வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (07/08/2017)

கடைசி தொடர்பு:14:07 (07/08/2017)

’’ஆரவ்வின் மருத்துவ முத்தமே ஸ்கிரிப்ட் தான்..!’’ - ஆரவ் அண்ணன் நதீம்

பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறியது தனக்கு வருத்தமளிப்பதாக ஆரவ்வின் அண்ணன் கூறியுள்ளார்.

aarav

விஜய் டிவியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பதினைந்து நபர்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் கலந்துகொண்டது முதல் இவரது கலகலப்பான பேச்சு, செயல்கள் எல்லாம் 'பிக் பாஸ்' பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. 

'பிக் பாஸ்' வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் ஓவியாவை ஒதுக்கியபோதுகூட, ஓவியாவுக்கு  ஆதரவாக நின்றவர் ஆரவ் மட்டுமே. இதனாலேயே ஓவியாவுக்கு ஆரவ்வை மிகவும் பிடித்துவிட்டது. அதனால் தனது காதலை ஆரவிடம் வெளிப்படுத்தினார் ஓவியா. ஆனால், ஆரவ், 'ஓவியா தனக்கு நல்ல தோழி மட்டுமே' என்றே ஹவுஸ் மேட்ஸ் எல்லோரிடமும் கூறிவந்தார். 

இதற்கிடையில், ஓவியா தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், ஆரவ் தனது காதலை நிராகரித்ததன் காரணமாகவும் 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஓவியா வீட்டைவிட்டு வெளியேறியது குறித்து கமல், வீட்டில் இருப்பவர்களிடம் தனித் தனியாகக் கேள்விகள் கேட்டார். 

அப்போது ஆரவ், ஓவியாவுக்கு 'மருத்துவ முத்தம்' கொடுத்தது பற்றி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர் ஹோம் மேட்ஸ். மேலும், சமூக வலைதளங்களிலும் ஆரவ்வின் இந்தச் செயல் குறித்து மீம்ஸ்கள் பல வந்து கொண்டிருக்கின்றன. ஆரவ்வின் 'மருத்துவ முத்தம்' குறித்து அவரின் குடும்பத்தார்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்துகொள்ள அவர் அண்ணனிடம் பேசினோம்.

''நான் ஏற்கெனவே சொன்னதுபோல், ஆரவ் மிகவும் கண்ணியமானவன். அவன் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் செய்ய மாட்டான். நிகழ்ச்சியில் நடப்பது எல்லாவற்றையும் ஸ்க்ரிப்டாகத்தான் எங்கள் குடும்பத்தார்கள் பார்க்கிறோம். ஏன் என்றால், 'பிக் பாஸ்' இந்தி, தெலுங்கு, தமிழ் என எல்லாவற்றையும் பார்த்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கு. 

நம்ம எல்லோருக்கும் ஒவ்வொரு ஜாப் இருக்கு. அதில் முழுவதுமாக அர்ப்பணிப்போடு இருந்தால்தானே அதில் வெற்றி பெற முடியும். ஆரவ் பிக் பாஸில் செய்வது எல்லாவற்றையும் நாங்கள் அவனது ஜாப்பாகத்தான் பார்க்கிறோம். எல்லோரையும் நம்ம திருப்தி பண்ண முடியாது. 

ஆரவ் மிகவும் போராடி சினிமாவுக்குள் சென்றிருக்கிறார். அவரது சினிமா கனவை இதனால் நிறுத்தி, நாளை 'உங்களால்தான் என் வாழ்க்கையில், நான் ஆசைப்பட்டதே செய்ய முடியவில்லை'  என்று அவர் சொல்லக்கூடாது. இன்று பேசுபவர்கள், நாளை ஆரவ் வெற்றி பெறும்போது, ஆரவ்வின் பக்கத்தில் நிற்கத்தான் ஆசைப்படுவார்கள். அதனால் எங்களுக்கு, ஆரவ்மீது கோபம் இல்லை. அவரை நிகழ்ச்சியில் நடிப்பதாகத்தான் பார்க்கிறோம். 

ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தது, வருத்தமளிக்கிறது. ஒரு படத்துக்கு எப்படி ஹீரோ, ஹீரோயின் தேவையோ அதே மாதிரிதான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா. அவர்கள் இருவரும்தான் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்'' என்றார் ஆரவ் அண்ணன் நதீம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்