Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஓவியாவின் செயல் மகாமட்டம்..!' - தகிக்கும் கவிஞர் தாமரை

விஜய் டி.வியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ஓவியாவுக்கு சப்போர்ட் செய்யாதவர்கள் யாருமே இல்லை. சமூக வலைதளங்களில் ஓவியாவுக்கு ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்தவர்கள், #SaveOviya, #OviyaArmy  என்றெல்லாம் ஹேஸ்டேக்ஸை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே போய் தங்கள் ஊர்களில் ஓவியாவுக்கு கட் அவுட் எல்லாம் வைத்து வருகின்றனர். 

இன்று பேஸ்புக்கில் சுரேஷ் கண்ணனின் பிக் பாஸ் பதிவில் கவிஞர் தாமரை பெயரில் ஒரு கமெண்ட் பதிவாகியிருந்தது. அதில், ''ஓர் ஆணை இப்படியுமா பாலியல் சீண்டல் செய்வார் ஒரு பெண். அதுவே ஒரு ஆண் அங்கே உள்ள ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்க வற்புறுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும் ! ஓவியாவின் செயல்கள் மகாமட்டம். ஆனால், இதுபற்றி சமூகத்தில் நிலவும் அமைதியை கண்டு நான் வியக்கிறேன். இது டாஸ்க் எல்லாம் இல்லை. அந்தப் பெண்ணுடைய அப்பட்டமான அத்துமீறல். பரணியிருந்தால் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று முன்னர் பெண்கள் எல்லோரும் எதிர்த்தெழுந்தது போல், ஓவியா இருந்தால் எங்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஆண்கள் எதிர்த்தெழாதது அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது'' என 'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருக்கும் ஓவியாவுக்கு எதிராகக் கவிஞர் தாமரை கமெண்ட் செய்திருந்தார்.

பலர் ஓவியாவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவிக்கும் நிலையில், தாமரையின் இந்த கடுமையான  கமெண்ட்டைப் பற்றி பெண்ணியவாதிகள் சிலரிடம் கேட்டோம். ''பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாள்களாகவே நடப்பது சகிக்க முடியாத ஒன்றாகயிருக்கிறது. ஓவியாவின் செயல், முகம் சுளிக்கும் வகையில்தான் உள்ளது. அவர் ஒரு கதாநாயகி என்பதால் அவர் இந்த சமூகத்தை பற்றி கவலை கொள்ளாமல் இப்படி நடந்து கொள்கிறார். பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்தால் எங்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொன்னவர்கள். இப்போது ஓவியா செய்வதை எப்படி ஒப்புக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆண்கள் ஒரு இடத்தில் இருந்தால், பெண்கள் சற்று கொஞ்சம் தள்ளி நிற்கத்தான் வேண்டும். அதைவிட்டுவிட்டு, தோளில் சாய்வது, உரசிக்கொண்டு நிற்பது இவை எல்லாம் மிகவும் கீழ்தரமாக உள்ளது. ஆண்களுக்கு தனியாக பெட்ரூம் உள்ளது. பெண்களுக்கு தனியாக பெட்ரூம் உள்ளது. ஆனால், எப்போது பார்த்தாலும் ஓவியா ஆரவ் இருக்கும் இடத்திலேயே இருப்பது, ஆரவ் படுத்திருக்கும் போர்வைக்குள் போய் படுத்துக் கொள்வது இதெல்லாம் நன்றாகவா உள்ளது. "எதுவா இருந்தாலும் தொடாமப் பேசு" என்று ஆரவ் சொல்ல நேர்ந்தது அனைத்துப் பெண்களுக்குமான தலைகுனிவு’’ என்கிறார்கள் சில பெண்ணியவாதிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்