Published:Updated:

ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2

ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2
ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2

மனிதக்கூட்டத்தில் பிரிவு, பாரபட்சம் போன்றவை உருவாகக்கூடாது என்றே நாம் பொதுவாக விரும்புகிறோம். அந்த நாகரிக உலகத்தை நோக்கித்தான் பல்லாண்டுகளாக மெல்ல முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இனம், மதம், சாதி, வர்க்கம், நிறம் உள்ளிட்ட பல காரணிகளால் மனிதர்களுக்குள் உயர்வு, தாழ்வோ, பாரபட்சமோ இருக்கக்கூடாது என்பதை ஏறத்தாழ அனைவருமே நம்புகிறோம். ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. 

ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2

என்னதான் இந்த பாரபட்சங்களை நாம் தவிர்க்க முயன்றாலும் சில மனிதர்கள் கூடி இயங்கும்போது ஏதோவொரு காரணத்தினால் தன்னிச்சையாகவே அங்கு சில பிரிவுகளும் குழுத்தன்மையும் உருவாகிவிடும். இதற்கு பிரத்யேகமான காரணங்கள்கூட தேவையில்லை. ஒருவரின் புன்னகை பிடித்திருக்கிறது என்பதால் கூட அவருடன் இணக்கமான உணர்வு தோன்றலாம். அதே காரணத்தினாலேயேகூட ஒருவரை நாம் வெறுக்கலாம். இந்த நோக்கில் குழுத்தன்மை உருவாவது இயற்கையிலேயே இருக்கிறது. இதை நடைமுறையிலேயே காண முடியும். சகிப்புத்தன்மையுடன் இதைக் கடப்பதுதான் மனிதகுலத்தின் முன்னுள்ள சவால்.

பிக்பாஸ் வீட்டிலும் நிகழ்ந்துகொண்டிருப்பது இதுவே. புகைந்தகொண்டிருந்த இனவாத உணர்ச்சி வேறு வழியில்லாத சூழலில் தற்போது மேலும் நெருப்பாக பற்றத் துவங்கியிருக்கிறது. யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஒரு கூட்டணியிலும் மற்றவர்கள் ஒரு கூட்டணியிலுமாக இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  ஒருவகையில் இது ஆபாசமான அரசியல். ‘ஸ்போர்ட்மேன்ஷிப்போடு’ கையாளப்பட வேண்டிய விளையாட்டுக்களில் இந்த ஆபாசம் கலக்கவே கூடாது. ஆனால், மனிதர்களின் உணர்ச்சிகள் மோதிக்கொள்வதை மேலும் பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் பிக்பாஸ் போன்ற வணிக விளையாட்டுக்களில் இது போன்ற தார்மீகங்களை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். 

ஒருபக்கம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, வாரஇறுதியில் நாட்டாமையின் மூலம் தொட்டிலையும் ஆட்டிவிடும் இந்த நாடகம் அபத்தமானது. 

**

96-ம் நாள். ஒருபக்கம் நிலைமை சூடாக இருந்தாலும் ‘மெர்சலாகிட்டேன்’ என்று பாடல் போட்டு கொண்டாடும் குஷியில் பிக்பாஸ் இருக்கிறார். ‘நாம ஒண்ணு சேர்றோம்… அவங்களை தட்றோம், தூக்கறோம்” என்று விஜி கூட்டணி நேற்றே உறுமிக்கொண்டிருந்தது. இன்று காலையிலும் அது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றன. ‘அவங்க ஸ்மார்ட்னா, நாம் அதைவிடவும் ஸ்மார்ட்ன்னு காட்டுவோம்” என்று சொல்லி விஜியை நன்றாக ஏற்றிக்கொண்டிருந்தார், ஜனனி. இத்தனை நாள்கள் தாங்களால் செய்ய இயலாத ராவடிகளை விஜி துணிச்சலாக செய்து வருவதால் பாலாஜி, ஜனனி, ரித்விகா ஆகியோர் அவருக்கு மறைமுக மற்றும் வெளிப்படையான ஆதரவு தருகிறார்கள். இன்னொரு பக்கம், யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இதற்கு தயாராக இருந்தார்கள். 

ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2

“நான் மட்டும்தான் நேத்து அட்டாக் பண்ண தயாரா இருந்தேன். நீங்க ஒத்துழைக்க மாட்டேன்றீங்க’ என்று விஜி சொல்லிக் கொண்டிருந்த போது ‘மண் வாசனை’ டாஸ்க் தொடரும் அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டார். இந்த டாஸ்க்கின் பெயரை ‘ரத்த வாசனை’ என்று மாற்றி விடலாம். சிரிப்பும் குதூகலமுமாக துவங்கிய இந்த விளையாட்டு  அந்தளவிற்கு போகப் போக மூர்க்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. 

ஆக, இரு தரப்புமே மறைத்துக்கொண்ட ஆவேசத்துடன் களத்திற்குள் இறங்கினார்கள். ஆனால், படம் துவங்கியவுடனே கிளைமாக்ஸ் காட்சி வந்துவிட்டதைப் போன்று இது சட்டென்று முடிந்துவிட்டது. தன் டவரை பாதுகாக்கும் வேலை விஜிக்கு இல்லாததால் முதலில் ஐஸ்வர்யாவை அவர் குறிவைத்தார். அவருடன் ஜனனியும் இணைந்துகொண்டார். ஏற்கெனவே கொலைவெறியில் இருந்த ஐஸ்வர்யா, பிதாமகன் ‘விக்ரம்’ மாதிரி மெல்ல உறுமத் துவங்கினார். ஐஸ்வர்யா டவரின் மூடியை மக்கால் உடைத்த  விஜி, மணலை அள்ளி வெளியே இறைக்கத் துவங்க, ஐஸ்வர்யா நேராக ஜனனியின் டவருக்குச் சென்று அதன் மூடியை கையினாலேயே உடைத்து மணலை வெளியே இறைத்தார். 

அதே சமயத்தில் தன்னுடைய டவரின் மணல் காலியாவதைக் கண்டு பதட்டமாகிய ஐஸ்வர்யா, ஆவேசத்துடன் ஜனனியின் டவரை கீழே தள்ளினார். அருகில் நின்றிருந்த ஜனனியைக்கூட அவர் கவனிக்க விரும்பவில்லை. நல்ல வேளையாக, காலில் ஏற்பட்ட சிராய்ப்போடு ஜனனி தப்பித்தார். இல்லையென்றால் பெரிய காயம் ஏற்பட்டிருக்கக்கூடும். அந்தக் கோபத்தில் திரும்பி வந்த ஜனனி, ஐஸ்வர்யாவின் டவரை கீழே தள்ளி விட, ஐஸ்வர்யா  சென்று பாலாஜியின் டவரை தள்ளிவிட்டார். ‘எந்தவொரு வினைக்கும் எதிர்வினையுண்டு’ என்கிற ஆதார கோட்பாடு இப்படியெல்லாம் ‘கோக்குமாக்காக’ நிகழும் என்று கற்பனைகூட செய்ய முடியாது. ‘அவன் அடிச்சதுக்கு சும்மா உட்கார்ந்திருந்த என்னை ஏண்டா அடிச்சே?” என்பது மாதிரி பாலாஜி விழித்துக்கொண்டிருந்தார். “ரூல்ஸ் ஃபாலோ பண்ணணும்னு சொல்றீங்க. அப்புறம் நீங்களே அதை பிரேக் பண்றீங்க. இனிமேத நானும் பண்ணப்போறேன்” என்கிற ஆவேசமான கூச்சல் ஐஸ்வர்யாவிடமிருந்து வெளிப்பட்டது. 

ஐஸ்வர்யாவின் கோபத்தை அதே போல் நகைச்சுவையாக செய்து காட்டி வெறுப்பேற்றத் துவங்கினார் விஜி (இந்த வகையில் மஹத்தின் ஃபீமேல் வெர்ஷன் என்று விஜியைச் சொல்லலாம்). எரியும் நெருப்பில் எண்ணைய் ஊற்றிய கதையாக ஐஸ்வர்யாவின் கோபம் இன்னமும் அதிகமாயிற்று. இவருக்கும் விஜிக்கும் முட்டிக்கொண்டது. கைகலப்பு நிகழுமோ என்றுகூட தோன்றிவிட்டது. ஜனனிக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்த்து பதறிய பாலாஜி, ‘ஒழுங்கா விளையாடறதா இருந்தா விளையாடு. இல்லைன்னா வெளியே போ” என்று ஐஸ்வர்யாவை நோக்கி கத்த, “நீங்க வெளியே போங்க’ என்று பதிலுக்கு கத்தினார் ஐஸ்வர்யா. (யப்பா.. சாமிங்களா.. நாங்க வேணா வெளியே போயிடறோம். ஆளை விடுங்க!). காயமடைந்த ஜனனியை வெளியே அழைத்துச் சென்றார்கள். 

ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2

இரண்டு தரப்பும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து நடந்த சம்பவத்தைப் பற்றி கோபமாக பேசிக்கொண்டிருந்தார்கள். ‘இது ஒரு கேம்தானே, விடு’ என்று கூண்டு புலி மாதிரி உலவிக்கொண்டிருந்த ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தினார், யாஷிகா. பிறகு, கோபம் தணியாமல் புகையறையில் ஆவேசமாக கத்திக்கொண்டிருந்த ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்த முடியாமல் விழித்துக்கொண்டிருந்தார் யாஷிகா. ஐஸ்வர்யாவிற்குள் மறுபடியும் ஹிட்லரின் ஆவி புகுந்துவிட்டது என்று தெரிகிறது. டாஸ்க்கில் தோற்பதைவிடவும் எதிர் தரப்பினர் வெறுப்பேற்றுவதில் ஐஸ்வர்யா அதிகம் புண்படுகிறார் என்பதையும் உணர முடிகிறது.

இந்த விஷயத்தில்தான் யாஷிகா சாமர்த்தியமாக இருக்கிறார். டாஸ்க்கின் போது அவசியமான ஆக்ரோஷத்தோடு மோதும் அவர், யாருக்காவது அடிபட்டால் கரிசனத்தோடோ அல்லது அப்படிப்பட்ட பாவனையோடோ உதவ முன்வருகிறார். இந்தச் சமநிலையை ஐஸ்வர்யாவால் பின்பற்ற முடியவில்லை. கோபம் தலைக்கேறிவிட்டால் சம்பந்தப்பட்ட நபரை பங்காளிப் பகையோடு காணத் துவங்கிவிடுகிறார். ‘நாம ஒண்ணு சேர்ந்தாதான் அவங்களை வீழ்த்த முடியும்” என்கிற புராணத்தை இன்னொரு பக்கம் விஜி பாடிக்கொண்டிருந்தார். 

மறுபடியும் அந்த ‘ரத்த சரித்திர’ டாஸ்க் துவங்கியது. மீதமிருப்பது ரித்விகா மற்றும் யாஷிகாவின் டவர்கள்தான். எனவே தன் தோழிக்கு காவலாக ஐஸ்வர்யாவும் பாதுகாப்பாக நின்று கொள்ள விஜி மெல்ல மெல்ல தாக்குதலைத் துவங்கினார். ‘என்னைத் தொட்டுப்பாரு. அப்புறம் விஷயம் தெரியும்” என்று ஐஸ்வர்யா ஆவேசமாக, மீண்டும் தன் வெறுப்பேற்றும் ஆயுதத்தை எடுத்தார் விஜி. இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. ‘ஐயாம் வெயிட்டிங்’ என்று விஜய்யின் பன்ச் டயலாக்கை ஐஸ்வர்யா எடுத்துவிட ‘ஐயோ பயமாயிருக்கே’ என்று அந்நியன் அம்பி மாதிரி பாவனை செய்தார் விஜி. (சபாஷ்! சரியான போட்டி!). “நீ வந்த பிறகுதான் நிறையப் பிரச்னை வருது” என்று இந்த உரையாடலின் இடையில் விஜியைப் பார்த்து ஐஸ்வர்யா கூறியது ஒருவகையில் உண்மை. 

ஜனனிக்கு அடிபட்டிருந்ததால் அவர் பாதுகாப்பாக மூலையில் அமர்ந்துகொண்டிருந்தார். இந்தப் பெண் சிங்கங்களின் இடையில் தலையைக் கொடுத்தால் தான் பிரியாணிதான் என்பதை நன்கு உணர்ந்திருந்த பாலாஜியும் தூர நின்று வேடிக்கை பார்க்க, வேறு வழியில்லாமல் அப்பிராணியான ரித்விகா இந்தப் போரில் இறங்க வேண்டியிருந்தது. அனைவரும் யாஷிகாவின் டவரை சுற்றி நிற்க, டிஸ்கவரி சானலைப் பார்க்கும் பிரமை ஏற்பட்டது. 

ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2

மெல்ல மெல்ல அந்த தள்ளுமுள்ளு சூடு பிடிப்பதற்குள், ‘எவர் மண்டை உடையுமோ’ என்று தோன்றிய காரணத்தினால், பஸ்ஸரை அழுத்தி போட்டியை முடித்து வைத்தார் பிக்பாஸ். (மகராசன்.. நீ நல்லா வருவே!). அனைவரும் மூச்சு வாங்கிக்கொண்டு வெளியேறினார்கள். ஆக உடைபடாமல் மீதம் இருந்தது, யாஷிகா மற்றும் ரித்விகாவின் டவர்கள். 

வெளியே வந்த இரு தரப்பும் மறுபடியும் தனித்தனியாக சென்று பரஸ்பரம் புறணி பேசிக்கொண்டிருந்தார்கள். ‘எல்லோரும் ஒண்ணா வந்தாத்தானே, அவங்களை சமாளிக்க முடியும்?” என்று பழைய கேள்வியை விஜி மறுபடியும் கேட்க, ‘யம்மா.. லேடீஸ் நடுவுல வந்து எதுனா பிரச்சினையாச்சுன்னா.. அது சரியிருக்காதே. உங்களுக்கு உள்ளேன்னா அது ஒகே’ என்று பாலாஜி சங்கடப்பட்டு கூறிய சமாதானத்திலும் உண்மையில்லாமல் இல்லை. 

‘போடா.. அந்த ஆண்டவனே என் பக்கம் இருக்கான்’ என்பது மாதிரி இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா பஞ்ச் வசனம் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்களின் முன்னால் ஐஸ்வர்யாவிற்கு வெளிப்படையாக ஆதரவு தராத யாஷிகா, இப்போது அவருடன் இணைந்து எதிர்தரப்பை கிண்டலடித்துக் கொண்டிருந்தார். ‘கேட்டைத் தாண்டி வெளியே வரட்டும். கல்லெடுத்து அடிக்கலாம். விரட்டி விரட்டி வெளுக்கலாம்’ என்று யாஷிகா சொல்ல, ‘சபாஷ், அப்படிப்போடு’ என்று உற்சாகமானார் ஐஸ்வர்யா. (ஏம்மா.. நீ உண்மையாலுமே லூஸா.. இல்ல லூஸூ மாதிரி நடிக்கிறியா?!) ‘தப்பு எல்லோரும்தான் பண்ணியிருக்கோம்’ என்று இடையில் ஒரு மகா உண்மையைச் சொன்னார் யாஷிகா. ‘எனக்கு பைனல்ஸ் போகணும்லாம் ஆசையில்ல. பிக்பாஸ் உங்க மேல மரியாதை இருக்கு. லவ் இருக்கு. வெளியே அனுப்புங்க. நான் போறேன்” என்று வேறு மோடிற்கு மாறிய ஐஸ்வர்யா புலம்பத் துவங்கினார். (தம்பி.. அந்த கேட்டைத் திறடா…” என்பது போல் இன்று நாட்டாமைக்குள் இருக்கும் வேட்டையாடு விளையாடு ‘ராகவன்’ மீண்டும் விழித்துக் கொள்ளலாம்). 

யாஷிகாவின் மதிப்பெண்கள் அனைவரையும் விட உயர்ந்திருந்தது. அவர் எடுத்திருக்கும் மொத்த மதிப்பெண்கள் 555.(லக்கி நம்பர்).

**

“அடுத்த டாஸ்க்ல என்னோட குறி விஜிக்குத்தான். அவளோட பாயிண்ட்டை ஏறவே விடக்கூடாது” என்று ஐஸ்வர்யாவிற்கு குறிப்பு தந்து கொண்டிருந்தார் யாஷிகா. ஒருபக்கம் ஐஸ்வர்யாவை நட்புணர்ச்சியோடு பாதுகாத்தாலும் மறுபக்கம் அவரை ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொள்ள யாஷிகா தயங்குவதில்லை என்று தோன்றுகிறது. இருவரும் படுக்கையறையில் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘இங்க யாரையும் நம்பக்கூடாது. பின்னாடி குத்தறாங்க” என்ற ஐஸ்வர்யாவிற்கு ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்த யாஷிகா, ஒரு கட்டத்தில் தூங்கி விட, பிறகு தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா தன் கன்னத்தில் தானே சில முறை அடித்துக்கொண்டார். (ஐஸ்வர்யாவிற்கு உளரீதியான கவுன்சிலிங்கோ அல்லது மருத்துவமோ வழங்கப்படுகிறதா அல்லது பிக்பாஸ் டீம் இவரை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறதா என்று தெரியவில்லை).

ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2

ஐஸ்வர்யா கன்னத்தில் அடித்துக்கொள்ளும் காட்சியைப் பார்த்து பதட்டமடைந்த பாலாஜி, அதை ரித்விகாவிற்கு சுட்டிக் காட்ட ‘ஐயோ எனக்கு கண்ணைக் கட்டுதே’ என்று திகில் படம் பார்த்த எஃபெக்ட்டை தந்தார் ரித்விகா. ‘நான் செய்ய நினைச்சதை  அவளே செஞ்சுக்கறாளா, குட். அந்தக் காட்சியைப் பார்க்க எனக்கு கொடுத்து வெக்கலையே” என்று புளகாங்கிதமடைந்தார் இம்சை திலகம் ‘விஜி. 

பேசாமல் இந்த நிகழ்ச்சியில் தாமு, பரவை முனியம்மா, மல்லிகா பத்ரிநாத் போன்றவர்களை போட்டியாளர்களாக சேர்த்திருக்கலாம். அந்தளவிற்கு தொடர்ந்து சமையல் போட்டிகளாக நடத்தி சலிப்பூட்டுகிறார் பிக்பாஸ். மீண்டும் ஒரு சமையல் போட்டி. பருப்பு பாக்கெட்டையும் ஓர் ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதை உலகத்திற்கு நிரூபித்த விஜிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பருப்பு தொடர்பான பிராண்டின் போட்டி நடந்தது. ‘பாரம்பரிய உணவு தயாரிப்புகளை நாம் மறந்து விட்டோம். அதை மீட்டெடுப்போம்’ என்கிற பாவனை வேறு.

இதன்படி இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டு முறையே உளுந்து வடையும் பருப்பு வடையும் தயாரிக்க வேண்டும். கூடவே சாம்பாரும். ரித்விகாவும் ஜனனியும் இதற்கு நடுவர்களாக இருப்பார்கள். யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ஓர் அணியில் இருக்க, பாலாஜியும் விஜியும் இன்னொரு அணியில் இருந்தார்கள். இதற்காக ஆட்டுக்கல், அம்மி போன்ற பழைய வஸ்துகள் வந்திறங்கின. இவையெல்லாம் என்ன என்பது நவீன காலத்து தமிழ்ப் பெண்களுக்கே தெரியாது என்னும் போது வேற்றுக்கலாசாரத்தில் இருந்து வந்திருக்கும் பெண்களுக்கா தெரிந்திருக்கப் போகிறது? “இது என்னாது?” என்று மகாபலிபுரத்தை சுற்றிப் பார்க்கும் பாரின் டூரிஸ்ட் மாதிரி பரவசமடைந்தார் ஐஸ்வர்யா. ‘வடா.. வடா.. பருப்பு வடா’ என்று பிறகு குழந்தை போல் குதூகலகமாக குதித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவைப் பார்க்கும் போது, இவரா சற்று நேரத்திற்கு முன்னால் சந்திரமுகியாக அவதாரம் எடுத்திருந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. 

உண்மையில் இந்த டாஸ்க்கில் ‘தமிழ்க்கூட்டணி’தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆட்டுக்கல், அம்மி போன்றவை தமிழர்களுக்குத்தான் அதிக பரிச்சயம் என்பதோடு வடை போன்றவையும் இங்குதான் அதிக பிரபலம். ஆனால் விதி வேறு மாதிரியாக அமைந்தது. ஆச்சரியகரமாக யாஷிகா கூட்டணி பெற்றது. ரித்விகாவின் உதவியையும் வழிகாட்டுதலையும் குறிப்பிட வேண்டும். இரண்டு தரப்பிலும் சாம்பார் நன்றாக அமைந்திருக்க, விஜி தயாரித்த வடை சரியாக வேகவில்லை என்கிற காரணத்தினால் வெற்றியை யாஷிகா டீமிற்கு தந்தார் ரித்விகா. ‘வட போச்சே’ என்று விஜி வருந்தியிருக்கக்கூடும்.

ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2

இந்த விஷயத்தில் நேர்மையாக தீர்ப்பு சொன்ன ரித்விகாவின் குணத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். உணவை சிறப்பாக அலங்கரித்த பாலாஜியின் பொறுமையும் அர்ப்பணிப்பும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விஷயம். வெற்றிப்பரிசாக வந்திருந்த கேக்கை அனைவரும் இணைந்து கொண்டாடியது சிறப்பான காட்சி. 

‘ஜனனிக்காக நான் வருத்தப்படறேன்” என்று மீண்டும் பழைய பஞ்சாயத்தை தூசு தட்டிய ஐஸ்வர்யாவிடம், ‘விடு. அதான் டாஸ்க் முடிஞ்சுபோச்சே’ என்றார் யாஷிகா. ‘சில பேர் தனித்து தெரிவதற்காக சிலதை செய்வாங்க’ என்பதும் பிறகு அவர் உதிர்த்த அபிப்ராயம். பிறகு இருவரும் இணைந்து ஜனனியிடம் சென்று சமாதானப் பேச்சு நடத்தினார்கள். “நீ ஏன் அதை செஞ்சே.. அதனாலதானே நான் இதை செஞ்சேன்’ என்கிற ரீதியில் அந்தப் பஞ்சாயத்து சென்றது. “இது டாஸ்க்தானே. ஆளுங்களுக்கு அடிபட்டா என்ன ஆகறது?” என்று ஜனனி கேட்டது முக்கியமான கேள்வி. 

“ஐஸ்வர்யாவை எப்படி ஹாண்டில் பண்றதுதுன்னு தெரிஞ்சு போச்சு. யாஷிகா கரெக்ட்டா அதை செய்யறா. ஐஸ்வர்யாவோட போக்குல போயி சொன்னா கேட்டுக்கறா. விட்டுப் பிடிக்க வேண்டியதாயிருக்கு” என்றார் ரித்விகா. வடை செய்யும் சமயத்தில் ‘குழந்தை’ ஐஸ்வர்யாவைப் பார்த்ததில் இவர் நெகிழ்ந்திருக்க வேண்டும். ‘ஆமாம். நீதான் மெச்சிக்கணும்” என்று கையை உதறினார் பாலாஜி. 

ரத்தக் காயம், ரணகாயத்துடன் டாஸ்க் நடந்தாலும் அதன் மீது டிங்ச்சர் மட்டும் தடவி விட்டு ‘சரியாப் போச்சு’ என்று புன்னகைப்பதில் பிக்பாஸ் திறமைசாலியாக இருக்கிறார். ‘கடந்த டாஸ்க்குகளில் நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டீர்கள்” என்று போட்டியாளர்களை பாராட்டிய அவர், 550 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தில் இருந்த யாஷிகாவிற்கு 5 லட்சம் பணம் பரிசாக கிடைத்திருக்கும் தகவலைச் சொல்ல, யாஷிகா அதை நம்ப முடியாமல் திகைத்துப் போனார். இதைக் கேட்டு படு உற்சாகமானார் ஐஸ்வர்யா. எதிரணிக்கு இது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தாலும் வேறு வழியில்லாமல் இந்தக் கொண்டாட்டத்தில் அவர்கள் பங்கேற்க வேண்டியிருந்தது. ‘காசு… பணம்.. துட்டு ..மணி .. மணி.. என்ற பாடல் ஒலிபரப்பாக, அனைவரும் உற்சாகமாக நடனமாடினார்கள். ‘நல்ல வாயன் சம்பாதிச்சத, நாற வாயன் துன்னுறான், கணக்கு போட தெரியாதவன், காச வாரி இறைக்குறான்’ என்பது போன்ற வரிகள் ‘சேம் சைட் கோல்’ போடுவதாக அமைந்திருந்தன. 

சமையல் தொடர்பான இன்னொரு டாஸ்க். வீட்டில் யார் நன்றாக சமைக்கிறார்கள் என்ற பழைய டாஸ்க்கை தூசு தட்டி எடுத்தார் பிக்பாஸ். பாலாஜியின் பொங்கல் மற்றும் தக்காளி சட்னிக்கு சில வாக்குகள் கிடைத்தன. ‘ஃபாஸ்ட்டாக’ சமையல் செய்யும் விஜிக்கும் சில வாக்குகள். எனவே இருவருக்கும் சமமான வாக்குகள் கிடைத்தாலும் பாலாஜி பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்க, ‘கிச்சன் சாம்பியன்’ பட்டத்தை பெற்றார் விஜி. 

ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2

“நீ பணம் ஜெயிச்சதுல அவங்க முகமே மாறிடுச்சு. ரித்து மட்டும்தான் சந்தோஷப்பட்டா” என்று யாஷிகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. இருவரும் படுக்கையறையில் சோம்பலாக படுத்துக் கொண்டிருந்தார்கள். ‘பேட்டா.. பேட்டா.. ‘ன்னு பொண்ணு.. பொண்ணுன்னு சொல்லி ஏமாத்துறாங்க’ என்று ஐஸ்வர்யா சொல்லிக் கொண்டிருந்தார். அது பாலாஜியை குறிப்பதாக இருக்கலாம். மும்தாஜ் குறித்து சொல்லிக் கொண்டிருந்த புகாரை இப்போது பாலாஜிக்கு டிரான்ஸ்ஃபர் செய்து விட்டார் போலிருக்கிறது. 

காஃபி தொடர்பான அடுத்த டாஸ்க். (வடை சாப்பிட்டப்புறம் கா.ஃபி குடிக்கணுமில்லையா?!) சம்பந்தப்பட்ட பிராண்டின் வாசகம் பந்துகளில் ஒளிந்திருக்கும். அதை தேடிக் கண்டு பிடித்து ஒட்ட வேண்டும். எவர் முதலில் அதிக எண்ணிக்கையில் ஒட்டுகிறார்களோ, அவரே வெற்றியாளர். இதில் இரண்டு நபர்கள் மட்டும் பங்கேற்க முடியும். யாஷிகாவும் ரித்விகாவும் களத்தில் இறங்க, மற்றவர்கள் உதவி செய்தனர். இதற்காக பரிசாக வழங்கப்பட்ட காஃபி பவுடரை, அறிவிக்கப்படுதவற்கு முன்பே வந்து யாஷிகா எடுத்து விட ‘இந்த மாதிரி பறக்காவெட்டிகளை எந்த பிக்பாஸ் சீஸன்லயும் பார்த்திருக்கவே முடியாது’ என்று ஜாலியாக கமெண்ட் அடித்தார் பாலாஜி.  சில போட்டியாளர்கள் எப்படி நடப்பார்கள் என்று அவர் செய்து காட்டியது சுவாரஸ்யமான காட்சி. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

லக்ஸரி பொருட்களுக்காக 950 மதிப்பெண்கள் வழங்கப்பட, மட்டன், சூப் என்று தேர்ந்தெடுத்தனர். ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் தங்களிடம் வந்து பேசிய பஞ்சாயத்தைப் பற்றி ஜனனி, ரித்விகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘நான் ஏதாவது தப்பு பண்ணினேனா?” என்று யாஷிகாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. (செய்யறதையெல்லாம் செஞ்சிட்டு முகத்தை செந்தில் மாதிரி வெச்சுக்கறதுல மேடத்தை அடிச்சுக்கவே முடியாது!). சனிக்கிழமை பஞ்சாயத்து தினம் என்பதால் அதை எதிர்கொள்வதற்கான மனநிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை அவர்களின் உரையாடல்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. 

ஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்! #BiggBossTamil2

இன்று நாட்டாமை வரும் நாள். டபுள் எவிக்ஷன் இருக்கிறது. எவர் வெளியேறுவார்கள் என்பதையும், இந்த வாரத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் பற்றி நையாண்டி கலந்த கமலின் குறுக்கு விசாரணை, போன்றவற்றையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
 

அடுத்த கட்டுரைக்கு