Published:Updated:

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2
ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2

அடிப்பிரதட்சணம் என்பது நம் ஆன்மபலத்தையும் மனஉறுதியையும் நாமே பரிசோதனைக்கு உள்ளாக்கிக் கொள்ளும் ஒரு பயிற்சி. துயரங்களிலிருந்து வெளியேறும் உறுதியை எடுத்துக்கொண்டு எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இறைவனை நோக்கி எடுத்து வைப்பதாகும். கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவதற்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது. நம் பிரக்ஞையின் மீதான தூண்டுதலைக் குவிக்கிற விஷயத்தையும் இந்த வேண்டுதல் அல்லது பயிற்சி செய்கிறது. 

இப்படியெல்லாம் அடிப்பிரதட்சணம் பற்றி ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை’ குரூப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டைப் பொறுத்தவரை அவர்தான் இறைவன். கடவுள் கண்ணில் தெரிவதில்லை என்பது போல பிக்பாஸை விண்டவர் கண்டிலர். இறைவன் மனது வைத்தால்தான் வார இறுதியில் ஆண்டவரே வருகிறார்.

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2அவரை நோக்கி ஒவ்வோர் அடியாக எடுத்து வைக்கும் ‘அடிப்பிரதட்சண டாஸ்க்’ நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருந்தது. பஸ்ஸர் அடித்ததும் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தண்ணீர் அளவு சோதித்துப் பார்க்கப்பட்டது. ‘இதை விட இதுல 0.0005 மில்லி லிட்டர் நீர் குறைவாக இருக்கிறது’ என்று விஞ்ஞானிகளுக்குச் சவால் விடுவது போல சீனியர்கள் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். இந்த ஒப்பீட்டில் விஜயலஷ்மியின் குடுவையில் இருந்த நீர் குறைவாக இருந்ததால் அவர் போட்டியிலிருந்து விலகினார்.

ஆக மீதமிருப்பவர்கள் யாஷிகாவும் ஜனனியும் மட்டுமே. ‘விட்டுடாதீங்க. இதான் உங்க கனவு லட்சியம். இது ஃபைனல்-னு நெனச்சிக்கங்க” என்றெல்லாம் உறக்கத்தை தியாகம் செய்து சீனியர்கள் அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்கள். சோர்வினால் யாஷிகா வாந்தி வருவது போன்ற பாவனைக்கு ஆளாகிக்கொண்டிருந்தார். ‘இதுலயே வாந்தியெடுத்து தண்ணி லெவல் அதிகமாயிடுச்சுன்னா என்ன பண்றது?” என்கிற உலகமகா டவுட் வேறு அவருக்கு வந்தது. யாஷிகாவின் தவிப்பை, ஐஸ்வர்யா டென்ஷனுடன் பார்த்துக்கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கைவலியைச் சமாளிக்க முடியாமல் ஜனனியின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. 

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2மறுநாள் விடிந்து காலை 07:45 மணி வரை சமாளிக்க முடியாமல் சமாளித்துக்கொண்டு இருவரும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். எப்போது வேண்டுமானாலும் அவர்களின் கைகளில் இருக்கும் குடுவை தவறி விழலாம் என்கிற பதற்றம் அவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்குமே ஏற்பட்டது. ஒரு வழியாக பஸ்ஸர் அடிக்கப்பட்டவுடன் போட்டி நிறுத்தப்பட்டது. “போங்கடா.. டேய்’’ என்பது மாதிரியான சோர்வுடன் இருவரும் சென்று புல்தரையில் படுத்துக்கொண்டார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். 

பரிசோதனை வல்லுநர்கள் தங்களின் சோதனையை இன்னமும் துல்லியமாகத் தர வேண்டும் என்று கூர்ந்து கூர்ந்து பார்த்ததில் இரண்டு குடுவை நீர் அளவும் ஒரே அளவில் இருந்ததைக் கண்டுபிடித்தார்கள். இரண்டு போட்டியாளர்களுமே ஓர் இரவு முழுக்க கஷ்டப்பட்டு சம அளவில் தங்களின் உழைப்பைத் தந்திருக்கும் போது அந்த முடிவில் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்கிற ஜாக்கிரதை அவர்களுக்கு இருந்தது பாராட்டுக்குரிய விஷயம். எனவே இந்த விஷயத்தை பிக்பாஸிடம் எடுத்துச் சென்றார்கள். 

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2ஆரவ்வை வாக்குமூல அறைக்குக் கூப்பிட்ட பிக்பாஸ், “பஸ்ஸர் அடித்ததும் மறுபடியும் போட்டி தொடங்கட்டும். இம்முறை குடுவையை ஒரு கையால்தான் பிடிக்க வேண்டும். கையை மாற்றக் கூடாது. உடம்போடு இணைத்துப் பிடிக்கக் கூடாது” என்று விதிகளை இன்னமும் கடுமையாக்கினார். ஒருபக்கம் இது கொடூரம்தான் என்றாலும் போட்டி சீக்கிரம் முடியும் என்கிற வகையில் நல்லதுதான். 

“ஆள விடுங்கடா சாமி” என்று படுக்கையறையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவர்களிடம் சென்று பிக்பாஸின் புதிய விதிகளைக் கூறினார் ஆரவ். வேறு வழியின்றி இருவரும் எழுந்து வந்து போட்டியைத் தொடர்ந்தனர். இருவராலுமே சமாளிக்க முடியாத நிலைமை. பதற்றமான சூழல். இதில் ஜனனியின் நிலைமை மோசமாக இருந்தது. அத்தனை சோர்வுக்குப் பிறகு ஒற்றைக் கையால் குடுவையைத் தாங்க முடியாமல் மிகவும் தடுமாறினார். (முந்தைய நேரங்களில் அவர் குடுவையை உடம்போடு அணைத்து வைத்துக்கொண்டு சமாளித்திருந்தார்). ஒரு கட்டத்தில் குடுவை சாய்ந்து அதில் இருந்த பெரும்பாலான சதவிகிதத நீர் கீழே கொட்டியது. 

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2நிலைமை இப்போது யாஷிகாவுக்குச் சாதகமாக இருந்தது. ஏனெனில் அவருடைய குடுவை நீரின் அளவு அதிகம். பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்தால் அவர்தான் வெற்றியாளர். நிலைமை அப்படித்தான் போகும் என்கிற சூழலில் அதிர்ஷ்டக் காற்று திசை திரும்பியது. பெரிதும் சோர்ந்திருந்த யாஷிகாவால் கை வலியைச் சமாளிக்க முடியவில்லை. மிக முயன்றும் சமாளிக்க முடியாமல் போனதில் குடுவை கீழே விழுந்து சிதறியது. கூடவே யாஷிகாவின் விருப்பமும். இருவருமே ஏறத்தாழ சம உழைப்பைச் செய்திருந்தாலும் அதிர்ஷ்டம் ஜனனியின் பக்கம் இருந்தது. 

இந்த டாஸ்க்கின் மூலம் மனவுறுதியும் மனம் செய்யும் விந்தைகளையும் அறிய முடிந்தது. ‘உடல்பலம் சார்ந்த டாஸ்க்குகளில் சிறப்பாக இயங்க முடியாதவர்’ என்கிற தொடர்ச்சியான குற்றச்சாட்டு ஜனனியின் மீது ஏற்கெனவே இருக்கிறது. ஆனால் மனபலத்தோடு உடல்பலத்தையும் இணைத்துக் கோரும் இந்த விளையாட்டில் ஜனனி வென்றதின் மூலம் மனபலமே முக்கியம் என்கிற செய்தியைச் சுட்டிக் காட்டியது. இருவருமே ஒரே மாதிரியாக கஷ்டப்பட்டிருந்தாலும் வெற்றிக்குப் பிறகு அத்தனை சோர்வும் காணாமல் போய் படு உற்சாகமானார் ஜனனி. ஆனால் மனதளவில் சோர்ந்து போன யாஷிகா தளர்ந்து போய் படுக்கையில் விழுந்தார். மதியத்தைத் தாண்டியும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. ‘சாப்பிட்டு படுத்துக்கோ’ என்று அவரைப் பக்கத்திலேயே இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் வேண்டுகோள் அவரது காதில் விழவில்லை. 

மும்தாஜ் இதற்காக பிறகு யாஷிகாவை வற்புறுத்தி எழுப்பும் போது அவர் அரைநினைவில்தான் இருந்தார். பதற்றமான சூழல். பிக்பாஸின் அறிவுறுத்தலின் படி வாக்குமூல அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வெற்றி அல்லது தோல்வி என்கிற விஷயம் மனதளவில் எப்படிப் பாதிப்பை உருவாக்குகிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் நல்ல உதாரணம். வெற்றியோ அல்லது தோல்வியோ அது நம் மனதிடம் செல்வாக்கு செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதே இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடம். 

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2ஹோம் சிக்னெஸ், தன் நெருங்கிய நண்பர்களான ஷாரிக், மஹத், டேனி போன்றவர்களின் விலகல் போன்ற காரணங்கள் யாஷிகாவை மனதளவில் சோர்வடையச் செய்திருக்கலாம். இதனால் அவர் தனிமையுணர்ச்சியை அடைந்திருக்கலாம். கூட இருக்கும் ஐஸ்வர்யா எப்போது ‘ஆங்க்ரி பேர்ட்’ மோடுக்கு செல்வாரோ என்று தெரியவில்லை. மும்தாஜின் அன்பு உண்மையானதா அல்லது இந்த விளையாட்டுக்கான உத்தியா என்பதில் வேறு அவருக்கு நிச்சயமின்மை இருக்கலாம். இத்தனை உணர்ச்சிகளும் இணைந்து அவரைச் சோர்வுறச் செய்திருக்கலாம். பழைய யாஷிகாவாக இருந்தால் இத்தனை எளிதில் விட்டுத் தந்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. ‘யாஷிகா வலிமையான போட்டியாளராச்சே.. எப்படித் தோற்றார்?” என்பது மாதிரி சீனியர்கள் பேசிக் கொண்டனர். 

தனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி சொன்னார் ஜனனி. அவர் முதலில் ஓடிச்சென்று கட்டிப்பிடித்தது யாஷிகாவைத்தான். இந்த டாஸ்க்கில் இருந்த உச்சபட்ச சிரமம் இருவருக்குத்தான் அதிகம் தெரியும். பிறகு ரித்விகாவை இறுக அணைத்துக் கொண்டு கலங்கினார். ‘யாஷிகா ஃபைனல்ல வந்தா நீதான் அவளுக்கு டஃப் பைட் தரணும்” என்பது போல் ரித்விகா முன்னர் சொன்ன வசனம் நினைவுக்கு வந்தது. ஆக.. இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதியான முதல் போட்டியாளர் ஜனனி. 

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2‘பள்ளியெழுச்சிப் பாடல்’ ஜனனிக்குப் பொருத்தமாக ஒலித்தது. “பூமி என்னைச் சுத்துதே.. டேமேஜ் ஆன பீசு நானு, ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்…” என்ற பாடல் வரிகள் ஒருவகையில் ஜனனியைக் கலாய்ப்பது போல் இருந்தாலும் சூழலுக்குப் பொருத்தமானது. ஜனனி இந்த டாஸ்க்கில் ஜெயிப்பார் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வழக்கமாக காலையில் உற்சாக நடனம் ஆடும் ஐஸ்வர்யா, இவர்களுடன் இணையாமல் சோர்வாகப் படுத்திருந்த யாஷிகாவின் பக்கத்தில் ஆறுதலாக படுத்துக்கொண்டிருந்தார். 

களைத்துப் போயிந்த போட்டியாளர்கள் உறங்கி மதியம் எழுந்ததால் ‘ஹரஹர மகாதேவகி’ பாடலைப் போட்டு உற்சாகப்படுத்தினார் பிக்பாஸ். சோர்வுற்றிருந்த யாஷிகாவைப் பார்த்து ‘இனிமே வர்ற டாஸ்க் எல்லாம் இன்னமும் கஷ்டமா இருக்குமே. இந்தப் பொண்ணு எப்படிச் சமாளிக்கப் போகுதோ?” என்று சீனியர்கள் பேசிக் கொண்டார்கள். 

மக்கள் மிகவும் சிரமப்பட்டு விட்டார்கள் என்பதால் அடுத்த ரவுண்டில் அவர்கள் மேலும் சிரமப்படுத்துவதற்கான முன்தயாரிப்புத் தீனியாக முழு லக்ஸரி பட்ஜெட்டையும் அனுமதித்தார் பிக்பாஸ். சீனியர்கள் சார்பில் 600 புள்ளிகள் கூடுதலாக வழங்கப்பட்டு 2000 புள்ளிகள் வழங்கப்பட்டன. பொருள்களை தேர்வு செய்யும் நேரம் கடந்து விட்டதால் மீதமுள்ள புள்ளிகளுக்கு ‘பிக்பாஸ், தயைகூர்ந்து நூடுல்ஸ் பாக்கெட் தரவும்” என்ற வேண்டுகோளை எழுதி வைத்தார் ஆரத்தி.

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2**

பற்பசை பிராண்டு சார்பில் போட்டியொன்று நடந்தது. ரித்விகா இதன் நடுவர். சீனியர்களும் ஜூனியர்களும் இரண்டு அணிகளாகப் பிரிவார்கள். கழிவறை மற்றும் கார்டன் ஏரியாவில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கார்டுகளை ஒவ்வொன்றாகத் தேடியெடுத்து விளம்பரப் படத்தை உருவாக்க வேண்டும். இதற்காக ஆரவ்வும் விஜியும் போட்டி போட்டார்கள். பூனையால் துரத்தப்படும் எலி மாதிரி விஜயலஷ்மி அங்குமிங்கும் ஓடினாரே தவிர, அதே சமயத்தில் சாத்தியமான இடங்களை சரியாக யூகிப்பதில் சற்று தடுமாறினார். ஆனால் ஆரவ் இவரை விட பரபரப்பாகச் செயல்பட்ட போதும் இடங்களை யூகிப்பதில் வெற்றி பெற்றார். என்ன இருந்தாலும் சீனியர் அல்லவா. அந்த இடமும் அவருக்குப் பழகிய இடம். 

சில பல பரப்பரப்பான காட்சிகளுக்குப் பின்னால் ஒரேயொரு கார்டை எடுத்தால் வெற்றி என்கிற நிலைமை வந்தது. விஜிக்கு இருந்த பதற்றத்தில் குப்பைக்கூடையின் அடியில் இருந்த கார்டை கவனிக்க முடியவில்லை. அதற்குள் ஆரவ் இறுதி கார்டை கண்டுபிடித்து விட, சீனியர்கள் அணி வெற்றி பெற்றது. விஜி தவற விட்ட கார்டை மும்தாஜ் பிடிவாதமாக தேடிக் கண்டுபிடித்து எடுத்து வந்தார். குப்பைக்கூடைக்குள் விஜி பார்த்தாரே ஒழிய, அதன் அடியில் இருக்கலாம் என்று யூகிக்கத் தவறி விட்டார். ‘பேஸ்ட்டோட மூடி மட்டும் வரலை’ என்று டைமிங்காக ஜோக் அடித்தார் பாலாஜி. 

இதற்கிடையில் பாலாஜிக்குப் புடவை கட்டி பெண் வேடமிட்டு அழகு பார்த்தார்கள் பிக்பாஸ் வீட்டு மக்கள். “உங்களைத் தேடி உங்க கேர்ள் ஃப்ரெண்ட் வந்திருக்காங்க” என்று ஆரவ்விடம் ஆர்த்தி கிண்டலடிக்க, பாலாஜி ஆன்ட்டியை வளைத்துப் பிடித்து முத்தமிடுவது போல் பாவனை செய்தார் ஆரவ். ‘மருத்துவ முத்தம் – சீஸன் 2” என்று அந்தக் கொடூரச் சம்பவத்துக்குப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள். 

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2ஒருவரையொருவர் பிறாண்டிக் கொள்ளும் டாஸ்க்குகளுக்குச் சற்று ஓய்வு கொடுத்து விட்டு மகிழ்ச்சியான டாஸ்க்கை தர முடிவு செய்தார் பிக்பாஸ். அதன்படி இரண்டு அணிகளுக்கும் இடையில் நடனமாடும் போட்டி பற்றிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அறுசுவை விருந்தாம். (ஆட்டுக்குத் தழை போடுவது பிரியாணிக்காகத்தானே?!). மக்கள் உற்சாகமாகி கைதட்டி மகிழ்ந்தார்கள். நடனப் பயிற்சிகள் அமர்க்களப்பட்டன. ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்கிற பாடல் சீனியர்களுக்கும், ‘சோகாமா’ பாடல் ஜூனியர்களுக்கும் வழங்கப்பட்டது. காயத்ரி தொழில்முறை பயிற்சியாளர் என்பதால் அந்தப் பாணியில் பயிற்சியளித்தார். எனவே அவரது அணிதான் வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்புக்கு மாறாக, ஜூனியர்கள் அணி கலக்கினார்கள். இவர்களுக்கான பயிற்சியை மும்தாஜ் பெரும்பாலும் அளித்தார். பாலாஜியின் கோணங்கித்தனங்களுக்கு இடையில் இவர்கள் அணி சிறப்பாக ஆடியது. யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி என்று இளம்தலைமுறை நடனம் ஆடுவதைப் பார்ப்பதுதானே அழகும் கூட. 

ஃபைனலில் ஜனனி... அப்போ ஐஸ்வர்யா `எவிக்ட்'-டா?! #BiggBossTamil2‘அப்ப நான் கிளம்பட்டுமா?” என்பது மாதிரியே சமிக்ஞை தந்து கொண்டிருந்த ஆரவ், தன் புதிய திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பை அளித்து ஆச்சர்யப்படுத்தினார். படத்தின் தலைப்பை மற்றவர்களுக்குத் தெரிவிக்க முந்திரிக் கொட்டை மாதிரி துள்ளிக் கொண்டிருந்த காயத்ரியை பிக்பாஸ் அடக்கி உட்கார வைத்தார். சில பல யூகங்களுக்குப் பிறகு படத்தின் தலைப்பு, ‘ராஜபீமா’ என்கிற சஸ்பென்ஸ் உடைந்தது. படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரையும் வெளியிட்டார்கள். ஆரவ்வின் பின்னால் இருப்பதுதான் ஹீரோயின் போல. கமலுக்குப் பிறகு தன் படத்தின் அறிவிப்பை பிக்பாஸ் மேடையில் வெளியிடும் பெருமை ஆரவ்விற்குத்தான் கிடைத்திருக்கிறது. திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

நடனப்போட்டி முடிந்ததும் சைவம், அசைவம் என்று இருந்த உணவு வகைகளைப் பார்த்ததும் மக்கள் உற்சாகமானார்கள். வந்த வேலை முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார், ‘ராஜபீமா’. 

வேறென்ன, நாட்டாமை வரும் நாள். ஐஸ்வர்யா, மும்தாஜ், விஜி மற்றும் ரித்விகா ஆகியோர் எவிக்ஷனுக்காக நாமினேட் ஆகியிருக்கிறார்கள். ஐஸ்வர்யாவுக்குத்தான் கூடுதல் ஆபத்து இருக்கிறது. மக்களும் கொலைவெறியில் இருக்கிறார்கள். கடந்த வார கோபத்துக்கான விளக்கத்தை கமல் இன்று அறிவிப்பாரா என்பதையும் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்களுடைய பார்வையில் யார் இறுதிப்போட்டிக்குச் செல்ல தகுதியான நபர் என நினைக்கிறீர்கள். கமென்ட்டில் உங்கள் கருத்துகளை தெரிவியுங்களேன்.