’’ரொம்பவே வேதனைப்பட்டார் ஜூலி..!’’ - மனம்திறக்கும் ஜூலியின் குடும்பம்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கும் ஜூலி தனது இல்லம் திரும்பிய பிறகு மிகவும் கவலையில் உள்ளதாக ஜூலியின் தம்பி கூறியுள்ளார்.

ஜூலி

சின்னத்திரையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகளும், விவாதங்களும் அதிகம். இதனாலேயே நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. 

நிகழ்ச்சியில் பங்கேற்ற பதினைந்து பிரபலங்களில், பொதுஜன மக்களின் ஒருவராக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலியானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இவரது வருகை வீட்டுக்குள் இருக்கும் சிலருக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. பின்பு, இவரது பேச்சு மற்றும் சில நடவடிக்கையால் இவருடன் சகஜமாகப் பழக ஆரம்பித்தனர் ஹோம் மேட்ஸ்.

ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பம் முதலே அவருக்கு ஆதரவாக இருந்தவர் நடிகை ஓவியா. ஆனால், ஜூலியின் நடவடிக்கையால் ஓவியாவுக்கு நாளடைவில் ஜூலியைப் பிடிக்காமல் போய்விட்டது. ஓவியாவுக்கு மட்டுமன்றி நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களும் ஜூலியின் மீது கோபத்தில் இருந்தனர். அதனாலேயே 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஜூலியை வெளியில் அனுப்பும் போது, ’என் தங்கையை வெளியில் அனுப்பி வைக்கிறேன். அவர் மீது யாரும் கோபப்படக்கூடாது’ என்று கமல் கூறினார். 

ஜூலி வெளியே வந்தபிறகு அவர் தனது முகத்தை துணியால் கட்டிக்கொண்டு பரணி காலில் விழுந்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவியது. இதுபற்றி பரணியிடம் கேட்டப்போது, ’கருத்து கூற விரும்பவில்லை’ என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து 41 நாள்களுக்குப் பிறகு வெளியேறிய ஜூலி எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அவரது தம்பி ஜோஷ்வாவை தொடர்புகொண்டோம்.

''பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜூலி, சனிக்கிழமையே வீட்டுக்கு வந்துவிட்டார். வந்தவுடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முழுவதையும் ஹாட் ஸ்டாரில் பார்த்தவுடன் ரொம்பவே வேதனைப்பட்டார். ஆனா, வீட்டிலிருக்கும் அனைவரும் ஜூலிக்குதான் ஆதரவாக இருக்கிறோம். அம்மா, அப்பாவிடம் கொஞ்சம் கோபம் இருந்தது. ஆனால், நான் அவர்களை சமாதானம் படுத்திவிட்டேன்'' என்றவரிடம், சமூகவலைதளத்தில் பரவி வரும் வீடியோவைப் பற்றி கேட்டோம்.

''அந்த வீடியோ பற்றி எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி நான் ஜூலியிடம் எதுவும் பேசவில்லை. ஜூலி தற்போது ஓய்வில் இருக்கிறார். ஒரு இரண்டு மாதம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, அவரது வேலையைத் தொடர்ந்து செய்வார். ஆனால், கண்டிப்பாக சினிமாவுக்கு நடிக்கப் போக மாட்டார். ஏன்னா, வீட்டில் ரொம்ப கண்டிப்பு'' என்று கூறினார் ஜூலியின் தம்பி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!