Published:Updated:

``ஹலோ... யாராவது இருக்கீங்களா... ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு!" - பிக்பாஸ் மார்னிங் மசாலா

தார்மிக் லீ
``ஹலோ... யாராவது இருக்கீங்களா... ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு!" - பிக்பாஸ் மார்னிங் மசாலா
``ஹலோ... யாராவது இருக்கீங்களா... ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு!" - பிக்பாஸ் மார்னிங் மசாலா

பிக்பாஸ் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது?!

நேற்று மும்தாஜ் பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேறியது எதிர்பார்த்ததே. அந்த நேரத்தில் அவர் சொன்ன அனைத்து வசனங்களையும் பொன்மொழிகளாகப் பொறிக்கலாம். அந்தளவுக்கு கருத்துகளை அள்ளித் தெளித்துவிட்டுப் போனார். கடைசியாக, பெண்களுக்கு என்னுடைய ஒரே ஒரு அட்வைஸ், `When you say no, Stick to no' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றதுதான் ஹைலைட். அரங்கமே, ஆடியன்ஸின் அப்லாஸால் அலறியது. சரி, இதைத் தொடர்ந்து பிக்பாஸ் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது?!

* `கடந்த முறை ஃபைனலில் பெண் போட்டியாளர்கள் யாருமே இல்லை' என்ற குறையை `சீஸன் 2'வில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் தீர்த்து வைத்துவிட்டனர். இந்தமுறை, பெண் போட்டியாளர்கள் 5 பேருடன், ஆண் போட்டியாளர்களில் பாலாஜி மட்டுமே இருக்கிறார். பாலாஜியும் மக்களின் குட் புக்கில் இல்லாத காரணத்தினால், எப்போது வேண்டுமானாலும் எலிமினேட் ஆகலாம். வரும் வாரம் இருவர் எலிமினேஷன் என்று வேறு புது உருட்டாக உருட்டியிருக்கிறார், பிக்பாஸ். இனிவரும் வாரங்களில் யார் எலிமினேட் ஆவார்கள் எனக் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு தனித்துவத்தைக் கொண்டவர்கள். வார வாரம் விஷயங்கள் லீக் ஆவதைப்போல ஆனால்தான், `ஓ... இவங்களா?' என்பதை யூகிக்க முடியும். 

* பிக்பாஸ் வீட்டின் இடது பக்கம் ஸ்டால் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில், `Week 14 - Score Board' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வாரத்துக்கான டாஸ்க் இதை வைத்துதான் நகரும்போல. வீட்டில் இருந்த சமையல் நிபுணர்கள் அனைவரும் வெளியேறியதால், பிக்பாஸ் வீட்டில் சமையல் செய்யும் ஆள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ரித்விகாவும், பாலாஜியும் சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தார்கள். மும்தாஜ், தான் வெளியேறும்போதுகூட இதைச் சொல்லிவிட்டுத்தான் சென்றார். அழுதுகொண்டிருந்த ஜனனியிடம், `அப்புறம் ஏண்டி என்னை நாமினேட் பண்ண?' என்று கேட்டது செம கலாய். 

* வீட்டில் ஒவ்வோர் ஆளாகக் குறைந்துவருவதால், குளிர்ச்சி சற்றுத் தூக்கலாக இருக்கிறதுபோல. `ப்ளீஸ் பிக்பாஸ், ஐ எம் பாவம்... வீ ஆர் நார்மல் மனுஷன் ஃப்ரம் இந்தியா' என்ற ரேஞ்சில் ஏ.சியை குறைக்கச் சொல்லி, பிக்பாஸிடம் மன்றாடிக்கொண்டிருந்தனர், போட்டியாளர்கள். தவிர, ஆளாளுக்குக் காதில் பஞ்சு வேறு வைத்துக்கொண்டிருந்ததைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. போட்டியாளர்களுக்கு இனிதான் விளையாட்டு சவாலாக இருக்கும். ஆள்கள் குறையக் குறைய என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்து நிற்பது ஒவ்வொருவரின் செய்கைகளைப் பார்த்தாலே தெரியவருகிறது. கார்டன் ஏரியாவில் உள்ள ஸ்கோர் போர்டில் யாஷிகா 120 பாயின்டிலும், விஜயலட்சுமி 110 பாயின்டிலும் இருந்தனர். எதை வைத்து இந்த ஸ்கோரை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது இன்று இரவுதான் தெரியும். 

* யாஷிகா சேலையை அணிந்துகொண்டு, இதுவரை மேக்அப் போடாமலேயே வீட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார். பாத்திரத்தோடு ஒன்றி, தன்னுடைய தன்னம்பிக்கையையும் இவர் வளர்த்துக்கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயமே. கடைசி வாரம் வரை இவர் இப்படியே நிலைத்திருந்தால், மக்கள் மனதில் நன்மதிப்பைப் பெறுவார். `அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற பழமொழியைப் போல விஜயலட்சுமி ஓர் ஓரமாக உட்கார்ந்து எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார். இவர் கடிந்து பேசுவதற்கு மும்தாஜ் இல்லை என்ற சோகத்தில் இருக்கிறாரோ என்னவோ. அமைதியா இருக்குது... ரொம்ப ரொம்ப அமைதியா இருக்குது... தாங்க முடியல!

முட்டிக்கொள்கிறார்களோ, பாசத்தைப் பொழிந்துகொள்கிறார்களோ... எந்நேரமும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலவெனக் காணப்பட்டு வந்தது. வாரம் முடிய முடிய ஒவ்வோர் ஆளாக வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த சீஸனின் போட்டியாளர்கள் சிலரைக் கூப்பிட, பிக்பாஸ் வீடு ரகளையாகக் காணப்பட்டது. அவர்களும் சென்ற வாரத்தோடு வெளியேறியதால், வீடு வெறிச்சோடிக் காணப்படுகிறது. வரும் வாரம் முடிந்த பிறகுதான் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்! 

அடுத்த கட்டுரைக்கு