குறித்து பொது சபையில் வெள்ளந்தியாக முன்பு டேனி ஒப்புக்கொண்டது தவறு என்பதை இப்போது உணர முடிகிறது.  “டேனி உன்கிட்ட வரவே இல்லை பார்த்தியா” என்று ரித்விகா கேட்டதும், “அவன் ஒரு தொடை நடுங்கி. பார்க்கதான் அப்படி இருக்கான்” என்று தன் உடல் பலத்தைக்கொண்டு பெருமிதப்பட்டுக்கொண்டார், மஹத். இந்த லட்சணத்தில் இவர் மார்ஷல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றிருக்கிறாராம். ‘தற்காப்பும்’, ‘ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதுதான்’ சாகசக்கலைகளின் அடிப்படையான விஷயம். முண்டாவை முறுக்கிக்கொண்டு எல்லோரிடமும் வம்புக்குச் செல்வதல்ல.

``நான் என் கேரக்டரைத்தானே பண்ணிட்டிருக்கேன். உண்மையாத்தானே இருக்கேன்’ என்றாலும் மஹத்தின் செய்கைகள் அவருக்கே குற்றவுணர்ச்சியையும் பயத்தையும் தருகிறது. ஏறத்தாழ டாஸ்க் முடியும்போது ‘நீ ரூல்ஸ் புக்கை ஒரு முறை படியேன்’ என்று தடுமாற்றத்துடன் ஜனனியிடம் கேட்டுக்கொண்டது ஓர் உதாரணம். எதிரணியைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தள்ளுமுள்ளு ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், அந்தச் சமயத்தில் மிகுந்த ஆவேசத்துடன் ஒரு விலங்கு போலவே மஹத் ஆகிவிடுவது முறையானதல்ல. உரிமையோடு யாஷிகாவை பிடித்து மூர்க்கமாக தள்ளியதும், சாவியைப் பிடுங்குவதற்காக டேனியை ஆவேசமாக தள்ளிவிட்டதும் நிச்சயம் உடல் வன்முறைதான். செய்கிற அக்கிரமங்களையெல்லாம் செய்துவிட்டு ‘நான் என்ன பண்ணினேன்’ என்று மழுப்பலாக பேசுவது சரியானதல்ல. 

இந்த டாஸ்க்கில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா செய்வது ஒருவகையில் துரோகம். தங்கள் அணி பேசிக்கொள்வதையெல்லாம் எதிரணியில் உள்ள மஹத்திடம்போய் சொல்வதும் ‘நீ வில்லன் கேரக்டர்தானே, என் மேல குப்பை கொட்டு’ என்று மஹத்திற்கு ஐடியா தருவதும் அழுகிணி ஆட்டம். யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தன் மீது ஷாம்பு உள்ளிட்டவைகளை ஊற்றியதால்தான் மஹத் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். இதையே டேனியோ அல்லது மும்தாஜோ செய்திருந்தால் கலவரமே நடந்திருக்கும். 

இந்த வகையில் இந்த டாஸ்க்கை இவர்கள் ஜாக்கிரதையாக விளையாடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மஹத் அணி வில்லனாக இருந்த போது டேனி, மஹத்திடம் அதிகம் நெருங்கவில்லை. யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை முன்னிறுத்தினார். வேறு வழியில்லாத சூழலில் தள்ளுமுள்ளுவில் மட்டும் ஈடுபட்டார். போலவே தாங்கள் வில்லன்களாக இருந்த போதும் டேனி, மஹத்தை நெருங்கவில்லை. இதைப்போலவே வில்லனாக இருந்தபோதும் டேனி, மும்தாஜ் மற்றும் பாலாஜியை மஹத் நெருங்கவில்லை. இவர்களுக்கு எளிய டார்க்கெட்டுக்களாக சென்றாயன், ஜனனி, ரித்விகா ஆகியோர் இருந்தார்கள். கண் எரிச்சல் ஏற்படும் வகையில் ரித்விகாவின் தலையில் காரக்குழம்பை ஊற்றினார் ஐஸ்வர்யா. அவருடைய கெஞ்சலை மீறியும் சென்றாயனின் ஆடைகள் நீச்சல்குளத்தில் எறியப்பட்டு அவரும் தள்ளிவிடப்பட்டார். ‘நாங்களும் ரவுடிதான்’ என்கிற கணக்கு காட்டுவதற்காக செய்யப்பட்ட காரியங்கள் இவை. 

டாஸ்க் இல்லாத சமயங்களில்கூட முண்டாவை முறுக்கிக்கொண்டு திரியும் மஹத்தை, நாணிக் கோணி ‘விஸ்வநாத்தாக’ அமர வைத்தது ஒரு வகையில் பிக்பாஸின் சுவாரசியமான குறும்புகளுள் ஒன்று. மஹத்தின் வன்முறை உடல் சார்ந்து இருக்கிறது என்றால் மும்தாஜின் பழிவாங்கல்கள், மனதின் மீது நுட்பமாக ஊசி குத்துவதாக இருந்தது. 

சுஹாசினி இயக்கிய ‘இந்திரா’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். நடந்து முடிந்த தேர்தலில் ராதாரவி தோற்றுவிடுவார். எனவே எதிர்தரப்பை பழிவாங்குவதற்காக தன்னுடைய ஆளையே ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்வார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அந்த நபரிடம் “ஏண்டா.. உன் பொண்ணை அந்த ஜாதிக்காரப்பய தள்ளிட்டுப் போயிட்டான். வெட்கமே இல்லாம உக்காந்து சாப்பிட்டுட்டு இருக்க” என்று குத்த வேண்டிய இடத்தில் சரியாக குத்தியவுடன், முகம் மாறும் அந்த நபர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஆவேசமாக கிளம்பிச் செல்வார். 

தன் மீது மஹத் நிகழ்த்திய வசைகள், சீண்டல்கள் ஆகியவற்றிற்கு மும்தாஜ் நிகழ்த்திய எதிர்வினை இந்த வகையில் இருந்தது. நாணிக் கோணிக் கொண்டிருந்த மஹத்தை நோக்கி ‘ஏன் இவரு கேர்ளா மாறிட்டாரா?” என்பதில் துவங்கி, “யாஷிகா.. உன்னை மஹத் டைம்பாஸா உபயோகப்படுத்திக்கிட்டார்” என்பதுவரை சொல்லி மஹத்தை ஆழமாக சீண்ட முயன்றார். சென்றாயன் பலவீனமான நபர் என்பதால் அவரிடமிருந்த சாவியை மஹத் வாங்கிக்கொண்டார். இதையும் கிண்டலடித்த மும்தாஜ், ‘ஏன் உங்களுக்கு வீரம் இல்லையா? ஏன் அவர் கிட்ட கொடுத்து வெச்சிருக்கீங்க?” என்று கேட்டவுடன், ஏற்கெனவே இந்த விஷயங்களில் தாழ்வுணர்வுடன் இருக்கும் சென்றாயன், பதில் சொல்ல முடியாமல் கிளம்பிவிட்டார். 

“எனக்கு உடல் சார்ந்த வன்முறைகளில் நம்பிக்கையில்லை. செய்யவும் விருப்பமில்லை’ என்னும் மும்தாஜின் பழிவாங்கல், இப்படி நுட்பமாக இருக்கிறது. “இனிமேல் மஹத்திடம் பாசமாக இருக்க மாட்டேன்’ என்கிற வாக்குமூலத்தையும் பாலாஜியிடமிருந்து வரவழைத்தார் மும்தாஜ். அதே சமயத்தில், ரித்விகா, ஜனனி ஆகியோர் மீது காரக்குழம்பு, எண்ணைய் போன்றவை ஊற்றப்பட்ட போது எதிரணியில் இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதில் முன்னால் நின்றார் மும்தாஜ். இவரின் இந்த நுட்பமான எதிர்வினைகளுக்கு மஹத்தின் கோபமும் வன்மமும்தான் காரணமாக இருந்தது என்பது வெளிப்படை. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு இந்த ஆட்டத்தை திறமையாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். டாஸ்க்கின் போது ஒரே அணியில் இருந்தாலும் சரி, எதிரெதிர் அணியில் இருந்தாலும் சரி தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு சில விஷயங்களை சாதிக்கிறார்கள். தள்ளுமுள்ளு, தலையில் எதையாவது ஊற்றுதல் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவும் இவர்கள் தயங்குவதில்லை. போலவே, மற்றவர்கள் மீது ஊற்றுவதற்கும் தயங்குவதில்லை. சமயத்தில் மஹத் என்கிற பொம்மையையும் இவர்கள் சரியான ஆயுதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களைக்கூட டாஸ்க்கிற்காக பயன்படுத்திக்கொள்ள யாஷிகா தயங்குவதில்லை. ‘என் பெர்ஸனல் விஷயத்தையெல்லாம் டாஸ்க்கில் ஐஸ்வர்யா சொன்னா” என்று ஜனனி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். தன்னுடைய அந்தரங்க காரணங்கள் பொதுவில் பேசப்பட்ட போது ‘சர்வாதிகாரியாக’ மாறி ருத்ரதாண்டவர் ஆடிய ஐஸ்வர்யா, அதே விஷயத்தை எதிர் நபருக்கு தருவது சரியானதல்ல. 

புறத் தோற்றத்தினால் அல்ல, அகம் சார்ந்த நல்லியல்புகளால்தான் ஒருவர் மிக அழகாக தோற்றமளிக்க முடியும் என்பதற்கான உதாரணம், முந்தைய சீஸன் ஓவியா. இந்த அளவுகோலில் ஐஸ்வர்யாவின் கேரக்டர் பல சமயங்களில் கீழிறங்கிவிடுகிறது. 

‘வைல்ட் கார்ட் எண்ட்ரியாக’ புதிய நபர் எவராவது இந்தப் போட்டியில் வர மாட்டார்களா என்று நாம் ஏங்கியது உண்மைதான். ஆனால் ‘சென்னை-28’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த விஜயலட்சுமி, புதிய வரவாக எந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்துவார் என்பது சந்தேகமாக உள்ளது. மேலும் இவர் மஹத்தின் நண்பர் வேறு. 

மன்சூர் அலிகான், நாஞ்சில் சம்பத், கவுண்டமணி, சிம்பு போன்ற பெரிய மீன்களை இந்த நிகழ்ச்சிக்கு இழுத்து வந்தால் அது சுவாரசியம். ஆனால் இந்த சீஸன் லோ –பட்ஜெட்டில் இயங்குகிறது போல.  

***

இதே 67-ம் நாளில், முதல் சீஸனில் என்ன நடந்தது? 

ஹரீஷிற்கும் பிந்து மாதவிக்கும் ஏறத்தாழ கல்யாணமே நடந்து முடிந்து விட்டது. பெண் பார்த்தல் படலம், நிச்சயதார்த்த வைபவமெல்லாம் சிறப்பாக நடந்தது. ‘பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா? என்பதை மாமனார் வையாபுரி  சோதிக்க விரும்பியதால், உணவு மாதிரி தென்படக்கூடிய சில வஸ்துகளை பிந்து மாதவி தயார் செய்தார். “திரும்பி வந்த ஜூலி பழைய ஜூலியாக இல்லையே” என்று சிநேகன் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். ‘சமூக வலைத்தளங்களில் தன் மீது வைக்கப்பட்ட வசைகள், காரமான விமர்சனங்கள் போன்வற்றின் மீதான வருத்தங்களை ஜூலி, காஜலிடம் பகிர்ந்து கொண்டார்.