Published:Updated:

`தப்பா பேசாதீங்க; மும்தாஜுக்கு இருக்கிற பிரச்னை எங்க அம்மாவுக்கும் இருக்கு!' - ஸ்ரீஜா செந்தில்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார் மும்தாஜ். அதீத கோபம், தனக்கென பிரத்யேகமாக சில சலுகைகளை எதிர்பார்த்தது, சில டாஸ்க்குகளைச் செய்ய மறுத்தது போன்ற விஷயங்களே ஷோவில் மும்தாஜுக்கு எதிரான இமேஜ் கிடைக்கக் காரணமாகின. உடல் ரீதியாக தனக்கிருந்த சில பிரச்னைகள்குறித்து மும்தாஜும் பேசியிருந்தார்.

இந்நிலையில், 'பிக் பாஸ்' ஷோவைத் தொடர்ந்து பார்த்துவரும் 'சரவணன் மீனாட்சி' ஶ்ரீஜா செந்தில், 'மும்தாஜுக்கு இருக்கிற பிரச்னையின் தன்மைகுறித்துப் பேசியிருக்கிறார்.

'மும்தாஜுக்கு இருக்கிற பிரச்னை என்னோட அம்மாவுக்கும் இருக்கு. 'ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்'னு பேரு. இந்தப் பிரச்னை இருக்கிறவங்களுக்கு, காலையில எழுந்ததும் உடல் முழுக்கவே ஸ்டிஃப்பா இருக்கும். அந்த நேரங்கள்ல படு அவஸ்தையா இருக்கும். அதேபோல, கண்ணாடித் தம்ளரை மத்தவங்க அளவுக்கு கைகளால் பிடிக்க முடியாது. அதேபோல, தண்ணியில அவங்க ரொம்ப நேரமா புழங்கக் கூடாது. மீறிப் புழங்கினா பிரச்னை அதிகமாகிடும்.

அம்மாவுக்கு, ஆயுர்வேதம் ப்ளஸ் அலோபதி ரெண்டுலயுமே ட்ரீட்மென்ட் எடுத்ததுல இப்ப பரவால்ல. தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுக்கறது மூலம் மட்டுமே இந்தப் பிரச்னையைக் கட்டுக்குள் வைக்கலாம். மும்தாஜ் பத்தி நெகட்டிவ்வான கமென்ட்டுகளைக் கேட்டப்ப, இதைச் சொல்லணும்னு தோணுச்சு; அதனால சொல்றேன்' என்கிறார் ஶ்ரீஜா.

அடுத்த கட்டுரைக்கு