ஆரவ்வின் மருத்துவ முத்தம்..?! - பதறும் பரணி

பிக் பாஸ்' நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்ட நடிகர் பரணி, நிகழ்ச்சியில் நடந்த சில விஷயங்கள் தனக்கு கஷ்டமாகயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பரணி

'பிக் பாஸ்' நிகழ்ச்சி நாளுக்கு நாள் ஏதேனும் ஒரு வகையில் தனது சுவாரஸ்யத்தை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறது. நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள் 'பிக் பாஸ்' பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நிகழ்ச்சியிலிருந்து பல பேர் வெளியேறியிருக்கின்றனர். குறிப்பாக, ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது அவரின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஓவியாவின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் நேரத்தில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஜூலி எலிமினேட் ஆனது ஓவியாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.  இதற்கிடையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியானா மீது 'பிக் பாஸ்' ரசிகர்களில் சிலர் கோபத்தில் உள்ளனர். ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையில் நடந்த வாக்குவாதம், பரணியை அண்ணன் என்று அழைத்துக்கொண்டே, பரணிக்கு எதிராக ஹோம் மேட்ஸூடன் ஒன்றாகயிருந்தது எனச் சில காரணங்களால் ஜூலி மீது சிலர் கோபத்தில் உள்ளனர். 

இந்தக் காரணங்களாலேயே கமல் ஜூலியை 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியே அனுப்பும்போது, 'ஜூலி என் தங்கைபோல் அவர் மீது யாரும் கோபப்படாதீர்கள்' என்று சொல்லி வெளியே அனுப்பினார். 

இந்நிலையில், சமூக வலைதளங்கள் முழுவதும் ஒரு வீடியோ பரவி வருகிறது.  அதில், பொது இடத்தில் ஒரு பெண் தன் முகத்தைத் துணியால் கட்டிக்கொண்டு, நடிகர் பரணியின் கால்களில் விழுவதுபோல் உள்ளது. இந்தப் பெண் ஜூலியானாதான் என்று சிலர் அந்த வீடியோவில் கூறுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி நடிகர் பரணியிடம் பேசினோம்.

ஜூலி

’’நான் அவசரமாக சேப்பாக்கத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்சுக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது சேப்பாக்கம் வாசலில் நிறைய பேர் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெண் என் காலில் விழுந்தார், அது உண்மைதான். ஆனால், இதுபற்றி வேறு எதுவும் தற்போது கருத்து கூற விரும்பவில்லை. அதுமட்டுமின்றி நான் இன்னும் சமூக வலைதளத்தில் உலா வரும் வீடியோவைப் பார்க்கவில்லை'' என்றார்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா என்றால், ’’நிறைய வேலைகள் இருந்ததால் பார்க்க முடியவில்லை. சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டேன்'' என்றவரிடம், ஆரவ்வின் மருத்துவ முத்தம் பற்றி விளக்கினால், இந்தச் செயல் தனக்கு வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார் நடிகர் பரணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!