Published:Updated:

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2
கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2

‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்’ என்ற பொன்மொழி ஒருபுறம் இருந்தாலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி இன்று வெளியேற்றப்பட்டதில் சிறியதாக அல்ல, பெரிய அளவு அநீதி இருந்தது. கண்ணீருடன் மும்தாஜ் குறிப்பிட்டதைப் போல, ‘அந்தக் குழந்தை முதல் நாள்ல இருந்து நூத்தி ஐந்து நாட்கள் போராடியிருக்கா. ‘டிக்கெட் டூ பினாலே’ வாங்கியிருக்கா. குறைந்தபட்சம் டாப் 3-லயாவது வரணும்” என்கிற அவரின் உருக்கமான கோரிக்கை மிகச் சரியானது. (‘மும்தாஜ் அன்பு காட்டி நடிக்கிறார்’ என்று இப்போதும் சொல்வார்களா?!). 

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2இது சீனியர், ஜூனியருக்கான போட்டி இல்லைதான். ஆனால், இந்தப் போட்டியின் அடிப்படை விஷயமான ‘சகிப்புத்தன்மையுடன், இணக்கமாக கூடி வாழ்தல்’ எனும் விஷயத்தில் ஜனனி மற்றவர்களுக்கு சளைத்தவரில்லை. இதர போட்டியாளர்களைப் போலவே இவரிடமும் நிறை, குறைகள் இருந்தன. இவரை விடவும் வலிமையான போடடியாளர்களான டேனி, யாஷிகா போன்றவர்கள் வெளியேறிய அதிர்ஷ்டமும் இருந்தது. என்றாலும் இறுதிப் போட்டியில் உள்ள நால்வர் என்கிற ஒப்பீட்டில் குறைந்தபட்சம் மூன்றாம் இடம் கூட அவருக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.

“உங்க கிட்ட இருக்கிற டிப்ளமஸியை ஒரு விமர்சனமாவே சொல்லிட்டு இருந்தாங்க. ஒருவேளை அந்தக் குணாதிசயம் இந்த விளையாட்டுக்கு  வேண்டுமானால் இடைஞ்சலாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கைக்கு மிக அவசியமான விஷயம். மிக உன்னதமான கருவி. உங்களுக்கு அப்படிப்பட்ட சூழல் அமைஞ்சது அதிர்ஷ்டம். பெற்றோர், நண்பர்கள் –னு உங்களைச் சுத்தியிருந்தவங்க முன்னுதாரணமாக இருந்து அப்படி செதுக்கியிருக்காங்க போல. இது இந்த கேமோட ப்ராப்ளம், உங்க ப்ராப்ளம் இல்ல. இந்தக் குணாதிசயம் வாழ்க்கை என்கிற விளையாட்டுக்கு ரொம்பவும் பயன்படும். அந்த வகையில் நீங்க சரி” என்று ஜனனியிடம் பேசிய கமல், தொடர்ந்து சொன்னதெல்லாம் ஆத்மார்த்தமான, வெளிப்படையான உண்மை. இதை துணிச்சலாக மேடையில் சொன்னதற்கு பாராட்டு. 

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2“இதுல சின்ன அநீதி இருக்கிறதுதான். நானும் வழிமொழிகிறேன். உள்ளே இருக்கறவங்களுக்கு வேறொரு நியாயம் இருந்திருக்கலாம். அதையும் தாண்டி உள்ளே இருக்கறவங்களுக்கு வேற நியாயம் இருக்கும். அது வியாபாரம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கும். கிட்டத்தட்ட இந்த விளையாட்டின் முனை வரைக்கும் வந்துட்டீங்க. பிரகாசமான வாய்ப்பு இருக்குன்னு நான் கூட நெனச்சேன். யாரு முடிவு செஞ்சாங்களோ தெரியாது, அனைத்து நேரமும் பொதுமக்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்று எனக்கு அவசியமில்லை. இது என் கருத்து, உங்கள் கருத்து இது” என்று ஜனனிக்கு ஆதரவாக சிறப்பாக பேசினார்.

“இதைத்தான் சார் நான் பெரிய பரிசா நெனக்கறேன்” என்று நெகிழ்ந்த ஜனனியிடம் ‘இப்பவே பாராட்டிடக்கூடாது.  கிளைமாக்ஸை கெடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது? ஒரு படத்தை மொத்தமா பார்த்துட்டுதான் சொல்லணும். ரொம்பவும் பாராட்டினா, நான் சொல்றதை ஒரு சிக்னலா எடுத்துப்பாங்க. ஒரு wild photographer மாதிரி சிறுத்தையோட வேட்டையை பார்த்துட்டுதான் இருக்க வேண்டியிருக்கும். பரிதாபப்பட்டு எதுவும் செய்ய முடியாது. மும்தாஜ் வேணா கண்ணீர் விடலாம். நான் செய்ய முடியாது. எனக்கு வந்தாலும் அடக்கிக்கிட்டுத்தான் இருக்கணும். இதில் பங்கேற்பதே வெற்றிதான். தோல்வி-ன்னு ஒண்ணும் கிடையாது” என்று அவர் சொன்னது அருமை.

மக்களுடைய எதிர்வினைகளின் அடிப்படையில்தான் ஜனனி வெளியேற்றப்பட்டார் என்றால் விஜியை விடவும் ஜனனி எந்த அளவிற்கு தகுதி குறைவான போட்டியாளர் என்பது புரியவில்லை. வெகுசன மனநிலையை யூகிப்பதும் புரிந்து கொள்வதும் சிரமம்தான் போல. டாஸ்க்குகளில் விஜி ஆர்வமாகவும் அக்ரெஸ்ஸிவ்வாகவும் பங்கெடுத்தது அவர்களைக் கவர்ந்திருக்கலாம். மும்தாஜின் சலுகைகளை தட்டிக் கேட்டது பிடித்திருக்கலாம். வேறு எத்தனையோ ‘லாம்’கள் இருந்திருக்கலாம். இந்த நெருக்கடியில், இத்தனை நாட்கள் சிரமப்பட்டும், பொருளியல் பரிசு எதுவுமே இல்லாமல் “ஆறுதல் உரையுடன்’ ஜனனி வெளியேறுவது துரதிர்ஷ்டமானது. பிக்பாஸ் என்கிற சிறுத்தை, ஜனனி என்கிற மானை வேட்டையாடுவதுதான் இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பாக இருக்கிற போது என்ன செய்ய? ‘தமிழக்கூட்டணியில்’ இருந்தும் ஜனனிக்கு இந்தச் சோகம் நிகழ்ந்திருப்பது ஆச்சரியம். 

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2**

“இந்த வாரம் வாக்குப்பதிவு அமோகமாக இருந்தது. அதற்காக நன்றி. நேர்வழியில் வெற்றி பெறுவது ஒரு வழி. குறுக்கு வழியில் அதே வெற்றியைப் பெறுவது இன்னொரு வழி. ஜெயிக்கப் போவது நேர்வழியா, குறுக்குவழியா?” என்று ப்ரமோவில் கமல் பேசிக் கொண்டிருந்தார். யாரை சூசகமாகச் சொல்கிறார் என்பது புரிகிறது. இறுதிப் போட்டி வரை வந்து விட்டாலும் கூட ஆண்டவர் இன்னமும் குத்திக்காட்டும் மனநிலையிலேயே இருக்கிறார் போலிருக்கிறது. 

“வாக்குப்பதிவின் சதவீதம் குறைவாக இருந்ததால்தான் சென்றாயன் போன்ற அப்பாவிகள் வெளியேற வேண்டியிருக்கிறது. ஓட்டை ஒழுங்கா போடுங்க” என்று முன்னர் சலித்துக் கொண்டார். ஆனால் அவரின் வாக்குமூலத்தின் படி, கடைசி வாரத்தின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தாலும் கூட, கண்ணீரை அடக்கிக் கொண்டு மான் வேட்டையை அவர் வேடிக்கை பார்க்க வேண்டிய துரதிர்ஷ்டம் நிகழ்கிறது என்றால், இந்தப் பிரச்சினையின் மையம் எங்கேதான் உள்ளது?

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2**

அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருந்த மேடையில் இறுதி நிகழ்ச்சி துவங்கியது. சித்தப்ஸைத் தவிர முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் சிறந்த ஒப்பனையோடு கொலுபொம்மை போல நின்றிருந்தார்கள். ஒவ்வொருவரையும் பற்றிய ரசனையான, அழகான சொற்களுடன் கூடிய அறிமுகம் தரப்பட்டது. 

“போன சீஸன்லயே இப்படி செய்யணும் னு நெனச்சேன் முடியாம போனது. உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அடையப்போகும் வெற்றியின் உன்னதமே இவர்கள்தான். இந்த நிகழ்ச்சியை படிப்படியாக நகர்த்திச் சென்ற மைல்கற்கள். பொதுவாக ‘நாலு பேருக்கு நன்றி’ என்பார்கள். உள்ளே இருக்கிற நாலு போட்டியாளர்களும் இவர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்கிற முன்னுரையுடன் வந்தார் கமல். அடர்நீல பேண்ட், வெளிர்நீல ஜிப்பா என்கிற எளிய உடையில் கூடுதல் வசீகரத்துடன் இருந்தார் கமல்.

“நீங்க இல்லாம வீடு வெறிச்சோடி இருந்தது. சில போட்டியாளர்கள் உள்ளே போய்ப் பார்த்துட்டு வந்தீங்க. இன்னிக்கும் சில விருந்தினர்கள் உள்ளே போயிருக்காங்க. யாருன்னு பார்ப்போம்” என்றார் கமல்.

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2104-ம் நாள். பாகுபலி 2 திரைப்படத்திலிருந்து ‘கண்ணா நீ தூங்கடா” என்ற பாடல் ஒலிபரப்பானது. (காலையில் போட வேண்டிய பாட்டா இது?!) சிறிது நேரத்தில் ஐஸ்வர்யாவின் தோழி ஸ்வரூபா உள்ளே நுழைய மிகையான உற்சாகத்துடன் சென்று அவரைக் கட்டிக் கொண்டார் ஐஸ்வர்யா. ‘living your dream’ என்று சரியான சொற்களைச் சொல்லி பாராட்டினார் தோழி. “வெளியில் இருந்து பார்க்கும் எங்களால் எதையும் தீர்மானிக்க முடியாது” என்பது போல் ஸ்வரூபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரை இடைமறித்த ஐஸ்வர்யா.. ‘ஐய்யா.. சாக்லேட்டு… ‘என்று தோழி கொண்டு வந்திருந்த பார்சலைப் பிரித்து குழந்தை போல கத்தி மகிழ்ந்தார். டெடிபேர், சாக்லேட், ஐஸ்கிரீம், இச்சிலிபிச்சிலி நகைகள் போன்ற விஷயங்கள் பெண்களுக்கு எப்போதும் சலிக்கவே சலிக்காது போலும். 

இது மட்டுமல்ல, எந்தவொரு விருந்தினர் வந்தாலும் ‘எதுவும் வாங்கிட்டு வரலையா?” என்று அவருடைய கையைப் பார்ப்பதும், வாங்கி வந்த பொருட்களின் மீது ஆர்வமாக பாய்வதுமாக போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இளம் வயதில், எங்கள் வீட்டு விருந்தினர்களின் முன்னால் நாங்கள் இப்படிச் செய்தால், “ஏன் பறக்காவெட்டி மாதிரி பாயறீங்க, சோறே போடறதில்லை போல –ன்னு அவங்க நெனச்சிக்க மாட்டாங்க.” என்று என் அம்மா பிறகு திட்டுவார். பிக்பாஸூம் இப்படியே நினைத்திருக்கக்கூடும். ‘மானத்தை வாங்குகிறார்களே’ என்று மதிய உணவை சிறப்பாக ஏற்பாடு செய்து விட்டார். 

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2ரித்விகாவிற்கான விருந்தினராக நடிகர் கலையரசன் வந்திருந்தார். அவர் வாங்கி வந்திருந்த கல்கத்தா இனிப்பை ஆர்வத்துடன் எடுத்துக் கொண்டார் மேற்குவங்கத்தின் தங்கம் ஐஸ்வர்யா. ‘ஜெயிச்சுட்டு வாங்க மேரி மேடம்” என்று மெட்ராஸ் திரைப்பட பாத்திரத்தின் பெயரை சொல்லி , ரித்விகாவை வாழ்த்தி கலையரசன் விடைபெற்றது சுவாரஸ்யம். ஜனனியின் விருந்தினராக வந்தவர் நடிகர் அசோக் செல்வன். ‘எப்படித்தான் இத்தனை காமிரா நடுவுல இருக்கீங்களோ” என்று ஜாலியாக பிரமித்தார். அவர் எடுத்து வந்த பார்சலை பறக்காவெட்டிகள் பிரித்த அடுத்த நிமிடமே ‘வந்த வேலை முடிஞ்சுடுதல. கிளம்பு தம்பி’ என்று அவரை அன்புடன் வழியனுப்பினார் பிக்பாஸ். (பொஸஸிவ்வா ஃபீல் பண்றாரோ?!).

“கிருஷ்ணாவை அனுப்பிடாதீங்க. என் மானத்தை வாங்கிடுவான்” என்று ஜாலியாக விஜி சலித்துக் கொண்டது, பிக்பாஸின் காதில் சரியாக விழுந்தது. ‘செய்யாதே’ என்றால் அதை சரியாக செய்யும் பிக்பாஸ் அடுத்து அனுப்பி வைத்தது நடிகர் கிருஷ்ணாவைத்தான். கூடவே ‘க்யூட்டாக’ இருந்த சுனைனா. விஜிக்கும் இவர்களுக்கு இருக்கும் நட்பின் நெருக்கத்தை சுவாரஸ்யமான காட்சிகளின் வழியே உணர முடிந்தது. ‘உங்கள் நேரம் முடிந்தது’ என்கிற உலோகக் குரல் வந்தவுடன் ‘குமாரு.. யாரு இவரு.?” என்றார் கிருஷ்ணா. ‘எங்களோட பிக்பாஸ்’ என்று பெண்கள் உரிமை கொண்டாடினார்கள். (மனுஷன் வாழறாயன்யா!). கிருஷ்ணாவும் சுனைனாவும் விடைபெற்றுக் கொண்டு சென்றதோடு 104-ம் நாள் முடிந்தது. 

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2**

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் ‘என்ன டென்ஷனே இல்லாம ஜாலியா இருக்கீங்க.. அப்படி இருக்க விடலாமா? சரி. கொஞ்சம் டென்ஷன் பண்ணலாம்” என்று போட்டியாளர்களிடம் சில கேள்விகளை கேட்கத் துவங்கினார். ‘இந்தப் பதில்கள் உங்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் ஒரு காரணமாக இருக்கும்” என்கிற குறிப்புடன் அவர் கேட்கவே பயபக்தியாக பதில் சொல்லத் துவங்கினார்கள். தமிழ் தெரியாத ஐஸ்வர்யா, தேர்விற்குத் தயாராக இல்லாத மாணவனைப் போல பெரும்பாலான சமயங்களில் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். 

அழகிப்போட்டியில் சொல்லப்படும் பதில்கள் போலவே பல பதில்களைச் சம்பிரதாயமாகச் சொன்னார்கள். நேர்மையான, புத்திக்கூர்மையுடன் கூடிய பதில்களைச் சொல்வதே சிறப்பு. 

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2‘ஒரு சூப்பர் பவர் கொடுக்கப்படும் என்றால் அது எதுவாக இருக்க வேண்டும்?” ‘அலாவுதீன் விளக்கு” என்று மொக்கையாக பதில் அளித்தார் ஐஸ்வர்யா. ஆணாக மாறுவீர்களா?” என்பதற்கு ‘இல்லை. தாய்மைதான் பெண்மையின் அடையாளம்’ என்றும் ‘எந்தவொரு நபராக இருக்க விரும்புவீர்கள்’ என்பதற்கு ‘அப்துல் கலாம்’ என்றெல்லாம் சொல்லி புல்லரிக்க வைத்தார் ரித்விகா. எதற்கு மக்கள் கைத்தட்டுவார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அவருடைய நோக்கில் அது உண்மையான பதில்களாக இருந்திருக்கவும் கூடும். 

இப்படியாக இந்த கேள்வி பதில் நேரம் முடிந்ததும் ‘இதெல்லாம் சும்மா லுலுவாய்க்குத்தான் கேட்டேன்” என்று கமல் சொன்னதும் போட்டியாளர்களுக்கு எப்படியிருந்திருக்குமோ தெரியவில்லை, ‘உங்க போதைக்கு நாங்கதான் ஊறுகாயா”? என்று கடுப்பாக இருந்தது. குணா கமலைப் போலவே ‘லுலுவாய்க்கா. லுலுவாய்க்கா.’ என்று கதற வேண்டும் போலவும் இருந்தது. 

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2


“பிக்பாஸ் டிராஃபியை நண்பர் ஒருவர் கொண்டு வருவார். நீங்கள் அதை ஸ்பரிசித்து மகிழலாம்” என்றார் கமல். அட்டகாசமான லுக்கில் விஜய்தேவரகொண்டா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். (‘அர்ஜூன் ரெட்டி’ல என்னமா நடிச்சிருக்கான், மனுஷன்!) திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரியே இருந்தவர், அலங்கார கோலத்தை மிதித்து திட்டு வாங்கினார். ஐஸ்வர்யாவின் அற்புத தமிழிற்கு நிகரானதாக இருந்தது, இவருடைய தமிழும். 

வெளிவரப் போகும் ‘நோட்டா’ என்கிற திரைப்படத்தின் பிரமோஷனுக்காக அவர் வந்திருப்பது தெரிந்தது. ‘யார் ஜெயிப்பாங்க –ன்னு நெனக்கறீங்க?” என்று போட்டியாளர்களிடம் அவர் கேட்டதற்கு ரித்விகாவை சுட்டிக் காட்டினார்கள். “ஏன் அப்படி நெனக்கறீங்க. வெளியே நிலைமை வேற மாதிரி இருக்கே” என்று கலாய்த்தவர், பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தால் எப்படி உணர்வீர்கள் என்று நால்வரையும் பேச வைத்தார். கண்ணீர் விட்டு ஒத்திகை பார்த்துக் கொண்டார் ரித்விகா. பிறகு நோட்டா படத்தின் டீஸர் வெளியானது. 

‘கமல் சார்., உங்களைப் பார்க்கணும், மேடைக்கு வரலாமா?” என்று அவர் கோரிக்கை வைத்ததும், பார்வையாளர்கள் மத்தியில் ஆண்ட்டிகள் முதல் பெண்கள் வரை விசில் அடித்து தீர்த்தார்கள். ‘தமிழ் மக்கள் வரவேற்பு தர்றாங்க. வரட்டுமா?” என்று விஜய் கேட்டதும் ‘மக்கள் நெனச்சிட்டா பிக்பாஸே மறுக்க முடியாது” என்ற கமல்  ‘அந்த தேவர கொண்டாங்க’ என்று அவருடைய பெயரை வைத்தே கமல் அடித்த கமெண்ட் சிறப்பு. ‘ரண்டி.. ஒஸ்துனாரா.. இப்புடு” என்று கமல் பேசிய தெலுங்கைக் கேட்டு ஒரு நொடி ஜெர்க் ஆனார் விஜய்.

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2விஜய் அரங்கத்திற்குள் நுழைந்ததும் பெண்களிடமிருந்து பயங்கர வரவேற்பு கிடைத்தது.  ஆனால் விஜய், கமலை விடவும் அதிகம் பேசுவார் போலிருக்கிறது. தன்னுடைய திரைப்பட பிரமோஷனை திறமையாக மேடையில் முடித்துக் கொண்டார். ‘மரோசரித்திரா” மூலம் தெலுங்கு மக்கள் என்னை ஏற்றுக் கொண்டது போல தமிழர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார் கமல். எதிர்பார்த்தது போலவே ‘நோட்டா’ என்கிற வார்த்தையை நையாண்டி செய்தார். இது ஏதோ விஜய்க்குப் புரியாது என்பதாக அவர் விளக்கியது தேவையற்றது. 

விடைபெறுவதற்கான வார்த்தைகளை கமல் சொன்னாலும், அதற்கான சமிக்ஞையை அளித்தாலும், தன் திரைப்படத்தைப் பற்றிய வார்த்தைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் விஜய். ‘இத்திரைப்படத்தின் தலைப்பு ‘நோட்டா’ என்றிருந்தாலும் வாக்களிப்பதைத்தான் நான் ஆதரிக்கிறேன். நமக்குத் தேவை அரசியல்வாதிகள் அல்ல. நல்ல தலைவர்கள். அது சார்ந்த மக்களின் அதிருப்தியைத்தான் இத்திரைப்படம் பிரதிபலிக்கும்” என்று அவர் சொன்னது படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. 

அவர் கிளம்பியதும், போட்டியாளர்களிடம் திரும்பிய கமல், ஒரு டீலை முன்வைத்தார். எப்படியும் ஒரு போட்டியாளர்தான் இதில் வெற்றி பெறப் போகிறார். மற்றவர்களுக்கு இப்போது ஒரு சந்தர்ப்பம். ‘வெல்வதற்கான வாய்ப்பில்லை’ என்று கருதுபவர், இப்போது தரப்படும் ரூ. பத்து லட்சத்தை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து விலகலாம். ஆலோசித்து முடிவு செய்யுங்கள்’ என்றார். “பணம் என்ன வானத்துல இருந்தா வருது” என்று சிலர் எரிச்சலில் கேட்பார்கள். பிக்பாஸ் வீட்டில் அப்படித்தான் வந்தது. பத்துலட்ச பணப்பெட்டி டிரோனில் பறந்து வந்தது.

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2மற்றவர்கள் கல்லுப்பிள்ளையார் போல அமர்ந்திருக்க, இந்த டீலுக்கு உடனே தயாரானார் ஐஸ்வர்யா. ஆனால், இது வெற்றியாளரின் பரிசுப் பணத்திலிருந்து கழிக்கப்படுமானால் அந்த இழப்பிற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. முழுப்பணமும் அவருக்குச் சென்று சேர வேண்டும். அது தவிர இந்தப் பத்து லட்சம் என்றால் நான் விலகத் தயார்” என்றார். 

‘ஃபைனல் மேடைக்குள் வந்தால் போதும். வெற்றி தோல்வி என்பது முக்கியமில்லை என்கிற மனோபாவத்தில் ஏற்கெனவே இருக்கும் ஐஸ்வர்யா, இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமில்லை. மட்டுமல்லாமல், தன்னுடைய சில சறுக்கல்கள் காரணமாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருப்போம் என்பதும், வெல்வதற்கு வாய்ப்பில்லை என்பதையும் அறிந்திருப்பார். ஆனால், மேலும் பத்து லட்சத்தை தருவதற்கு பிக்பாஸ் அத்தனை ஏமாளியா என்ன? ‘வெற்றியாளரின் பணத்திலிருந்துதான் தருவோம்’ என்ற விளக்கத்திற்குப் பின் ‘எனில் தேவையில்லை. போட்டியைத் தொடர்கிறேன்” என்றார் ஐஸ்வர்யா. “அவ்ள ஈஸியா ஏன் விட்டுத் தர்றே. நீயும் ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டிருக்க இல்லையா?” என்று சரியான நேரத்தில் சரியான ஆலோசனையைத் தந்தார் விஜி. மற்றவர்களும் இதை ஆமோதித்தார்கள். எத்தனை நண்பர்களாக இருந்தாலும் வெற்றியைப் பகிர்ந்து கொள்ளும் நேரம் சங்கடமானதுதான். 

‘பிக்பாஸே டென்ஷன் ஆயிருப்பாரு” என்று பின்னர் சிரிப்புடன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்டார் கமல். ‘நான் எடுக்க மாட்டேன்’ என்று டிப்ளமட்டிக்காக மஹத் மறுக்க, ‘நான் எடுப்பேன் சார். அத்தனை நாள் கஷ்டப்பட்டிருக்கோமில்லையா? என்றார் வைஷ்ணவி. ‘நானும் எடுக்க மாட்டேன். ஜெயிச்சா ஐம்பது லட்சமில்லையா?” என்றார் சென்றாயன். ‘பாருங்க.. வெளியே இருந்தாலும் இவருக்கு எத்தனை நம்பிக்கை?” என்று சென்றாயனைப் பாராட்டினார் கமல். 

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2“இந்த நால்வரில் ஒருவர் வெளியேற வேண்டியிருக்கிறது. பார்வையாளர்கள் முடிவு செய்து விட்டார்கள். சில நண்பர்கள் உள்ளே வந்து நல்ல மற்றும் கெட்ட செய்திகளைச் சொல்வார்கள். வெளியேறுபவருக்கு இது கெட்ட செய்தியாக இருக்கலாம். அல்லது அவர் ஸ்போர்ட்டிவ்வாகவும் எடுத்துக்கலாம்” என்றார் கமல். ‘எனை மாற்றும் காதலே’ என்று ஐஸ்வர்யா ஜாலியாக பாடிக் கொண்டிருக்க, டென்ஷனை மறைத்துக் கொண்டு அவருடன் இணைந்தார் ஜனனி. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


வெறிச்சோடிக் கிடந்த பிக்பாஸ் வீடு சிறிது நேரத்தில் திநகர் ரங்கநாதன் தெரு போல ஆனது. பல நடனக்கலைஞர்கள் உள்ளே நுழைந்து ஒலிக்கப்பட்ட இசைக்கு உற்சாகமாக ஆட, போட்டியாளர்களும் அவர்களுடன் இணைந்து ஆடினர். ஒரு கட்டத்தில் இந்த நடனம் முடிவில்லாமல் செல்ல, “ஏற்கெனவே நாங்க டென்ஷன்ல இருக்கோம். எவ்ள நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது. விடுங்கடா” என்று போட்டியாளர்கள் உள்ளுக்குள் கதறியிருக்கக்கூடும். பிறகு நான்கு போட்டியாளர்களையும் திரையிட்டு மறைத்து கண்களைக் கட்டி ஒவ்வொரு மூலைக்கும் அழைத்துச் சென்றார்கள். இதில் குழந்தை கடத்தல் மாதிரி ஜனனியை அவர்கள் கடத்திச் சென்ற இடம், கமல் இருந்த மேடை. கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களின் கூச்சலில் இருந்தே விஷயத்தை ஜனனி உணர்ந்திருப்பார். 

வீட்டினுள் இருந்த ரித்விகாவும் ஐஸ்வர்யாவும் ‘ஜனனி எங்கே” என்று பதற்றத்துடன் தேட, வெளியிலிருந்து வந்த விஜி, மணிரத்ன திரைப்படத்தின் பாத்திரம் போல ‘ஜனனி’ என்றார் சுருக்கமாக. மேடைக்கு அழைத்து வரப்பட்ட ஜனனியைப் பார்த்து கண்கலங்கினார் மும்தாஜ். 

கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2பிறகு நடந்ததெல்லாம் கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனனி இந்த விஷயத்தை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டதாக தெரிந்தாலும் உள்ளுக்குள் ஏமாற்றமடைந்திருப்பார் என்று யூகிக்கிறேன். லேட்டாக வந்த விஜி உள்ளே இருக்க, இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்த ஜனனி, வெற்றியின் அருகில் அதை இழந்தது சோகமான விஷயம். 

ஆக ரித்விகா, ஐஸ்வர்யா மற்றும் விஜி ஆகிய மூவரிலிருந்து ஒருவர் மட்டுமே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். இதை நாளை அறிந்து கொள்வோம் என்று கமல் சொன்னாலும், வழக்கம் போல் இந்த முடிவுகள் கசிந்து விட்டதாகத் தெரிகிறது. ரித்விகா டைட்டிலை ஜெயித்ததாகவும் ஐஸ்வர்யா ரன்னர் அப் –பாக வந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள். ரித்விகா வென்றது ஒருவகையில் மிகச்சரியான தேர்வு. இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு