பிக்பாஸ் சீஸன் 2 நூறாவது நாளை எட்டியிருக்கிறது. ‘இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பது’ என்னும் சீரியஸான டாஸ்க்கை விடாமல் செய்திருக்கும் நம்மை நாமே ஒருமுறை பாராட்டிக் கொள்வோம். (இதுக்கு லக்ஸரி பட்ஜெட்லாம் கிடைக்காது!) இந்த நிகழ்ச்சியின் மூலம், நம்மிடமுள்ள எதிர்மறை குணாதிசயங்களைப் பற்றிய சுயபரிசீலனையை அடைவதே இதற்காக அளிக்கப்படும் நேரமுதலீட்டின் லாபமாகவும் நிகரப் பயனாகவும் இருக்க முடியும். மாறாக, சூழ்நிலைக் கைதிகளாக இருக்கும் போட்டியாளயர்களின் சிறு சறுக்கலையும் பிழைகளையும் மிகைப்படுத்தி மணிக்கணக்கில் விவாதிப்பது நேர விரயம்.
ஒரு பக்கம், மெகா ஊழல்களை செய்யும் அரசியல்வாதிகளைக் கூட விசுவாசத்துடன் மறுபடியும் அதிகாரத்தில் அமர்த்தி வைக்கும் நாம், இன்னொரு பக்கம் எளிய நபர்களின் சிறுபிழைகளைப் பெருந்தன்மையுடன் மன்னித்துக் கடக்காமல் கடுமையான குற்றவாளிகளாக அவர்களை அணுகி விதம் விதமான தீர்ப்புகளை எழுதும் முரண் வியப்பாக இருக்கிறது.
**
நூறாவது நாள். நாளை வெளியாகப் போகும் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்திலிருந்து ‘மழைக்குருவி’ என்கிற ரகளையான பாடலைப் போட்டார் பிக்பாஸ். இந்தப் பாடலை போட்டியாளர்களுக்கு அறிமுகமாகியிருக்க சாத்தியமில்லை என்றாலும் ரசித்து நடனமாடியது ரஹ்மான் ஸ்பெஷல். (சமீபத்திய சென்சேஷலான சிம்ட்டாங்காரன்’ பாடலைப் போட்டு போட்டியாளர்களை அதற்கு நடனமாடச் சொல்லியிருந்தால் இருப்பதிலேயே கடினமான டாஸ்க்காக அது இருந்திருக்கக்கூடும்).
“கும்பலா இருந்த வீடு.. எப்படி காலியாக இருக்கு” என்றபடி பிறகு நித்யா உள்ளே நுழைந்தார். மாமியார் வீட்டுக்குச் சென்று வருவது போல முன்னாள் போட்டியாளர்கள் அவ்வப்போது இங்கு வந்து செல்கிறார்கள். (எப்ப சார் ஓவியா வருவாங்க?!) “உன் புது ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு” என்று ஐஸ்வர்யாவைப் புகழ்ந்த நித்யா, ‘ரித்விகா.. உங்க மைக்கை மாட்டுங்க’ என்று அவரை கலாட்டா செய்தார். (தூக்கத்துல கூட மைக்கை மாட்டுற விசுவாசமான பொண்ணுங்க அது!). திட்டமிட்டபடி போஷிகாவுடன் பாலாஜி லாங்டிரைவ் இன்னமும் போகவில்லை என்பதையும் மொட்டை அவதாரம் அவருக்கு நன்றாக இருப்பதாக நினைப்பதாகவும் அதையே பின்பற்றச் சொல்லியிருப்பதாகவும் பேசிக்கொண்டிருந்தார் நித்யா. (கணவன்மார்களை மொட்டையடிப்பதில் அம்மணிகளுக்கு அத்தனை குஷி).
“நீங்க அப்பவே சொன்னீங்கள்ல.. நான் ஃபைனலுக்குப் போவேன்னு” என்று நித்யாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. இதை பாலாஜியிடமும் முன்பு கேட்ட நினைவு. விட்டால் பிக்பாஸிடமும் கேட்பார் போலிருக்கிறது. பிறகு இவர்கள் கூடி நடனமாடி மகிழ்ந்தார்கள்.
“ஐஸ்வர்யா.. கன்ஃபெஷன் ரூம் வாங்க” என்று பிக்பாஸ் சற்று கடுமையான குரலில் கூப்பிட்ட போதே தெரிந்து விட்டது, விஷயம் அத்தனை சீரியஸானது இல்லை என்று. உள்ளே சென்ற ஐஸ்வர்யா, ‘ஷாரிக் பையா’ அமர்ந்திருந்ததைப் பார்த்தவுடன் முதலில் திகைத்து பின்பு மகிழ்ச்சியடைந்தார். ஷாரிக்கின் புது லுக்கை மற்றவர்களும் சந்தோஷத்துடன் பாராட்டினார்கள். “என்னாச்சு.. ஐஷூ.. உனக்கு வெக்க வெக்கமா வருது. இந்த மாதிரி உன்னைப் பார்த்தில்லையே?” என்று நித்யா கலாய்க்க, அங்கிருந்து விலகி கழிவறைப் பக்கம் சென்ற ஐஸ்வர்யா “ஏன். பிக்பாஸ்.. நல்லாத்தானே போயிட்டிருந்தது?” என்பது போல் மகிழ்ச்சியில் சிணுங்கினார். ஷாரிக்கின் வருகை அவரிடம் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது போல.
“ஷாரிக்கிற்கு பொண்ணுங்க ஃபேன் ஃபாலோயிங் நிறைய இருக்கு” என்று தன் அலப்பறையைத் தொடங்கினார் நித்யா. ‘ஷாரிக் பையா பாவம்’ –ன்ற வார்த்தை டிரெண்டிங்கில் இருந்தது என்ற தகவலையும் அளித்த அவர், “ஐஷூ.. உனக்கு நெறைய பாசிட்டிவ் விஷயங்கள் காத்திட்டிருக்கு” என்றார். (நெஜம்மாவா சொல்றீங்க?) "எனக்கு பசங்க ஃபேன் ஃபாலோயிங்” இருக்கா?” என்று ஐஸ்வர்யா மிக ஆவலாகக் கேட்க “ஆமாம். நிறைய அங்கிள்ஸ் பேரவையே அமைச்சிருக்காங்க” என்று அந்த ஆவலில் மண்ணையள்ளிப் போட்டார் நித்யா. (எப்படித்தான் கண்டுபிடிக்கறாய்ங்களோ?!) ‘கடவுளே’ என்று அலுத்துக்கொண்டார் ஐஸ்வர்யா.
இந்த நூறு நாள் ஷோவில் ஐஸ்வர்யாவின் பல்வேறு தருணங்கள் அடங்கிய வீடியோவை பிக்பாஸ் ஒளிபரப்பினார். இதையும் யாரோ ஒரு அங்கிள்தான் எடிட் செய்திருக்க வேண்டும். அத்தனை அருமையான தொகுப்பாக அது இருந்தது. ஜனனி குறிப்பிட்டதைப் போல பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே ஐஸ்வர்யாவின் புன்னகை மிக அழகானது. கோபத்தில் வீழும் போதுதான் அது நாராசமாகிறது. இந்த வீடியோவில் எந்தப் பகுதி பிடித்தது என்று போட்டியாளர்கள் பேசும் போது ‘ஐஸ்வர்யாவின் புன்னகை பிடித்திருந்தது’ என்று ஜனனி சொல்ல, ‘நான் கெத்தாக வரும் காட்சிகள்தான் பிடித்திருந்தன’ என்பது போல் ஐஸ்வர்யா பதிலளித்தார். ‘ஷாரிக் பையா.. பாவம் பையா .’சீன்தான் எனக்குப் பிடித்திருந்தது’ என்றார் நித்யா.
“உனக்கு யாரையாவது பிடிக்கலைன்னா அங்கிருந்து விலகிடலாம். நீ என்ன பண்றேன்னா.. அவங்க தூண்டி விடும் போது ஈஸியா விழுந்துடறே” என்று ஐஸ்வர்யாவுக்கு உபதேசித்துக்கொண்டிருந்தார் நித்யா. “எனக்கு இந்த வீட்ல பிடிச்ச நபர் யாஷிகா மட்டும்தான். மத்தவங்கள்லாம் மேட்டர் இல்ல” என்றார் ஐஸ்வர்யா. (மனதில் நினைப்பதை அப்படியே வெளியில் சொன்னால், அதைச் சரியான தொனியில் புரிந்துகொள்பவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள். மாறாக ‘எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்’ என்று மையமாக நடிப்பவர்களையே உலகம் விரும்பும். இந்த எளிய உண்மை ஐஸ்வர்யாவுக்குப் பிடிபடவில்லை). “அப்படிச் சொல்லாதே. இந்த வீட்ல இருந்து போனவங்க கூட உன்னைப் பத்திக் கவலைப்படறாங்க தெரியுமா?” என்று நித்யா தொடர்ந்த போது ‘எல்லோரும்’ என்று திருத்தினார் ஷாரிக். “முதுகுல குத்தினவங்களும் இருக்காங்க. என்னால் அதையெல்லாம் மறக்க முடியலை’ என்றபடி ‘இதைப் பற்றிப் பேச வேண்டாமே” என்ற சமிக்ஞையோடு அங்கிருந்து விலகினார் ஐஸ்வர்யா. (மனதுக்கு உண்மையாக இருப்பது ஒருவகையில் நல்ல இயல்புதான் என்றாலும் ‘தான் நினைப்பதுதான் சரி’ என்கிற முயலுக்கு மூன்று கால் மோடிலேயே இருக்காமல் இதர கோணங்களையும் பரிசீலிப்பதுதான் முதிர்ச்சியின் அடையாளம். அது ஐஸ்வர்யாவுக்குப் பல சமயங்களில் இருப்பதில்லை).
“சரி. ஜாலியான விஷயங்களைப் பற்றிப் பேசலாம்” என்று நித்யா உரையாடலைத் தொடர்ந்த போது ஐஸ்வர்யாவுக்குள் ஓர் இசையமைப்பாளர் ஒளிந்திருக்கும் விஷயம் வெளியே வந்தது. தானே உருவாக்கிய ஒரு மெட்டை அவர் அழகாக ஹம்மிங் கலந்து பாட மற்றவர்கள் பாராட்டினார்கள். ‘லிரிக்ஸ் யாஷிகாவுடையது. டியூன் என்னோடது” என்று பெருமை பொங்கச் சொன்னார் ஐஸ்வர்யா. ஒருவர் ரசித்துப் பாடிக்கொண்டிருக்கும், தன் வேலையை நிறுத்தி தொந்தரவு செய்யாமல் பாடுபவரை கவனிப்பது ஒருவகையான நாகரிகம். நுண்ணுணர்வின் அடையாளம் இது. ஆனால் அங்குமிங்கும் நகர்வதும், ‘அந்தத் தண்ணியை எடுங்க’ என்று இடையூறு செய்வதுமாக இருந்தார் ஷாரிக் பையா.
**
‘இதுவரையான போட்டியில் தங்களைப் பாதித்த நிகழ்வுகள், சந்தர்ப்பம் கிடைத்தால் திரும்பிச் சென்று மாற்றக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டும்’ என்று அடுத்த டாஸ்க்கை தந்தார் பிக்பாஸ். மூன்று விஷயங்களுக்காக வருத்தப்பட்டார் ஜனனி. “ஒன்று, போர் டாஸ்க்ல மும்தாஜ் கூட விவாதம் வந்த போது காதைப் பொத்திக்கிட்டு விலகிட்டேன். அப்படிச் செய்யாம பொறுமையா விவாதிச்சிருக்கலாம். இரண்டு, ‘மண்வாசனை டாஸ்க்கில் ஐஸ்வர்யாவுக்கு இணையாகக் கோபப்பட்டு டவரை தள்ளி உடைக்காம தொடர்ந்து விளையாடியிருக்கலாம். மூன்று, மக்கள் டாஸ்க்கில் பின்வாங்காம இருந்திருக்கலாம். இப்ப வாய்ப்பு கிடைச்சா விட்டுத்தந்திருக்க மாட்டேன்” என்றார்.
அடுத்ததாக வந்தவர் ஐஸ்வர்யா. “ஹிட்லர் டாஸ்க்ல சில விஷயங்கள் தப்பா நடந்துச்சி. ஆக்டிவிட்டி ஏரியால இருந்த டிவில பார்த்த சில காட்சிகளைப் பார்த்து எமோஷன் ஆகி உடனே ரியாக்ட் பண்ணிட்டேன். ‘போன் பூத்’ டாஸ்க்கில் தப்பான ஸ்ட்ராட்டஜி யூஸ் பண்ணினேன். மும்தாஜ் உள்ளிட்ட சிலரின் அன்பை சமயங்களில் தவறாக நினைத்திருக்கிறேன்” என்று மூன்று பிழைகளைப் பற்றிய வாக்குமூலத்தை அளித்தார்.
“திருடன் – போலீஸ்’ டாஸ்க்ல நான் மக்கள் டீம்ல இருந்தேன். மத்தவங்களுக்குச் சாப்பாடு வித்தாதான் சம்பாதிக்க முடியும்-ன்ற காரணத்தினால கறாரா இருந்தோம். அவங்களும் பாவம் மூணு நாளா சாப்பிடாம விளையாடினாங்க. இப்ப யோசிக்கும் போது அது ரொம்பத் தப்பு –ன்னு தெரியுது. இரண்டாவது, மத்தவங்க எல்லோருமே பாதுகாப்பா, பொன்னம்பலம், வைஷ்ணவின்னு நாமினேட் செய்யறப்போ, நான் மட்டும்தான் அதை உடைச்சு, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை நாமினேட் பண்ணினேன். அதனால அவங்க எங்கிட்ட பேசலை. அந்த விஷயம் என்னைக் காயப்படுத்திச்சு. மூணாவது, ஹிட்லர் டாஸ்க்ல பாலாஜியண்ணா மேல குப்பை போடப்படும் போது தட்டிக் கேட்டிருக்கணும். என்ன பண்றது –ன்னு தெரியாம இருந்தது தப்பாத் தோணுது” என்று மூன்று விஷயங்களை சொல்லி முடித்தார் ரித்விகா.
அடுத்ததாக வந்த விஜி, “நான் கோபத்தை வெளிப்படுத்துறது ரொம்ப ஹார்ஷ்ஷா இருக்குன்னு சொல்றாங்க. வீட்லயும் அப்படித்தான். நெறய பேர் இதைச் சொல்லியிருக்காங்க. இதை மாத்திக்க டிரை பண்றேன். ரேங்கிங் பத்தி ஒரு விவாதம் போயிட்டிருந்தப்ப, இரண்டாவது இடத்தைக் கேக்கறது கூட சாமிக்குத்தம்-ன்ற மாதிரி சூழ்நிலை இருந்தது. வைல்ட் கார்ட் என்ட்ரி -ன்ற காரணத்தைச் சொல்லிட்டே இருந்தாங்க. முதலிடத்துக்கு நான் தகுதியானவள் –னு விவாதம் பண்ணியிருக்கணும்-னு இப்பத் தோணுது. மூணாவது, இங்க முதல் நாளே வந்திருக்கணும். தப்புப் பண்ணிட்டேன்” என்றார்.
விருந்தினர்களையும் டாஸ்க்கில் ஈடுபடுத்துவது நேரக்கடத்தல்தான். ஆனால் பிக்பாஸ் விதிகளை மீறிய ஆசாமியாயிற்றே, அடுத்ததாக வந்தவர் ஷாரிக். “நான் நடுவராக இருந்தப்போ மும்தாஜை கத்தினது தப்புன்னு இப்ப புரியுது. ‘பொம்மலாட்டம்’ டாஸ்க்ல நீங்க அடிச்சிக்கிட்டது எல்லாம் ரொம்பக் கேவலமா இருந்தது. ஸ்போர்ட்டிவ்வா விளையாடியிருக்கலாம். கோலமாவு டாஸ்க்கும் அதே போலத்தான். ஜாலியா விளையாடியிருக்கலாம்” என்று சொல்லி முடித்தார்.
“முதல் வாரத்துல நான் மத்தவங்க கிட்ட அதிகம் பழகலை. மத்தவங்க எப்படி –ன்னு கவனிக்கறதுலயே போயிடுச்சு. அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் மேலும் சில வாரங்கள் நீடித்திருப்பேன். ‘ராணி மகாராணி’ டாஸ்க்கில் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் குப்பை கொட்டியது தவறான விஷயம். ரொம்ப ஹர்ட் ஆச்சு. இதுல ஐஸூவோட தவறு 30 – 40 சதவிகிதம் இருந்தாலும் மத்தவங்க வந்து நிச்சயம் தடுத்திருக்கணும்.” என்று நித்யா சொல்லிக்கொண்டிருக்கும் போது அவரை இடைமறித்த ஷாரிக் ‘அது டாஸ்க்கா, இல்ல பர்சனலா –ன்னு அப்ப தெரியாது” என்கிற நியாயமான காரணத்தைச் சொன்னார். (விளையாட்டின் விதிக்குள் நிற்கும் போது அப்படியெல்லாம் ஒரு சர்வாதிகாரியை எளிதில் இடைமறித்து விட முடியாது என்கிற வகையில் ஷாரிக் குறிப்பிடுவது நியாயமான விஷயம். அப்படிச் செய்தால் ‘டாஸ்க்கை மீறிய காரணத்துக்காக” பிக்பாஸ்ஸின் ஆட்சேபனைக்கு ஆளாக வேண்டியிருக்கும். செய்யாவிட்டால் பிறகு கமலின் பஞ்சாயத்துக்கும் தலைகொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் இருக்கிறது).
**
‘ஸ்ட்ரேடஜி –ன்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்க பார்க்கலாம். அந்த வார்த்தையே இங்க மதிப்பிழந்து போச்சு” என்று ஆரம்பித்தார் ஷாரிக். பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் கூட வெளியில் சென்று திரும்பினால் தங்களை நீதிபதிகளாக நினைத்துக் கொள்வது நகைமுரண். ஒரு விஷயத்தின் உள்ளே இருக்கும் போது அதன் அபத்தங்கள் நமக்குத் தெரிவதில்லை. விலகி நின்று பார்த்தால்தான் உணர முடிகிறது. எனில் உள்ளே இருக்கும் போதே விலகலான மனநிலையில் இருந்தால் பல பிழைகளை முன்பே தடுத்து விட முடியும். ஷாரிக் குறிப்பிட்டது ஐஸ்வர்யாவைப் பற்றியதாக இருக்கலாம்.
நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.
- Bigg Boss Tamil Calendar
- Mon
- Tue
- Wed
- Thu
- Fri
- Sat
- Sun
- Day 1
- Day 2
- Day 3
- Day 4
- Day 5
- Day 6
- Day 7
- Day 8
- Day 9
- Day 10
- Day 11
- Day 12
- Day 13
- Day 14
- Day 15
- Day 16
- Day 17
- Day 18
- Day 19
- Day 20
- Day 21
- Day 22
- Day 23
- Day 24
- Day 25
- Day 26
- Day 27
- Day 28
- Day 29
- Day 30
- Day 31
- Day 32
- Day 33
- Day 34
- Day 35
- Day 36
- Day 37
- Day 38
- Day 39
- Day 40
- Day 41
- Day 42
- Day 43
- Day 44
- Day 45 Part 1
- Day 45 Part 2
- Day 46
- Day 47
- Day 48
- Day 49
- Day 50
- Day 51
- Day 52
- Day 53
- Day 54
- Day 55
- Day 56
- Day 57
- Day 58
- Day 59
- Day 60
- Day 61
- Day 62
- Day 63
- Day 64
- Day 65
- Day 66
- Day 67
- Day 68
- Day 69
- Day 70
- Day 71
- Day 72
- Day 73
- Day 74
- Day 75
- Day 76
- Day 77
- Day 78
- Day 79
- Day 80
- Day 81
- Day 82
- Day 83
- Day 84
- Day 85
- Day 86
- Day 87
- Day 87
- Day 89
- Day 90
- Day 91
- Day 92
- Day 93
- Day 94
- Day 95
- Day 96
- Day 97
- Day 98
- Day 99
- Day 100
- ...
“இந்த வீட்டில் நிறைய டாமினேஷன் இருந்துச்சு’ என்று அடுத்த அலப்பறையைத் தொடங்கினார் ஐஸ்வர்யா. ‘இங்க எல்லோரும் சமம்தான். ஒருத்தரை டாமினேஷன் செய்ய விடறது நம்ம தப்பு” என்று சரியான பாயின்ட்டைச் சொன்னார் விஜி. “முதல் நாலு வாரத்துல மும்தாஜ் பத்தி நான்தான் பேசிட்டு இருந்தேன். மத்தவங்க யாரும் பேசலை” என்று பழைய கதையைப் பற்றி அனத்தினார் நித்யா.
“யாராவது பிரச்னைல இருக்கும் போது மும்தாஜ் வம்படியா போய் ஆறுதல் சொல்வாங்க. அன்பு செலுத்துவாங்க. அதனாலேயே அவங்க ஆதிக்கம் செலுத்தறது ஒரு காரணமா இருந்தது” என்று நித்யா சுட்டிக் காட்ட, ‘கண்டுக்காமப் போயிருந்தா பிரச்னை இருந்திருக்காது” என்று ரித்விகா சொல்ல, “அவங்க பின்னாடி எல்லோரும் போனதுதான் தப்பு” என்றார் விஜி. “யார் மேலயும் தப்பு இல்ல. அப்பத்திய சூழ்நிலை அப்படி இருந்தது” என்றார் ஐஸ்வர்யா. (ஆறுதல் சொன்னது ஒரு குத்தமாய்யா?!).
வந்தது முதலே ஷாரிக்குக்கும் ஐஸ்வர்யாவும் சம்பிரதாயத்துக்காக புன்னகைத்தாலும், சமயங்களில் உண்மையாகவே மகிழ்ச்சியடைந்தாலும் அதற்குள்ளே ஒரு விலகலும் இருந்தது. பின்னர் இருவருக்கும் நடந்த உரையாடலில் அது வெளிப்பட்டது. ‘என்னைப் பத்தி நீ என்னல்லாம் பேசியிருக்க தெரியுமா?. யாஷிகா கூட என்னைப் பத்திப் பேசினா. ஆனா விட்டுத்தரலை” என்று ஆரம்பித்தார் ஷாரிக். ‘மனசுல இருக்கறதை அப்படியே சொல்லிடுவேன். என்னைப் பத்தி உனக்குத் தெரியும்தானே?” என்று ஆரம்பித்து அது பற்றிய விளக்கத்தை ஐஸ்வர்யா அளிக்கும் முன்னரே ‘சரி விடு’ என்று அவர் கூப்பிட கூப்பிட அங்கிருந்து ஷாரிக் விலகிச் சென்றது அநியாயம். (ஒரு சண்டையைக் கூட ஒழுங்காப் போட மாட்டியா?’ என்ற திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது). ஷாரிக்கும் இந்த வீட்டில் பல நாள்கள் இருந்திருக்கிறார். இந்தச் சூழலும் அதன் அழுத்தமும் அவருக்கும் தெரியும். எனில் இந்தப் பின்னணியில் நடந்த உரையாடலை எல்லாம் தீவிரமாக எடுத்துக்கொண்டு - அதிலும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போட்டியாளரிடம் – விசாரிப்பது சம்பந்தப்பட்டவருக்கு மனரீதியான பின்னடைவை ஏற்படுத்தும் என்பது கூடவா தெரியாது? அதிலும் ஐஸ்வர்யா போன்ற டெரர் ஆசாமிகளிடம் இது உடனே வேலை செய்யும். ஆம். அப்படித்தான் செய்தது. இந்த உரையாடலுக்குப் பின்னர் இயல்பாக இருப்பது போல் இருந்தாலும் ஐஸ்வர்யா நார்மலாக இல்லை என்பதை அறிய முடிந்தது. ‘என்ன ஆச்சு?” என்று ஐஸ்வர்யாவை கவலையுடன் விசாரித்தார் ரித்விகா. ‘பச்சோந்தி’ மேட்டரை நான்தான் சொன்னேன் என்று ஜனனியிடம் நேர்மையாக ஒப்புக்கொண்டார் ஷாரிக்.
**
நேர்மையின் திலகமான ரித்விகா பற்றிய குறும்படத்தைப் போட்டார் பிக்பாஸ். ‘நீங்கள் உள்ளுக்குள் பேசிக்கொண்டதிலிருந்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியது வரை, கோபம், மகிழ்ச்சி, கண்ணீர், புரிதல் என்று உங்களிடமிருந்து வெளிப்பட்ட பல்வேறு தருணங்கள்’ என்கிற குறும்பான முகவுரையுடன் வீடியோ தொடங்கியது. ரித்விகா ஏன் இறுதிப்போட்டிக்குத் தகுதியானவர் என்பதற்கான தடயங்கள் அந்தக் குறும்படத்தில் இருந்தன. ஒரு நல்ல, சராசரியான திராவிட முகம் ரித்விகாவுடையது. மிக இயல்பான அழகு. அது தொடர்பான சாட்சியங்களும் குறும்படத்தில் இருந்தன. ‘ஒன்ஸ் மோர்’ என்றார் நித்யா. உண்மைதான். அந்தத் தொகுப்பு சிறப்பாக அமைந்திருந்தது.
போட்டியாளர்களுக்கு அவரவர்களின் உறவுகளும் குடும்பமும் நட்பும் வாழ்த்துச் சொன்ன வீடியோவை இன்ப அதிர்ச்சியாகக் காண்பித்தார் பிக்பாஸ். அவர்களுடைய நோக்கில் இது உண்மையிலேயே மகிழ்ச்சி தருவதாக இருக்கும். விஜியின் வீடியோவில் ஒருவர் ‘ஹாய் ரித்து’ என்று தவறுதலாக ஆரம்பித்தது சுவாரஸ்யமான காமெடி. தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான அகத்தியன், தன் மகள் விஜிக்கு வாழ்த்து சொன்ன விதம் அற்புதம். ‘விளையாட்டில் ஜெயிப்பதை விடவும் மக்களின் மனதில் இடம்பிடிப்பதுதான் முக்கியம்’ என்று அவர் சொன்னது சிறப்பு. ‘மற்ற போட்டியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்தைச் சொல்’ என்று சொன்னது அவர் மட்டுமே.
நித்யா மற்றும் ஷாரிக்கின் நேரம் முடிந்ததாக பிக்பாஸ் அறிவிக்க ‘வெளியில் வாங்க. பெரிய சர்ப்ரைஸ் இருக்கு’ என்று தொடர்ந்து சொன்ன ஷாரிக் அது என்ன என்பதைச் சொல்லாமலேயே சென்று விட்டார். இரவில் விளக்குகள் அணைக்கப்பட்டும் சாப்பிட வராமல் இருந்த ஐஸ்வர்யாவை, ரித்விகா சாப்பிட வரச் சொல்லி அழைப்பதுடன் இன்றைய நாள் முடிந்தது.
இனி வரும் நாள்களில் எவ்வித கொடூர டாஸ்க்குகளையும் அளிக்காமல், ஒவ்வொரு போட்டியாளரின் நிறை, குறைகளை பார்வையாளர்கள் அழுத்தமாக உணரும்படியாகவும், எல்லாவற்றையும் மீள்நினைவுடன் திரும்பிப் பார்க்கும் படியாகவும் பிக்பாஸ் செய்தால் நல்லது. இறுதிப் போட்டியாளரைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதற்கு இவை உதவும்.