Published:Updated:

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2
ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ளும் அதிர்ஷ்டம் அடித்தால் சம்பந்தப்பட்டவருக்கு, ஒரு லக்னத்தில் 9 கிரகங்களும் உச்சம் பெற்ற அதிர்ஷ்டம் கொட்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால் சீஸன் 1 மற்றும் 2 போட்டியாளர்கள் அந்த வீட்டையே வெட்டியாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை வராதவர்கள்தான் உண்மையிலேயே பிஸியோ? Alumini meeting-ஐ நினைவுப்படுத்துவது போல் இன்றைய தினம் இருந்தது. இறுதி நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் போலவும் அமைந்திருந்தது. முன்னாள் போட்டியாளர்களில் நாம் நீண்ட நாள்கள் காணாமல் இருந்ததில் அனந்த் ஐயா வந்திருந்தாக.. மமதியம்மா வந்திருந்தாக.. (புது) மாப்பிள்ளை டேனி கூட வந்திருந்தாக… 

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2103-ம் நாள். தொலைக்காட்சியில் தெரிந்த கமலைப் போலவே தானும் செய்து கொண்டிருந்தார் ரித்விகா. இறுதிப் போட்டியாளர்கள் நால்வருமே Stockholm syndrome-ல் இருந்தது போல் பட்டது. இதில் ஐஸ்வர்யாவின் நிலைமைதான் உச்சம். ‘எனக்கு யாரைத் தெரியும், நான் எங்கே போவேன்’ என்கிற கெளரவம் சிவாஜி மாதிரியே அனத்திக் கொண்டிருக்கிறார். “இன்னமும் ரெண்டு நாள்தான். அடுத்த வாரம் அவங்கவங்க வீட்ல இருப்போம்” என்று சோகத்துடன் ரித்விகா சொல்லிக் கொண்டிருந்ததை ஜனனியும் ஆமோதித்தார். ஐஸ்வர்யா இரவில் தூங்குவதேயில்லையாம். 
 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


ஒவ்வொரு போட்டியாளரும் போட்டியிலிருந்து விலகும் போது தன்னுடைய செடியை எவருக்காவது அன்புடன் பரிசளித்து விட்டுச் செல்வார். அவர் அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமாம். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் நாலைந்து மாயிலைகளை செருகினது மாதிரி ‘தேமே’வென்று இருக்கும் அதை பராமரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த வகையில் அதிகச் செடிகளை இப்போது எந்தப் போட்டியாளர் வைத்திருக்கிறார் என்று பார்த்தார்கள். இந்த அறிவிப்பு வரும் போது புதிய போட்டியாளரான விஜி, நம்பியார் போல காமிராவைப் பார்த்தார். அவருக்கு செடி இல்லை. பொன்னம்பலம் தந்து சென்றதோடு தன்னுடைய செடியையும் சேர்த்து இரண்டு செடிகள் இருப்பதாக ஜனனி சொன்னார். ஐஸ்வர்யாவுக்கும் அதேதான். ஷாரிக் தந்து சென்றதோடு இரண்டு. ரித்விகாவுக்கும் அதே. சென்றாயன் தந்து சென்றதோடு இரண்டு. ஆக பரிசை சமமாக அளிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

ரித்விகாவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் ‘என்ன சொல்ல விரும்பறீங்க?” என்று பாசத்துடன் கேட்டார். “ரொம்ப கஷ்டமா இருக்கு. கேம் ஸ்டார்ட் பண்ணும் போது ஒண்ணும் புரியலை. இதுல மைக்கை மிஸ் பண்றதுதான் பெரிய கஷ்டம். நூறு நாள் கூட இருந்து உடலுறுப்பு மாதிரியே ஆயிடுச்சு. ‘இவன்.. அவன்’ ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டேன். பெட்ஷீட் போட்டு பக்கத்துல தூங்க வெச்சிருக்கேன். (மம்மு ஊட்டினீங்களா ரித்து?!) எனக்கு உங்களைப் பார்க்க வேண்டாம். குரல் மட்டும் போதும். உங்க குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று ரித்விகா கண்கலங்கினார். (நினைவுச்சின்னமா ஒரு மைக்கை கொடுக்கலாம்தான். எண்பதாயிரமாமே?!). ரித்விகாவின் நோக்கில் அவருடைய நெகிழ்ச்சியையும் உணர்வையும் புரிந்துகொள்ள முடிந்தது. 

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2“எந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் ‘கரகர குரலோன்’. (இந்தக் குரல் பிடிக்குதாமாம்!) “மனிதர்களை புரிஞ்சுக்க முடிஞ்சது. அம்மா, அப்பா மேல எத்தனை அன்பு வெச்சிருக்கேன்னு இப்பத்தான் தெரிஞ்சது. விட்டுக்கொடுக்கறது எத்தனை சந்தோஷம்-னு தெரிஞ்சுக்கிட்டேன்’ என்று பல விஷயங்களைச் சொன்னார் ரித்விகா. ‘மக்களுக்குக்கும் ரசிகர்களுக்கும் (பார்ரா!) என்ன சொல்ல விரும்பறீங்க?” என்றார் பிக்பாஸ். ‘இந்த அளவுக்கு என்னைக் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி. என்ன செய்யணும்னு உங்களுக்குத் தெரியும். இறுதிப் போட்டியிலும் உங்கள் ஆதரவு தேவை’ என்று கூறி முடித்தார். 

எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று கதவு திறக்க, இணையதள போட்டியில் வென்ற இரு நபர்கள் உள்ளே வந்தார்கள். வெற்றிக் கூப்பனை விஜிக்குத் தந்து விட்டு சிறிது நேரம் பேசி விட்டுச் சென்றார்கள். 

அடுத்ததாக ஐஸ்வர்யாவை கன்பெஃஷன் ரூமுக்கு அழைத்தார் பிக்பாஸ். பொதுவாக பிக்பாஸ் அழைத்தால் போட்டியாளர்களுக்குத்தான் மனம் படபடக்கும். ஆனால் ஐஸ்வர்யா விவகாரத்தில் பிக்பாஸிற்கே படபடத்திருக்கலாம். இரண்டு பேரும் அத்தனை பேசியிருக்கிறார்கள் போல. ‘நூறு நாள் பயணத்தில் எத்தனையோ உணர்ச்சிகளைக் காட்டியிருக்கிறீர்கள். இதில் உண்மையான ஐஸ்வர்யா எது?” என்ற வில்லங்கமான கேள்வியைக் கேட்டார் பிக்பாஸ். “எல்லாமே உண்மைதான். சிரிச்சிட்டே இருக்கத் தெரியாது. ஒருபக்கம் கோபமும் வரும். எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்-ன்றதுதான் என் ஆசை. இங்க வந்தே தமில் நள்ளா கத்துக்கிட்டேன்’ என்ற வெடிகுண்டு தகவலையும் இறுதியில் சொன்னார் ஐஸ்வர்யா. 

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2“மனம் விட்டுப் பேசச் சொன்னா என்ன சொல்வீங்க ஐஸ்வர்யா?” என்றார் பிக்பாஸ்.(பயபுள்ள வில்லங்கமா ஏதோ கேக்குதே. இது மனசிலயும் ஏதோ இருக்குமோ?) “ 6 வருஷம் தமிழ்நாட்டில் நிறைய போராடியிருக்கேன். யாருக்கும் என்னைத் தெரியாது. இங்க வந்த பிறகு என் தப்புல்லாம் தெரியுது. 103 நாள்களுக்குப் அப்புறம் என் தப்புல்லாம் சரிபண்ண முயற்சி செய்வேன். என் லைஃபை மாத்தினதுக்கு நன்றி. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனா வேற வீட்டுக்குப் போவா. இந்த வீட்டை விட்டுப் போக கஷ்டமா இருக்கு. இந்த வீட்டை திரும்பப் பார்க்க முடியுமா? வீட்டையும் உங்களையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். இந்த வீட்ல இருந்து ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் எடுத்துட்டுப் போவேன். மஹத் மற்றும் யாஷிகா. நீங்கதான் பிக்பாஸ் என் ஃபேவரைட்.” என்றெல்லாம் ஐஸ்வர்யா உணர்ச்சிகரமாகச் சொல்லிக் கொண்டிருக்க, எதிர் பக்கமிருந்து சத்தமே வரவில்லை. சிவாஜி மாதிரி வாயைப் பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுகிறாரோ என்னமோ. (ஆனால் பிக்பாஸ் மீது பொறாமை உருவாகி காதில் புகை வந்ததென்னமோ நிஜம்). 

அடுத்த நேர்காணலுக்கு ஜனனியை அழைத்தார் பிக்பாஸ். அத்தனை பெரிய சோபாவில் எலிக்குஞ்சு மாதிரி அமர்ந்திருந்தார் ஜனனி. “இந்த வீட்டில் உங்களுக்குப் பிடித்தமான இடம் எது?” என்று கேட்கப்பட்டது. ‘கீழே அமர்ந்து டேபிளில் சாப்பிடும் இடமும், வாக்குமூல அறையும்” என்றார் ஜனனி. “எதை மிஸ் பண்ணுவீங்க?” என்ற கேள்விக்கு ‘உங்க குரல்தான். வீட்டுக்குப் போனாலும் தேடுவேன்” என்றார். (பார்யா.. பிக்பாஸூக்கு உடம்பெல்லாம் மச்சம் போல). “இந்த ஷோவும் வீடும் எந்த அளவுக்கு உங்களை மாற்றியிருக்கிறது?” என்று கேட்கப்பட்டதற்கு ஜனனி சொன்னது முக்கியமானது. “இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டும் இல்ல. ஓர் அனுபவம். வாழ்நாள் அனுபவம். இதில் ஒரு பங்காக இருந்ததில் மகிழ்ச்சி. எனக்குள்ளயும் பொறுப்புஉணர்வு கூடியிருக்கு. பிக்பாஸூக்கு முன், பின் என்று என் வாழ்க்கை வரலாற்றை எழுதலாம்’ என்று சொல்லி பிக்பாஸை புல்லரிக்க வைத்தார்.  

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2**

சிறிது நேரத்தில் அனந்த் வைத்தியநாதன், மமதி, பாலாஜி ஆகியோர் வீட்டுக்குள் வர போட்டியாளர்கள் மகிழ்ச்சியானார்கள். ‘என்ன வேற டிரஸ் போட்டுட்டு திரும்ப வந்துட்டீங்க?” என்று இவர்கள் பாலாஜியை விசாரிக்க “என்ன பண்றது, லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன்னு சொல்லிட்டீங்க. திரும்ப வந்துதானே ஆகணும்” என்றார். பரஸ்பரம் ஒருவரையொரு நலன் விசாரித்துக் கொண்டார்கள். பாலாஜியின் புது லுக்கை அனைவரும் புகழ்ந்தார்கள். “ஹேர்கலரிங் உள்ளிட்ட எந்த டாஸ்க்கா இருந்தாலும் நான் செஞ்சிருப்பேன்’ என்றார் மமதி. (இனிமே பேசி என்ன புண்ணியம்!). ‘முடியை எடுக்கறது –ன்னா நான் செஞ்சிருக்க மாட்டேன்’ என்றார் அனந்த். “பெண் பார்வையாளர்கள் அதிகம் இருப்பதால் இறுதிப் போட்டியில் பெண்கள் தேர்வானது ஒரு காரணமாக இருக்குமோ?” என்றொரு லாஜிக்கை முன்வைத்தார் அனந்த். 

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2

.


அதன் பிறகு இசை ஒலிக்க, அனைவரும் வாசலில் வந்து காத்திருக்க, ஷாரிக், வைஷ்ணவி, ரம்யா ஆகியோர் ஸ்டோர் ரூம் வழியாக உள்ளே நுழைந்தார்கள். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா மட்டும் தனியாக எங்கோ சென்றார். ஷாரிக்கைத் தவிர்க்க முயன்றது போல் பட்டது. 

‘மக்களே இது எந்த மாதிரியான இடம் தெரியுமா? உள்ளே இருந்தாத்தான் தெரியும். கொடுத்து வெச்சிருக்கணும்’ என்று திருத்தலங்களைப் பற்றி விளக்கும் ‘கைட்’ மாதிரி காமிராவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தார் அனந்த். “நான் போனப்புறம் நடந்த டாஸ்க் எல்லாம் பார்த்தேன். நான் இருந்திருந்தா சுவரேறி குதிச்சி ஓடி தப்பியிருப்பேன்” என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அனந்த். ஜனனி செய்ய முயன்ற பொங்கலை ஏதோ கொலை முயற்சி மாதிரி விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி. மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இசை ஒலித்ததற்குப் பின்னால் அட்டகாசமான ஒப்பனையுடன் யாஷிகா உள்ளே வர, அவருடைய `செல்ல மகள்' உடனே ஓடிச் சென்று கட்டிக் கொண்டார். 

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2


பிறகு ஸ்டோர் ரூம் வழியாக நித்யாவும் டேனியும் வந்தார்கள். அனந்தின் கண்களைப் பொத்தி விளையாடினார் டேனி. அனைவரையும் ‘ப்ரீஸ்’ செய்தார் பிக்பாஸ். பிறகு மஹத்தும் சென்றாயனும் வந்தார்கள். உறைந்திருந்தவர்களின் மேல் இவர்கள் பல குறும்புகளைச் செய்தார்கள். ஒவ்வொருவரின் மூக்கையும் தொட்டு விளையாடினார் சென்றாயன். இட்லியை எடுத்து மற்றவர்களின் வாயில் திணித்தார். ‘இவங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே.?” என்று யாஷிகாவை நோக்கிச் சொன்னார் மஹத். ‘அவங்களை ‘ப்ரீஸ் செய்யுங்க பிக்பாஸ்’ என்று மற்றவர்கள் கொலைவெறியுடன் வாய்க்குள் முனகினார்கள். இதில் சென்றாயனை மட்டும் பிக்பாஸ் ப்ரீஸ் செய்ய, அவரைப் போட்டு வதைத்து எடுத்தார்கள். சென்றாயனின் வாயில் வைஷ்ணவி மாவைத் திணிக்க ‘ப்ளீச்’ என்று துப்பினார் சென்றாயன். கூட்டம் சிதறி ஓடியது. சென்றாயனின் முகத்தில் வைஷ்ணவி மாவைப் பூச ‘லூப்’ என்று குறும்பு செய்தார் பிக்பாஸ். எனவே சென்றாயனின் முகத்தில் திரும்பத் திரும்ப உற்சாகமாக மாவைப் பூசினார் வைஷ்ணவி. அயல்கிரக ஆசாமி மாதிரி ஆனார் சென்றாயன்.

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2இப்போது வைஷ்ணவி ‘ப்ரீஸ்’ செய்யப்பட கொலைவெறியுடன் அவர் மீது மாவை பூச வந்தார் சென்றாயன். ‘அய்யோ.. மேக்கப் மேக்கப்’ என்று பதறி ஓடினார் வைஷ்ணவி. (மாவைப் பூசறதும் மேக்கப்தானே?!). ஷாரிக் உடம்பை அசைத்து நடனமாட ‘லூப்’ என்றார் பிக்பாஸ். இப்படியே கூத்தும் கும்மாளமுமாக காட்சிகள் நகர்ந்தன. டேனி தொடர்பான காட்சிகள் அதிகம் காட்டப்படவில்லை. சென்றாயன், ‘டெரா டெரா பைட்’ பாடலை தன் வாழ்நாள் முழுக்க சாதகம் செய்வாரோ, என்னமோ. அந்தப் பாடலை ரம்யாவிடம் உற்சாகமாகப் பாடிக் காண்பித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் சிரிப்புடன் கவனித்தனர். என்றாலும் இறுதி வரியில் கோட்டை விட்டார். 

தன்னுடைய செடியை மஹத்தின் செடியிடமிருந்து தள்ளி வைத்து மஹத்தின் செடியை மும்தாஜ் செடியின் பக்கத்தில் வைத்து விளையாடினார் யாஷிகா. (ஏதோ குறியீடு போல!) 

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகினாலும் மக்கள் புறணி பேசுவதை நிறுத்தவில்லை. ‘இங்க இருந்தவங்கள்ல யார் மேலயும் மக்களுக்கு வெறுப்பில்லை. வெளியே அனுப்பும் போது எல்லாத்தையும் சரி செஞ்சி அனுப்பினாங்க. டேனி மட்டும்தான் விதிவிலக்கு” என்று சொல்லிக் கொண்டிருந்தார் மஹத். ‘ஆமாம்.. கமல் முன்னாடி கொஞ்சம் ஓவரா பண்ணான்’ என்பது போல் யாஷிகாவும் இதை ஆமோதித்தார். பிரபலங்களின் முன்னால் ஆண்டான் – அடிமை தோரணையில் இருப்பதுதான் இயல்பு என்று நினைக்கிறார்களோ என்று தெரியவில்லை. மரியாதை மனதில் இருந்தால் போதுமே! ஒவ்வொரு அசைவிலும் அந்த பக்தியைக் காண்பித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? 

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2வைஷ்ணவியை விசாரிக்க தொலைபேசினால் அவர் எப்படி அலட்சியமாக நடந்துகொண்டார் என்பதை மஹத் விவரித்துக் கொண்டிருக்க சிரிப்பொலி பரவியது. மஹத் மேல் வைஷ்ணவி கோபமாக இருக்கிறாராம். ‘உனக்கு வந்த ஒரே போன் அது. ஏன் பேசலை?” என்று வைஷ்ணவியைக் கலாய்த்தார் பாலாஜி. விஜியின் திருமண நாள் என்பதால் மற்றவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். “எனக்கு திருமண நாள் வர்றதும் ஒண்ணுதான். வராததும் ஒண்ணுதான்” என்று நித்யா விளையாட்டாகச் சொன்னாலும் அதிலிருந்த கசப்புஉணர்ச்சியைப் புரிந்துகொள்ள முடிந்தது. 

வெளியே விதம் விதமான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. ரகளையான பாட்டுகள் ஒலிக்க சிலர் உற்சாகமாக நடனமாட, அனந்த், டேனி, பாலாஜி போன்றவர்கள் உணவில் குறியாக இருந்தார்கள். ‘முக்காபலா’ பாடல் வந்த போது மும்தாஜை நினைவு கூர்ந்தார் மஹத். தொடர்ந்து பாடல்கள் ஒலித்தன. ‘நீங்கள் இங்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்றார் பெரியப்பா பிக்பாஸ். செடியை மீண்டும் மாற்றி வைத்தார் யாஷிகா. (என்னதான் உங்க பிரச்னை?!) 

அனைவரும் விடைபெறும் நேரம் வந்தது. “நீயும் நானும் ஒண்ணு. நீதான் ஜெயிக்கணும்’ என்று ரித்விகாவிடம் கண்கலங்கிக் கொண்டிருந்தார் நித்யா. ‘நான் போக மாட்டேன்’ என்று அடம்பிடித்தார் மஹத். எந்தக் காரணத்தினாலோ டேனி அதிகம் ஒட்டாமல் விலகி இருந்தது போல் பட்டது. யாஷிகா, ஐஸ்வர்யா, ஷாரிக், மஹத் கூட்டணி இணைந்து சிறிது நேரம் கொண்டாடியது. ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொள்ள மறுபடியும் வீடு வெறிச்சிட்டது. 

ஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2“சித்தப்பாவும் மோமோவும் வந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்” என்றார் ஜனனி. “டேனி மத்தவங்க கூட அத்தனை பேசலை போலிருக்கே” என்றார் விஜி. “அவர் வெளியே எல்லோரைப் பத்தியும் வேற மாதிரி சொல்லியிருக்காரு” என்றார் ஐஸ்வர்யா. “ஷாரிக் கூட பேசினீங்களா?” என்று ஜனனி ஆர்வமாகக் கேட்க ‘அத்தனை பேசலை’ என்றார் ஐஸ்வர்யா. ‘இந்த பிக்பாஸ் ஜர்னில இருந்து வெளியே வரணும். வெளியே இருக்கற பியூச்சரை நோக்கிப் போகணும்” என்ற மாதிரி சொல்லிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. (இந்த வீட்டை விட்டுப் போக மனசேயில்லைன்னு காலைலதாம்மா சொல்லிட்டு இருந்தீங்க?!).

இன்று சனிக்கிழமை. நாட்டாமை வரும் நாள். இந்த வாரத்தின் நினைவுகள், போட்டியாளர்களை தனித்தனியாக அலசும் விஷயங்கள் என்று ஓட்டி விட்டு, நாளை இறுதிப் போட்டியை நடத்துவார்களாக இருக்கும். “அண்ணாச்சி கடைக்குப் போய் ஒரு சேமியா பாக்கெட் வாங்கிட்டு வரச் சொல்லி அரைமணி நேரம் ஆகுது. இன்னமும் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து என்ன பண்ணிட்டிருக்கீங்க?” என்று எங்கள் வீட்டு ‘பிக்பாஸ்’ குரல் ஒலிக்கிறது. அந்த டாஸ்க்கை உடனே முடிக்க வேண்டும் என்பதால் கட்டுரையையும் இத்துடன் முடிக்கிறேன்.


 

அடுத்த கட்டுரைக்கு