Published:Updated:

``கிளாமர் நடிகை என்ற பிம்பம் உடைந்துவிட்டது” - மும்தாஜ் குறித்து நெகிழும் கலா மாஸ்டர்

``கிளாமர் நடிகை என்ற பிம்பம் உடைந்துவிட்டது” - மும்தாஜ் குறித்து நெகிழும் கலா மாஸ்டர்
``கிளாமர் நடிகை என்ற பிம்பம் உடைந்துவிட்டது” - மும்தாஜ் குறித்து நெகிழும் கலா மாஸ்டர்

``கிளாமர் நடிகை என்ற பிம்பம் உடைந்துவிட்டது” - மும்தாஜ் குறித்து நெகிழும் கலா மாஸ்டர்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வலுவான போட்டியாளராக இருந்த மும்தாஜ், கடந்த ஞாயிற்றுக்கிழமை எலிமினேட்டாகி வெளியேறிவிட்டார். மும்தாஜ் இந்நிகழ்ச்சிக்குச் செல்லும் முன்பு, டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் ஆலோசனைப் பெற்றார். இந்த நிலையில், சர்ப்ரைஸாக மும்தாஜ் வீட்டுக்குச் சென்ற கலா மாஸ்டர், அவரிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பு குறித்து கலா மாஸ்டரிடம் பேசினோம்.  

``நாங்க இருவரும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குள் போகும் முன்பே மும்தாஜ் என்கிட்ட ஆலோசனைப் பெற்றாங்க. அந்த நிகழ்ச்சியில மும்தாஜுக்கு எதிராக சகப் போட்டியாளர்கள் பேசினாங்க; நடந்துகிட்டாங்க. ஆனாலும், மும்தாஜ் தன்னியல்பை இழக்காம, நேர்மையா இருந்தாங்க. கடந்த சனிக்கிழமை அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாங்க. எங்க இருவரின் வீடும் சென்னை அண்ணாநகர்லதான் இருக்கு. மும்தாஜ் அண்ணன்கிட்ட பேசிட்டு, ஞாயிற்றுக்கிழமை சர்ப்ரைஸா அவங்க வீட்டுக்கு என் கணவர் மற்றும் மகனுடன் போனேன். மும்தாஜையே கதவைத் திறக்க வைத்தோம்.

என்னைப் பார்த்ததும் மும்தாஜ் இன்ப அதிர்ச்சியானாங்க. தொடர்ந்து ரெண்டு மணிநேரம் உரையாடினோம். பொதுவா மும்தாஜுக்கு ரொம்ப நல்ல மனசு. அவங்களோடு நெருங்கிப் பழகினால்தான் தெரியும். நல்லவங்களுக்கு காலம் கிடையாதுனு சொல்லுவாங்க. அப்படித்தான் மும்தாஜை சகப் போட்டியாளர்கள் சரியாப் புரிஞ்சுக்கலை. ஒரு மாற்றம் கிடைக்கணும்னு நினைச்சு, 'பிக் பாஸ்' வீட்டுக்குள் போனாங்க. ரொம்ப கடவுள் நம்பிக்கைக் கொண்டவங்க. இந்த வாரம் எலிமினேட் ஆகிடுவோம்னு நினைச்சிருக்காங்க. அதுபோலவே நடந்திருக்கு. ஆனா, சகப் போட்டியாளர்களைப் பத்தி எங்கிட்ட ஒருவார்த்தைகூட குறை சொல்லலை.

சுகாதாரத்துல ரொம்ப கவனமா இருப்பாங்க. 'பிக் பாஸ்' வீட்டுல கிச்சனை சுத்தம் பண்ணிட்டு தூங்கப்போக அதிகாலை 2 மணியாகிடுமாம். டாய்லெட்டையும் மெனக்கெட்டு க்ளீன் பண்ணுவாங்களாம். மும்தாஜின் இந்தக் குணத்தை மத்தவங்க சரியா புரிஞ்சுக்கலை. 'யார் எப்படி வேணா பேசட்டும். நான் நானாக உள்ள போயிட்டு, திரும்பி வந்திருக்கேன். இதுவரை என்னை கிளாமர் நடிகைனு மட்டும்தான் மக்கள் நினைச்சாங்க. இப்போதான் என்னைப் பத்தியும், என் கேரக்டர் பத்தியும் மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு. எனக்கு மக்கள் கொடுத்த அன்பு மட்டும் போதும்'னு நெகிழ்ச்சியா பேசினாங்க. மும்தாஜுக்கு, நண்பர்கள்னு பெரிசா யாருமில்லை. தன் அண்ணன் குடும்பத்தினர்தான் அவருக்கு உலகம். அவங்க எல்லோருடனும் மகிழ்ச்சியா இருந்தாங்க. அந்த மகிழ்ச்சி இனி வரும் காலத்திலும் மும்தாஜின் வாழ்க்கையில் தொடரணும்" என்கிறார் கலா மாஸ்டர்.

அடுத்த கட்டுரைக்கு