Published:Updated:

பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரியாகும் மமதி சாரி, வைஷ்ணவி!

பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரியாகும் மமதி சாரி, வைஷ்ணவி!
பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரியாகும் மமதி சாரி, வைஷ்ணவி!

வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் பிக் பாஸ் ஷோ நிறைவுபெற இருக்கிறது. எவிக்‌ஷன் புராசஸ் எல்லாம் முடிவைடைந்து ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி நான்கு பேரும் இறுதிச்சுற்றில் இருக்கிறார்கள். இந்த வாரம், பெரிய அளவிலான டாஸ்க்குகள் அவ்வளவாக இருக்காது எனத் தெரிகிறது. நான்கு பேருக்கும் கிடைக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் வரும் ஞாயிறு அன்று டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட இருக்கிறார்.

சரி, இந்த வாரம் நான்கு போட்டியாளர்களும் என்ன செய்வார்கள்? விஜயலட்சுமி, ஜனனி, ரித்விகா மூன்று பேர் ஓரணியாகவும் ஐஸ்வர்யா தனியாளாகவும் இருக்கிற சூழலில், இவர்களின் பொழுது எப்படிப் போகப்போகிறது?

இன்றைய ப்ரமோ வீடியோ மூலம் அதுபற்றி க்ளூ கொடுத்திருக்கிறார், பிக் பாஸ். ரம்யா என்.எஸ்.கே., பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பது போல் காட்டப்பட்ட இன்றைய ப்ரமோ வீடியோ குறித்து விசாரித்தபோது, ரம்யா மட்டுமல்ல, மமதி சாரி, வைஷ்ணவி உள்ளிட்ட இதுவரை பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி தராத மற்றவர்களும் அடுத்தடுத்த நாள்களில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வர இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.