Published:Updated:

நான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க!' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2

நான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க!' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2
நான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க!' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2

இறுதி நாள் நெருங்க நெருங்க போட்டிகள் கடுமையாக இருக்கும் என்று பார்த்தால் வெறுமையாக இருக்கிறது. ஒன்று, கண்ணில் மிளகாய்த்தூள் தூவுவதுபோல டெரராக இருக்கிறது அல்லது ஏழாங்கல் ஆடுவது போன்ற எளிமையாக இருக்கிறது. புத்திசாலித்தனமான, சுவாரஸ்யமான டாஸ்க்குகளை பிக்பாஸ் டீமால் கடைசிவரை யோசிக்கவே முடியாதோ என்று தோன்றுகிறது. 

நான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க!' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2**

94-ம் நாள் காலை. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று ஒலித்த பாடல், பிக்பாஸைக் குறிப்பதா அல்லது கோபியர் கொஞ்சும் ரமணனாக அந்த வீட்டில் இருக்கும் பாலாஜியைக் குறிப்பதா என்று தெரியவில்லை. (வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் மஹத்தின் காதில் புகை வந்துகொண்டே இருந்திருக்கலாம்). விடிந்தும் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். மும்தாஜ் இல்லாத குறையைப் போக்குகிறார்கள் போலிருக்கிறது. இப்போதெல்லாம் இவர்கள் வெளியே வந்து நடனமாடுவது குறைந்துவிட்டது. குறிப்பாக, ஐஸ்வர்யாவின் துள்ளலான நடனம் மிஸ்ஸிங்.

‘கட்டிக்கோ, உடைச்சுக்கோ’ என்றொரு டாஸ்க் நடந்தது. சில மரப்பலகைகளையும், மூன்று பந்துகளையும் தருவார்கள். பலகைகளை சீராக அடுக்க வேண்டும். அதே சமயத்தில் மற்றவர்கள் அடுக்குவதை பந்தை எறிவதின் மூலம் கலைத்தும் மகிழலாம். இடையூறுகளிலிருந்து தப்பித்து எவர் அதிக உயரமாக அடுக்கிறாரோ, அவருக்கு அதிக மதிப்பெண் பெற முடியும். அடுக்கப்பட்ட அளவுக்கேற்பவும் மதிப்பெண் அளிக்கப்படும்.

பஸ்ஸர் ஒலித்ததும் அனைவருமே அடுக்குவதில் மும்முரமாக இருந்தார்கள். எவரும் மற்றவர்களை கலைக்க முயலாமல் இருந்தபோது ஜனனி முதலில் அந்தத் திருப்பணியைத் தொடக்கி வைத்தார். சம்பிரதாயத்துக்கு ஒரு பந்தை ஐஸ்வர்யாவின் பக்கம் எறிந்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார். ஜனனி அடுக்கியது சரிய, ‘மத்தவங்கதான்மா உன்னுடையதை கலைக்கணும். நீயே கலைச்சுக்கக் கூடாது” என்று கமென்ட் அடித்தார் பாலாஜி. 

ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் அடுக்கு மற்றவர்களைவிட உயரமாக இருந்த சமயத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்டதுபோல ஐஸ்வர்யாவின் அடுக்கு மளமளவென கீழே சரிந்தது. ஒருமுறை, இரண்டு முறையல்ல பலமுறை அவர் அடுக்கியது சரிந்துபோக, அம்மணி அழாத குறையாக இருந்தார். இதற்காக அவர் மற்றவர் யாரையும் குற்றமும் சொல்ல முடியாது என்பது வேறு அவருக்கு உப தலைவலி.

நான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க!' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2இந்தப் பலகைகள் வாங்கியதில் ஏதோ ஊழல் நடந்திருக்கும்போல. மற்றவர்கள் அடுக்குவதும் அவ்வப்போது சரிந்தது. பாலாஜி ஒருநிலைவரையான உயரத்தில் அடுக்கிவிட்டு ஆசைப்பட்டு மேலும் அடுக்கப்போக, ‘நீங்க இது பண்ணதே பெரிசு. அப்படியே விட்டுடுங்க. உள்ளதும் போயிடப்போகுது’ என்று எச்சரித்தார் விஜி. ‘என் பக்கம் பந்தை எறிஞ்சிடுவியா?’ என்று விஜியிடம் ஜாலியாகப் பாலாஜி சவால் விட, “நீங்க எனக்கெல்லாம் போட்டியே இல்லை. ஏற்கெனவே மைனஸ் பத்து நீங்க இருக்கீங்க” என்றதற்கு வெட்கப்பட்டு சிரித்தார் பாலாஜி. (ஆக்சுவலி, இதற்கு நீங்க வருத்தப்படணும் சென்றாயன்!) 

பாலாஜி பிரிவு, யாஷிகா அடுக்கியதை கலைப்பதில் குறியாக இருந்தார்கள். தங்கள் பிரிவின் மேல் சம்பிரதாயத்துக்கு வலிக்காமல் எறிந்து கொண்டார்கள். “அண்ணா... அண்ணா... என்னை விட்டுடுங்கண்ணா’ என்று டிராஃபிக் கான்ஸ்டபிளிடம் மாட்டிய கல்லூரிப்பெண் மாதிரி பாலாஜியிடம் கெஞ்சியே காரியத்தை சாதித்தார் ஜனனி. ‘பாசமலருக்காக’ பாலாஜியும் விட்டுக்கொடுத்தார். இவர்களால் ஐஸ்வர்யாவை குறிவைக்க முடியவில்லை. ஏனெனில் அம்மணி அஸ்திவாரத்தையே இன்னமும் தாண்டவில்லை. மட்டுமல்லாமல், அவருடைய அடுக்கை கலைத்தால் பிறகு நீளப்போகும் பஞ்சாயத்தை யார் சமாளிப்பது?

யாஷிகாவும் விஜியும் தங்களுடையதை சாத்தியமான உயரத்தில் அடுக்கி விட்டு பாதுகாப்பாக நின்றார்கள். ‘டைம் ஆகுது. பந்துகளை உபயோகப்படுத்துங்க. இல்லைன்னா.. பாயிண்ட்ஸ் மைனஸ் ஆகிடும்’ என்று எச்சரித்தார் ரித்விகா. கணக்குப் பரீட்சைக்குள் மாட்டிக் கொண்ட கான்வென்ட் சிறுமி  மாதிரி கலங்கிய கண்களுடன் மல்லுக் கட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. “உனக்கு என்னதான் பிரச்சினை?” என்று பலகைகளுடன் பேசிக் கொண்டிருந்தார். பிறகு பந்தை எறிய வேண்டிய சமயத்தில் பாலாஜியின் அடுக்கை மட்டும் குறிவைத்து மூன்றிலும் தோற்றுப் போனார். ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்து மதிப்பெண்கள் வந்தன. விஜயலஷ்மி அதிகபட்சமாக முப்பது எடுத்திருந்தார். அதிசயமாக பாலாஜியும் 20 மதிப்பெண்கள் பெற அவரது கிராஃப் இப்போதுதான் உயிர் பெற்றிருக்கிறது. 

நான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க!' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2இந்த டாஸ்க்கின் இரண்டாவது பகுதி பிறகு தொடர்ந்தது. விதிகளை சற்று இறுக்கிப்பிடித்தார் பிக்பாஸ். அதன்படி பலகைகள் குறைவாக தரப்படும். தரப்படும் பத்து பந்துகளின் மூலம் மற்றவர்களின் அடுக்கைக் கலைத்து அதில் கீழே விழும் பலகைகளில் அதிகபட்சமாக நான்கு எடுத்துக் கொள்ளலாம். இப்படி எடுக்கப்படும் பலகைகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் உண்டு. ஐந்து அடுக்குகளை அடுக்கும் வரை பந்தை எறியக்கூடாது என்பது போன்ற விதிகளுடன் இரண்டாம் பகுதி தொடர்ந்தது. 

வெளியே மழை பெய்து தூறல் விழுந்து கொண்டிருந்தது. அனைவரும் பலகைகளை அடுக்குவதில் மும்முரமாகினர். ஐஸ்வர்யா ஐந்து அடுக்கை முடித்தவுடன் ரித்விகாவின் அடுக்கை நோக்கி குறி வைத்து பந்தை எறிய, “ஹல்லோ… அஞ்சு  அடுக்கற வரை பந்து அடிக்கக்கூடாது” என்று விதியை நினைவுப்படுத்தினார் ரித்விகா. “ஓ.. மத்தவங்களும் அஞ்சு அடுக்கணுமா?” என்று தன் தவறை உணர்ந்தார் ஐஸ்வர்யா. விதிகளைப் புரிந்து கொள்வதில் அவருக்கு மொழிப் பிரச்சினையிருப்பது இன்னுமொருமுறை நிருபணமாயிற்று. ஐஸ்வர்யா அடுக்கியதின் மேல் ரித்விகா பந்தை எறிய, மூன்று பலகைகள் அசைந்ததாக சொல்லி அவற்றை எடுத்துச் சென்றார் ரித்விகா. ‘ஒன்றுதானே கீழே விழுந்தது?” என்று முனகினார் ஐஸ்வர்யா. 

யாஷிகா அசந்திருந்த நேரம் பார்த்து ஜனனி பின்னால் வந்து பந்தை எறிய ‘நான் அடித்ததால்தான் ஒன்று கீழே விழுந்தது” என்ற ஜனனியின் கோரிக்கையை யாஷிகா மறுத்தார். ஜனனியின் பந்தினால் யாஷிகாவின் பலகை கீழே விழுந்தது போல தெரியவில்லை. அசைந்தது, அவ்வளவுதான். என்றாலும் ஒரு பலகையை எடுத்துச் சென்றார் ஜனனி. ‘கீழே விழுந்தால்தான் எடுக்க வேண்டும்’ என்கிற விதியை விஜி நினைவுப்படுத்த, ‘அப்படியா?” எனக் கேட்டு ஜனனி அபகரித்துச் சென்றதை மறுபடியும் எடுத்து வந்தார் யாஷிகா. 

யாஷிகா செய்வதை எப்போதும் காப்பியடிக்கும் வழக்கமுள்ள ஐஸ்வர்யாவும் இப்போது விழித்துக் கொண்டு ரித்விகாவிடம் மல்லுக்கட்டத் துவங்கி விட்டார். “பலகை நிலத்தின் மேல் விழவில்லை’ என்பது ஐஸ்வர்யாவின் கோரிக்கை. ஆனால் ‘அடுக்கின் மேலாக அசைந்து விழுந்தது’ என்பது ரித்விகாவின் வாதம். இதில் ஐஸ்வர்யாவின் கோரிக்கைதான் சரி என்று தோன்றுகிறது. ‘கீழே விழுந்த பலகைகளை எடுத்துக் கொள்ளலாம்’ என்கிற விதியின் பொருள் நிலத்தின் மீது விழுந்தது என்றே அர்த்தம். குறிப்புகளை ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரியாக புரிந்து கொள்வதில் வரும் அனர்த்தங்கள் இவை. யாஷிகா ஜனனியின் இடத்திற்குச் சென்று தன்னுடையதை மீட்டு வர “நான் அப்படில்லாம் பொய் சொல்லி விளையாட மாட்டேன்’ என்று மறுபடியும் அதை எடுத்துக் கொண்டு சென்றார் ஜனனி. பெண்களின் சண்டைகளை சமாதானம் செய்ய அந்தப் பரம்பொருளால் கூட முடியாது. 

தன்னுடைய சிறிய அடுக்கின் மீது  ரித்விகா பந்து எறிய வரும் போது அதை தானே கலைத்துக் கொண்டு ‘வெவ்வே’ காட்டினார் ஐஸ்வர்யா. (ரொம்ப புத்திசாலிதான்!). தனக்கு மதிப்பெண்கள் வராவிட்டாலும் பரவாயில்லை, எதிராளி கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுவிடக்கூடாது என்கிற உத்தி போல. பாலாஜி அடுக்கியதை திறமையாக கலைத்து நான்கு பலகைகளை சம்பாதித்தார் யாஷிகா. சில பல குழப்பங்களுடன் ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்தது. அனைவருமே ஏறத்தாழ 20 அல்லது 15 மதிப்பெண்கள் பெற, யாஷிகாவிற்கு மட்டும் கூடுதல் மதிப்பெண்கள் இருபது கிடைத்ததால், இந்த டாஸ்க்கில் அவரது மதிப்பெண் 35 ஆக உயர்ந்தது. அவருடைய மொத்த மதிப்பெண்கள் 275. 

நான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க!' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2**

அப்புறம் ஆரம்பித்தது அந்த நீண்ட, பெரிய பஞ்சாயத்து. விவாதித்து விவாதித்து மாய்ந்தார்கள். அவர்களின் வாயில் நுரை தள்ள, நம் காதுகளில் ரத்தம் பொங்கியது. ‘பிக்பாஸ் பினாலே ரேங்க்’ என்பது அந்த டாஸ்க்கின் பெயர். விளையாட்டுப் போட்டிகளில் மெடல் வழங்குவதற்காக அமைக்கப்படும் மேடை போல, தர வரிசையின் படி 1, 2 .. என்று ஆறு வரை எண்ணிக்கையிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. ‘யார் முதல் ரேங்க்கிற்கு தகுதியானவர்?” என்பதை போட்டியாளர்கள் கூடி விவாதித்து அதில் மற்றவர்களை கன்வின்ஸ் செய்பவர்கள் முதல் இடத்தில் நிற்கலாம். இப்படி ஒவ்வொரு இடத்திற்காகவும் விவாதம் நடத்தி ஜெயிக்க வேண்டும். 

“உடல்ரீதியான டாஸ்க்குகளில் நான் பின்தங்கியிருக்கிறேன்’ என்று தொடர்ந்து என்னைப் பற்றி புகார் சொல்வார்கள். ஆனால் இப்போதும் அதிலும் என்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனவே முதலிடம் எனக்குத்தான்’ என்று பலவீனமாக ஜனனி ஆரம்பிக்க, “மொழிப்பிரச்சினையையும் தாண்டி எல்லா டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்திருக்கிறேன். நிறைய வலிகளை அனுபவித்திருக்கிறேன். ஆக முதலிடம் எனக்குத்தான்” என்று அவரை வம்புக்கு இழுத்தார் ஐஸ்வர்யா. ஆனால் ஐஸ்வர்யாவிற்கு முதலிடம் கிடைக்காது என்பது அவருக்கே தெரிந்திருக்கலாம். 

ஜனனிக்கு ஆதரவாக ரித்விகா முன்மொழிய, “ஜனனி.. நீங்க ‘பொதுமக்கள்’ டாஸ்க்ல பின்வாங்கிட்டீங்க. நான் அப்படி எந்த டாஸ்க்கையும் விட்டுக்கொடுத்ததேயில்ல. நீங்க ஏற்கெனவே பைனலுக்கு தகுதியாயிட்டீங்க. பஸ்ஸர் டாஸ்க்ல கூட நான் ரொம்ப நேரம் தாக்குப்பிடிச்சு ஜெயிச்சேன்” என்று முதலிடத்தைக் கோரினார் யாஷிகா. சில பல விவாதங்களுக்குப் பிறகு யாஷிகாவிற்கு ஒருமனதாக முதலிடத்தைத் தந்தார்கள். எனவே இந்த இடம் அதிக சர்ச்சையின்றி முடிந்தது. 

‘அப்ப.. எனக்கு இரண்டாம் இடம் வேணும்” என்று ஐஸ்கிரீம் கேட்கும் சிறுமி மாதிரி அடம்பிடித்தார் ஐஸ்வர்யா. ‘பஸ்ஸர் டாஸ்க்கை நாங்கள்லாம் ஸ்போர்டிவ்வா எடுத்துக்கிட்டோம். ஆனா நீ உள்ளே போய் அழுதியே” என்ற புகாரை ஐஸ்வர்யாவின் மீது வைத்தார்கள். “மக்கள் முன்னாடி போய் நிரூபிச்சுட்டு வா’ன்னு சவால் விட்டீங்க. அதுலயும் ரெண்டு முறை போய் ஜெயிச்சுட்டு வந்தேன். அப்புறம் என்ன?” என்ற மாதிரி மல்லுக்கட்டினார் ஐஸ்வர்யா. ரித்விகா அனைத்து விதிகளையும் ஒழுங்காக பின்பற்றியிருக்கிறார், ஒருமுறை கூட மீறியதில்லை என்று அவருக்கும் சில ஓட்டுக்கள் விழுந்தன. ‘நான் முடியையெல்லாம் தியாகம் பண்ணியிருக்கேன்” என்று எதிர்தரப்பை தலைமுடியை பிய்க்க வைத்தார் ஐஸ்வர்யா. ‘டாஸ்க்ல விளையாடினது மட்டும் கணக்கு கிடையாது. எல்லா விஷயமும் பார்க்கணும்’ என்ற சரியான பாயிண்ட்டை சொன்னார் பாலாஜி. 

நான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க!' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2“உங்க சண்டைல்ல நான் கொடுத்த ஐநூறு ரூபாயை மறந்துராதீங்க’ கதையாக, அதுவரை பொறுமை காத்த விஜயலஷ்மியும் இந்தப் பஞ்சாயத்திற்குள் அதிரடியாக உள்ளே நுழைந்தார். ‘நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கேன்” என்று அவர் சொல்ல அதற்கும் தலையாட்டினார்கள். “எனக்கு எந்தப் பிரண்டும் பின்னாடி இல்லை. யாஷிகா சப்போர்ட்னாலதான் நீ இதுவரைக்கும் வந்திருக்கே” என்று நேரடியான சிக்ஸரை தூக்கினார் ரித்விகா. “யாஷிகா எனக்கு உதவி பண்ணலை. மொழிப்பிரச்சினைனால எனக்கு சிலது புரியாதப்ப விளக்கினா. தனிப்பட்ட காரணங்களால் நான் ஃபீல் ஆகறப்ப சப்போர்ட்டா இருந்தா, அவ்வளவுதான். உதவி பண்ணக்கூடாது-ன்னு அக்ரிமெண்ட் பேப்பர்ல இல்லை” என்ற தன் வாதத்தை வைத்தார் சட்ட வல்லுநர் ஐஸ்வர்யா. “உங்க சைட் மட்டும் குரூப்பிஸம் இல்லையா? ஒருத்தருக்கொருத்தர் டாஸ்க்ல கூட உதவி செய்யலையோ? ‘டல்கோ நைட்ஸ்’-ன்னு பேசிக்கறதில்லையா?’ என்று எதிர்தரப்பின் குழுத்தன்மையைப் பற்றி சபையில் பேசினார் ஐஸ்வர்யா. 

பஸ்ஸர் டாஸ்க்கின் போது விஜியின் முகத்தில் ஐஸ்வர்யா ஸ்பிரே அடித்த விஷயமும் சர்ச்சையானது. ‘நான்தான் அதை முதலில் ஆரம்பித்தேன்’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் யாஷிகா. “என் தலைல காரக்குழம்பு ஊத்தினேங்களே.. இன்னமும் கூட என் தலைல புண்ணு இருக்கு. உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்குன்னா காரக்குழம்பா?” என் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார் ரித்விகா.

நான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க!' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2


“காலைல எந்திரிச்சு நாங்க டான்ஸ் ஆடறோம். நீங்க ஆடறீங்களா? இஷ்டத்திற்கு தூங்கலை?” என்று அபத்தமான பாயிண்ட்டை முன்வைத்தார் விஜி. “நானும் நெறைய ஆடியிருக்கேன். அப்ப யாஷிகா கூடத்தான் இப்ப ஆடலை. அவங்க முதல் பரிசுக்கு தகுதியா?” என்று இந்தச் சண்டைக்கு இடையில் தன் நெருக்கமான தோழியையும் போட்டுக் கொடுக்க ஐஸ்வர்யா தவறவில்லை. (“மாப்பிள்ளை என் பையன் மாதிரி குள்ளமா என்ன?” என்ற வசனம் வந்ததும் ‘அபூர்வ சகோதரர்கள்’ அப்பு மாதிரி ‘என்னையா சொன்ன?” என்று அடிபட்ட முக பாவத்தை பரிதாபமாக காட்டினார் யாஷிகா.) “அவங்க சொல்றதுக்கு டிஃபண்ட் பண்ணு. கோபப்படாத” என்று உபதேசித்தார் யாஷிகா. 

சற்று நிதானமாக ஆராய்ந்தால் ஐஸ்வர்யாவின் தரப்பு வாதங்கள் பெரும்பாலும் விதிகளின் அடிப்படையில் சரியே. (தார்மீக ரீதியாக சரியா என்பது விவாதத்திற்கு உரியது). ஆனால் அவற்றை உணர்ச்சிவசப்படாமல் திறமையாக முன்வைக்க ஐஸ்வர்யாவால் இயலவில்லை. கோபத்தின் மூலம் தன் பலவீனத்தை மறைக்க முயற்சிக்கிறார். அனுதாபத்தையும் கோருகிறார். இந்த ஏரியாவில்தான் யாஷிகா கில்லியாக இருக்கிறார். சமயோசிதம் மற்றும் சாமர்த்தியத்தின் மூலம் ‘அந்தப் பொண்ணு சூப்பர்ப்பா’ என்று மற்றவர்களின் வாயாலேயே சொல்ல வைக்கிறார். ஏறத்தாழ அந்தத் தகுதிகளுக்கு பொருத்தமானவராகவும் செயல்படுகிறார். இந்த அம்சங்கள் ஐஸ்வர்யாவிடம் பலவீனமாக இருக்கின்றன. 

“எனக்கு ஜீரோ பொஷிஷன் கூட கொடுங்க. பிரச்சினையில்ல’ என்று ஒரு கட்டத்தில் கோபித்துக் கொண்டு வழக்கம் போல் புகையறையில் தஞ்சமடைந்தார் ஐஸ்வர்யா. பாலாஜியின் சமாதானத்தை அவர் ஏற்கவில்லை. மற்றவர்களுக்காக பரிந்து பேசுவதிலேயே பாலாஜியின் நேரம் போயிற்று. அவர் தனக்காக எதையுமே பேசவில்லை. பேச ஒன்றுமில்லை என்பது வேறு விஷயம். உரையாடலின் இடையில் பாலாஜி  தன்னை குறைத்து மதிப்பிட்டதால் ஜனனி அழுது கொண்டே உள்ளே செல்ல ‘அடக்கடவுளே’ என்று தலையில் கை வைத்துக் கொண்டார் பாலாஜி. திரும்பி வந்த ஐஸ்வர்யா ‘நான் கடைசி படிக்கட்டில்தான் இருப்பேன்’ என்று வீம்பாக சென்று அமர்ந்து கொண்டார். எவர் பேச்சையும் கேட்கவில்லை. ‘அது வெஷம். விடுங்க’ என்பது மாதிரி யாஷிகா கைகாட்ட ஒருவழியாக செட்டில் ஆனார்கள். அதன்படி யாஷிகா, ரித்விகா, ஜனனி, விஜி, பாலாஜி, ஐஸ்வர்யா என்ற தரவரிசையில் நின்றார்கள். ‘இனிமே உங்க கூட எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லை’ என்று பாலாஜியிடம் கோபித்துக் கொண்டு சென்றார் ஐஸ்வர்யா. வாயில் நுரை தள்ள பஞ்சாயத்து நடத்தி வைத்த பாலாஜிக்கு கிடைத்த பலன் இது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


தானே சென்று கடைசிப்படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டது மட்டுமல்லாமல் அன்று இரவு சாப்பிடாமல் சென்று படுத்துக் கொண்ட ஐஸ்வர்யாவை மற்றவர்கள் சமாதானப்படுத்தியும் வேதாளம் முருங்கை மரத்திலிருந்து இறங்க மறுத்தது. இன்னொருபக்கம், பாசமலர்களான பாலாஜியும் ஜனனியும் கண்ணீருடன் அணைத்துக் கொண்டார்கள். 

நான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க!' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2‘வெச்ச குறி தப்பாது’ என்பது அடுத்த டாஸ்க். (இது பிக்பாஸின் மைண்ட் வாய்ஸ் போல). சில பல நம்பர்கள் கொண்ட தடுப்புகள் இருக்கும். ஹாக்கி ஸ்டிக்கினால் பந்தை தட்டி விட அது எந்த எண்ணிக்கையில் போய் படுகிறதோ, அந்த எண்ணிக்கையில் மதிப்பெண்கள் கிடைக்கும் என்கிற ஆதிகால விளையாட்டு இது. இதில் விஜிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போக, யாஷிகாவிற்கு நிறைய லக் அடித்ததில் மொத்த மதிப்பெண்கள் 325 பெற்று அவரே முதலிடத்தில் இருக்கிறார். 270 மதிப்பெண்கள் பெற்று விஜி இரண்டாம் இடத்திலும் 250 மதிப்பெண்கள் பெற்று ஐஸ்வர்யா மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள். ஜனனி -  150, ரித்விகா – 100, பாவம் பாலாஜி -40 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள். இன்றைய நிலைமை இது.


 

அடுத்த கட்டுரைக்கு