ஜனனி, ஐஸ், ரித்து, விஜி... பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்..!? #VikatanSurvey | Who will win bigg boss tamil season 2 a short survey

வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (24/09/2018)

கடைசி தொடர்பு:11:23 (24/09/2018)

ஜனனி, ஐஸ், ரித்து, விஜி... பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்..!? #VikatanSurvey

ஜனனி, ஐஸ், ரித்து, விஜி... பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்..!? #VikatanSurvey

ஜூன் 17 ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் இரண்டாவது சீசன், இறுதி வாரத்தை எட்டியிருக்கிறது. ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா, மஹத், ரித்விகா, சென்றாயன், மும்தாஜ், மமதி, ஷாரிக், பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன், டேனியல், வைஷ்ணவி, நித்யா, பாலாஜி, ரம்யா என 16 போட்டியாளர்களோடு தொடங்கிய இரண்டாவது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக விஜயலட்சுமி வீட்டுக்குள் நுழைந்தார். பல கட்ட எவிக்‌ஷன்களுக்குப் பிறகு தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

பிக் பாஸ்

முதல் சீசனைப் போல் இல்லாமல் இந்த சீசனில் கூடுதலாக 5 நாள்களைச் சேர்த்து 105 நாள்களாக மாற்றியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழி பிக் பாஸ் ஃபைனலிலும் இதுவரை நடக்காத ஒரு விஷயம் பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் நடந்திருக்கிறது; ஃபைனலுக்கு முன்னேறியிருக்கும் 4 போட்டியாளர்களும் பெண்களே. இந்த `தேவதைகள் சூழ்’ போட்டியில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக வருவதற்கு தகுதியானவர் யார் என்கிற உங்கள் கருத்தை இந்த சர்வேயில் பதிவு செய்யுங்கள்.

loading...


டிரெண்டிங் @ விகடன்