Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஜூலி பாவங்க, அவங்களுக்கு நானும் ஓட்டு போட்டேன்!” - ‘பிக் பாஸ்’ ஆர்த்தி #BiggBossTamil

ஆர்த்தி

'ஸ்டார் ஐகான் அவார்டு' நிகழ்ச்சியில் ஆர்த்தி பேசிய வீடியோதான், இரண்டு நாள்களாக சமூக வலைதளத்தின் வைரல். அந்த நிகழ்ச்சியில் ஆர்த்தி பேசும்போதும், 'பிக் பாஸில் போலியாக நடிக்கிறார்கள்' என்கிற தொனியில் பேசியிருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்டோம்... 

'' 'கத்தி சண்டை' படத்துக்காக எனக்கு விருது கிடைச்சிருந்தது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சின்னச் சின்னப் பிரச்னைகள் வந்துள்ளது அவ்வளவுதான். இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்து பார்த்தபோது நிறைய மீம்ஸ், ட்ரோல் எல்லாம் இருந்தது. சண்டையில்லாமல் எந்த வீடு இருக்கு? இப்போ, எப்பவும்போல எல்லார்கிட்டேயும் பேசிட்டிருக்கேன்.'' என்கிறார் ஆர்த்தி. 

''நீங்க எப்பவும் ஜூலியைப் பற்றியே பேசுவதாகத் தெரிகிறதே...'' 

''ஜூலிக்கும் எனக்கும் முன்ஜென்ம பகையா என்ன? அவங்க நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தால், அவங்கிட்டேயும் நிச்சயமா பேசுவேன். இந்த நூறு நாள், யாரின் லைஃப்பையும் மாத்திடப் போறதில்லைங்க. நம்மகிட்டே என்னென்ன கெட்டப் பழக்கம் இருக்கிறதா இந்தச் சமுதாயம் நினைக்குதோ, அதையெல்லாம் வெளிய வந்தபிறகு நாங்க மாத்திக்கிவோம் அவ்வளவுதான். எல்லோரும் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தால், நல்ல ஃபிரண்ட்லியா இருப்போம். சினிமாவில் ஹீரோவும் வில்லனும் அடிச்சுப்பாங்க; குத்திப்பாங்க. அதுக்காகப் படம் முடிஞ்ச பிறகும், அந்த கேரக்டரில் நடிச்சவங்க அடிச்சுக்கறாங்களா? வாழ்க்கை முழுக்க பேசிக்காமல் இருக்காங்களா? அப்படித்தான் நாங்களும்.'' 

ஆர்த்தி

“ஜூலியை நடிக்கிறாங்கன்னு அடிக்கடி சொல்லிட்டே இருக்கீங்களே...” 

“மறுபடியும் சொல்றேன் அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்க. பிக் பாஸ் வீட்ல அந்தப் பொண்ணு நடிச்சது இரிட்டேட் பண்ற மாதிரி இருந்துச்சு. ஜெயிக்கிறதுக்காக அவங்க எது வேணாலும் பண்ணுவாங்கனு புரிஞ்சுது. நாளைக்கே நான் நடிக்கிற படத்தில் ஒரு கேரக்டருக்கு யாரையாவது கேட்டாங்கன்னா, என் மைண்ட்ல ஜூலிதான் ஞாபகத்துக்கு வருவாங்க. அவங்களை சிபாரிசு செய்வேன். ஏன்னா, அவங்க நல்லா நடிப்பாங்கனு உலகத்துக்கே தெரிஞ்சுப்போச்சு. கண்டிப்பா சினிமாவுல நல்லாவே நடிப்பாங்க. நாம பிறக்கும்போது நம்மை யார் பார்த்தாங்கனு தெரியாது. அதேமாதிரி இறந்த பிறகும் யார் நினைப்பாங்கனு தெரியாது. இருக்கிறவரை ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துக்க வேண்டியதுதானே.'' 

ஆர்த்தி

''நீங்க இப்போ மெச்சூரிட்டியா இருக்கிற மாதிரி தெரியுது...'' 

''மெச்சூரிட்டி வந்திருந்தா கோபத்தை கண்ட்ரோல் பண்ணியிருப்பேன்; விட்டுக்கொடுத்திருப்பேன். மத்தவங்ககிட்ட சில விஷயங்களை மாத்திக்க சொல்ல நான் யாருங்க? 'நாம யாரையும் ஜட்ஜ் பண்ணவோ, மாத்தவோ முடியாது. அப்படி அவங்க நடிச்சாலும் 'நீ ஏன் சொல்லணும்'னு என் அப்பா கேட்டார். அதை இப்போ புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு நேச்சர் இருக்கும். பாம்புனா அதுக்கு விஷம் இருக்கத்தான் செய்யும். யானை அதிகம் சாப்பிடத்தான் செய்யும். அதைத் தடுக்கறதுக்கு நாம யாரு? அதுதான் என்கிட்டே இருந்த மிஸ்டேக். இதுக்காக, ஜூலியோடு பகை வளர்த்துகிட்டு அவங்க வெளியில் வர்றதுக்காக காத்திருக்கப் போறதில்லை. அவங்களுக்காக நானும் ஓட்டுப் போட்டிருக்கேன்.'' 

“என்னது, நீங்க ஜூலிக்கு ஓட்டுப் போட்டீங்களா?” 

“ஆமாம்! பாவம் அவங்களும் எவ்வளவு நடிக்கிறாங்க. எவ்வளவு கஷ்டப்படுறாங்க. வெற்றிபெற துடிக்கறாங்க. அந்த வீட்ல இருக்கணுமேனு இவ்வளவு கஷ்டப்படுறாங்க. 30 கேமராக்கள், ஐந்து கோடி மக்கள் பார்த்துட்டிருக்கிறது தெரிஞ்சும் அவங்க மிஸ்டேக் பண்றாங்கன்னா எதுக்கு? எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்கணும்னுதானே? அந்த வீட்டுக்குள்ளயே இருக்கணும் என்கிற வெறி இருக்கு. பாவம், அதுக்காகப் போராடுறாங்க. மத்தவங்களைவிடவும் ஜூலிக்கு தான் வெளியில் வந்தா என்ன பண்ணப்போறோம்னு தெரியாததால்தான் இவ்வளவு நடிக்கிறாங்க. அதைப் பார்த்தால் பரிதாபமா இருக்கு. அதுக்குதான் அவங்களுக்கு ஓட்டுப் போட்டேன்'' என்கிறார் ஆர்த்தி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்