''ஓவியாவின் உண்மை எனக்குப் பிடித்திருந்தது..!'' - நடிகை ரம்யா நம்பீசன் | I liked the reality of Oviya says Actress Remya Nambeesan

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (09/08/2017)

கடைசி தொடர்பு:13:50 (09/08/2017)

''ஓவியாவின் உண்மை எனக்குப் பிடித்திருந்தது..!'' - நடிகை ரம்யா நம்பீசன்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 பிரபலங்களில் இதுவரை  எட்டு பேர் வெளியேறியுள்ளனர். மீதமிருக்கும் ஏழு நபர்களுடன் பிந்து மாதவியும் சேர்ந்துள்ளார். இவர்களில் 'பிக் பாஸ்' டைட்டிலை வெல்லப்போவது யாரென்பதைப் பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். 100 நாள்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து கடும் சவால்களையெல்லாம் எதிர்கொண்டு நிகழ்ச்சியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் மட்டுமின்றி, வீட்டுக்குள்ளிருப்பவர்களுக்கும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

ரம்யா நம்பீசன்

45 நாள்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்திருக்கும் நிலையில், இன்னும் 55 நாள்களை வீட்டுக்குள் இருக்கும் பிரபலங்கள் கடக்க வேண்டியுள்ளது. பார்வையாளர்களைக் கவரும் வகையில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இயக்குநர்கள் கஷ்டமான டாஸ்க்குகளைப் போட்டியாளர்களுக்குக் கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸிலிருந்து ஓவியா வெளியேறியதிலிருந்தே நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் சற்று குறைந்தே காணப்படுகிறது.  ஓவியாவின் வேக் அப் நடனத்தைப் பார்க்காமல் பொழுதே செல்லவில்லை என்று ஓவியாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் புலம்பி வருகின்றனர். நடிகை ரம்யா நம்பீசன் ட்விட்டரில் பிக் பாஸ் போட்டியாளர்களைப் பற்றி கருத்துக்கூறி வருவதைப் பற்றி அவரிடம் கேட்டோம்.

''படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பேன். ஆரம்பத்தில் நிகழ்ச்சியைப் பார்க்காமல்தான் இருந்தேன். பிறகு, எல்லோரும் சொல்வதைக் கேட்டு பார்க்க ஆரம்பித்துவிட்டேன். ஓவியாவை நான் இதுவரை பார்த்ததில்லை, போனில் பேசியதும் இல்லை. ஆனால், ஓவியாவை மதிக்கிறேன். 'பிக் பாஸ்' வீட்டில் அவர் வெளிப்படையாக இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. அவரின் உண்மை எனக்குப் பிடித்திருந்தது. மற்றபடி, 'பிக் பாஸ்' வீட்டிலிருக்கும் யாரைப் பற்றியும் நான் ட்விட்டரில் எந்தப் பதிவும் செய்யவில்லை. யாரோ என் பெயரில் போலி அக்கவுன்ட் க்ரியேட் செய்து இந்த மாதிரியான பதிவுகள் போட்டுவருகின்றனர்'' என்றார் ரம்யா நம்பீசன் தெளிவாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்