Published:Updated:

``பிக்பாஸ் மேடைல சென்றாயன்னு சொன்னப்போ, யாரும் கைதட்டலை. அதான் வெற்றி!" - `மூடர்கூடம்' நவீன்

``பிக்பாஸ் மேடைல சென்றாயன்னு சொன்னப்போ, யாரும் கைதட்டலை. அதான் வெற்றி!" - `மூடர்கூடம்' நவீன்

பிக்பாஸ் சென்றாயனைப் பற்றிப் பேசுகிறார், `மூடர்கூடம்' இயக்குநர் நவீன்.

``பிக்பாஸ் மேடைல சென்றாயன்னு சொன்னப்போ, யாரும் கைதட்டலை. அதான் வெற்றி!" - `மூடர்கூடம்' நவீன்

பிக்பாஸ் சென்றாயனைப் பற்றிப் பேசுகிறார், `மூடர்கூடம்' இயக்குநர் நவீன்.

Published:Updated:
``பிக்பாஸ் மேடைல சென்றாயன்னு சொன்னப்போ, யாரும் கைதட்டலை. அதான் வெற்றி!" - `மூடர்கூடம்' நவீன்

பிக்பாஸ் நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆண் போட்டியாளர்களில் பாலாஜி மட்டும்தான் உள்ளே இருக்கிறார். கடந்த வார எலிமினேஷனில் சென்றாயன் வெளியேறியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எலிமினேஷன் அட்டையில் அவரது பெயரை வெளியே எடுத்துக் காட்டியபோது, ஒருவர்கூட கைதட்டாதது அவருடைய நன்மதிப்பை எடுத்துச் சொன்னது. 

சென்றாயன் என்பவர் பரவலாக எப்படிப் பேசப்பட்டார். `அவர் வெள்ளந்தியான ஆளு. பிக்பாஸ் வீட்டுக்கு யார் வந்தாலும், தன்னுடைய வீட்டுக்கு வந்தவர்களைப்போல வரவேற்பார். ரொம்பப் பாவமான ஆள்' என்ற நற்பெயர் இவருக்கு உண்டு. அனைவரையும் மரியாதையோடு அழைப்பது, செல்லம், தங்கம் என்று உரிமையாகப் பேசுவது, தெரியுமோ தெரியாதோ அனைத்து டாஸ்க்குகளிலும் கலந்துகொள்வது, சமையல் செய்வது... எனத் தொடர்ந்து தன்னை யார் என்பதை மக்கள் முன் அரங்கேற்றிக்கொண்டேதான் இருந்தார். சென்றாயனின் எலிமினேஷன் குறித்து, பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'மூடர்கூடம்' படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டிருந்தார். முதல் சீசனில் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசபட்டு வந்த ஓவியாவும், இந்த சீசனில் விளையாடிய சென்றாயனும், நவீன் இயக்கிய `மூடர்கூடம்' படத்தில் நடித்தவர்கள். இது குறித்து, இயக்குநர் நவீனிடமே பேசினேன்.

`அதாவது தலைவா...' என்றபடி பேசத் தொடங்கினார். `` `பிக்பாஸ்' நிகழ்ச்சியை மூடர்கூடம்னு தவறான அர்த்தத்துல சொல்லலை. நான் ஒட்டுமொத்த உலகத்தையுமே மூடர்கூடம்னுதான் சொல்றேன். ஏன்னா வாழ்க்கை, நமக்கு தினமும் எதையாவதை சொல்லிக்கொடுத்துக்கிட்டேதான் இருக்கும். அதேசமயம், நாம யாரையும் அவ்வளோ சுலபமா புரிஞ்சுக்க முடியாது. அப்படியே புரிஞ்சிகிட்டோம்னு நினைச்சா, நாமதான் முட்டாள். ஏற்கெனவே பிக்பாஸ் பார்த்துட்டோம், அதைப் பத்தி எல்லாம் தெரியும்னு நினைச்சு உள்ளே வந்தாலும், எப்போவுமே அந்த நினைப்போட இருக்க முடியாது. ஏதாவது ஒரு சமயத்துல உண்மையான நாம வெளியில வரத்தான் செய்வோம். அந்த வகையில, பிக்பாஸ் வீடு ஒரு மூடர்கூடம்தான். அந்தக் கணக்குலதான் நான் அந்த ட்வீட் போட்டிருந்தேன். இப்போ கிரிக்கெட்டை எடுத்துக்கிட்டா அதுக்குனு விதிமுறைகள் இருக்கு, அதுக்கு உட்பட்டுதான் நாம விளையாடுறோம். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி கேம் ஷோ. அதோட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் எல்லோரும் விளையாடுறாங்க. அதனால, முடிவு என்ன வருதோ அதை ஏத்துக்கதான் செய்யணும். முதல்ல இந்த கேமை எதுக்கு விளையாடுறாங்க? நம்முடைய கரியரை டெவெலப் பண்றதுக்கும், மக்கள்கிட்ட நாம யாருனு காட்டுறதுக்கும்தான்!. முதல்ல சொன்ன விஷயம், வெளியில வந்தாதான் நடக்கும். ரெண்டாவதா சொன்ன விஷயம், உள்ள இருந்தேதான் நிரூபிக்க முடியும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிக்பாஸ் முதல் சீசனைப் பொறுத்தவரைக்கும், ஓவியா அந்த கேமை முழுமையா விளையாடி முடிக்கலை. ஆனா, மக்கள் மனசுல நிற்கிற முதல் வெற்றியாளர், ஓவியாதான். இன்னும் சொல்லப்போனா, அவங்கதான் ஆக்‌சுவல் வின்னர். அவங்களுக்குக் கிடைச்ச நன்மதிப்பு, 25 சதவிகிதம்கூட மற்ற போட்டியாளர்களுக்குக் கிடைக்கலை. அதேமாதிரி பிக்பாஸ் ரெண்டாவது சீசனுடைய ஆக்‌சுவல் வின்னர், சென்றாயன்தான். உள்ளே இருக்கிற மற்ற போட்டியாளர்களுக்கு பாசிடிவ் கமென்ட்ஸும் இருக்கு, நெகட்டிவ் கமென்ட்ஸும் இருக்கு. ஆனா, சென்றாயனுக்கு அப்படி இருதரப்பு விமர்சனமே கிடையாது. எலிமினேஷன்ல அவனுடைய பெயரை சொன்னப்போ, மக்கள் கை தட்டாதப்போவே தெரிஞ்சிருக்கும், உண்மையான வெற்றியாளன் யாருன்னு!. எனக்கு அவன் வெளியில வந்ததுதான் நல்லதுனு தோணுது. ஒரு நல்ல பெயரோடதான் தம்பி வெளியில வந்திருக்கான். சென்றாயன், பிக்பாஸுக்குத்தான் நன்றி சொல்லணும். எனக்கு ரெண்டு சீசனையும் நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மக்களுக்குத் தெரியிறதுக்கு முன்னாடி, எனக்கு ஓவியாவையும் தெரியும், சென்றாயனையும் தெரியும். அந்த வகையில எனக்கு சந்தோஷம்." என்கிறார், இயக்குநர் நவீன். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism