Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அண்டர் கட்' - ஓவியாவின் புது ஹேர்ஸ்டைல் விவரம் இவைதான்! #OviyaHairStyle

ஓவியா

''பிக் பாஸ்' என்றாலே ஓவியா என்றாகிவிட்டது. அந்தளவுக்கு 'ஓவியா இன்னைக்கு சிட்டி சென்டர் வந்தாங்க, இன்னைக்கு டெல்லில இருக்காங்க' என்று அவர் நின்றால், நடந்தால், பேசினால்கூட வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் செல்ஃபியில் நிற்கும் ஓவியாவின் புகைப்படம் செம ஹாட் வைரலாகிக்கொண்டிருக்கிறது. காரணம் அவருடைய ட்ரெண்டி ஹேர்ஸ்டைல். 

சரி ஓவியாவுக்கு சூப்பராக இருக்கும் இந்த ஹேர்ஸ்டைல் நமக்கு செட்டாகுமா, என்ன செலவாகும், எந்த முகத்துக்கு செட்டாகும் என்று விளக்குகிறார் சென்னை 'ஓக் பார்லரின் உரிமையாளர், ஸ்டைலிஸ்ட் ஆனி, 

* ஓவியா செய்திருக்கும் ஹேர் ஸ்டைல்தான் தற்போதைய ட்ரெண்ட். தன்னை தைரியமானப் பெண்ணாக அதாவது, போல்டாக காட்டிக் கொள்வதற்காகவே சிலர் இந்த ஹேர் ஸ்டைலைத் தேர்ந்தெடுப்பார்கள். அதைத்தான் ஓவியாவும் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆமாம்.. உண்மையில் அவர் தைரியமானப் பெண்தானே.

* இந்த ஹேர் ஸ்டைலின் பெயர் 'அண்டர்கட்' (undercut). இந்த ஹேர் ஸ்டைலைப் பொருத்தவரை, ஒருபக்கமாக முடியை ஷார்ட்டாக கட் செய்வார்கள் அல்லது ட்ரிம்மர் கொண்டு முடியை குட்டியாக கட் செய்வதுதான் இதன் ஸ்பெஷல். பின்புற கழுத்துப் பக்கத்தில் மற்றும் ஏதாவது ஒருபக்க காதருகில் இருக்கும் முடியை மட்டும் ஷார்ட் செய்வதுதான் அண்டர்கட் ஸ்டைல்.

* இந்த ஹேர் ஸ்டைல் ஆண், பெண் என இரண்டுபேருக்குமே பொதுவானது. இரண்டு பேருக்குமே தன்னம்பிக்கையை காட்டக் கூடியதாக இருக்கும். 

* எல்லோருமே இந்த ஹேர் ஸ்டைலை செய்து கொள்ளலாமா என்றால் கண்டிப்பாக செட் ஆகாது. அதற்குத் தகுந்தாற்போன்ற உடல்வாகு, கலர், லைஃப் ஸ்டைல் என அனைத்தும் பொருந்தி வந்தால் மட்டுமே இந்த ஹேர்ஸ்டைல் உங்களை ஸ்டைலிஷாகக் காட்டும். 

* ஓவியாவின் உடல்வாகு, உயரம், கலர், ஃபேஸ்கட், ஸ்டைல் என எல்லாம் பக்காவாகப் பொருத்தியிருப்பதால் இந்த ஹேர் ஸ்டைல் அவருக்கு ஹைய்ஃபை லுக்கை கொடுக்கிறது. 

*  இந்த பிரீமியம் ஹேர் கட்டை பெரும்பாலும் ஸ்பெஷல் ஸ்டைலிஷ்டுகள் மட்டுமே உங்களுக்குச் செய்துவிடுவார்கள்.

* அண்ட்ர்கட் (undercut) ஹேர்  ஸ்டைல் செய்துகொள்ள ஒரு நபருக்கு 1000 ரூபாயிலிருந்து 1500 வரை சார்ஜ் செய்யப்படும். பிரபலமான கடையென்றால் அதற்கேற்ப விலை சற்றுக் கூடுதலாக வசூலிக்கப்படலாம். 

* ஹேர் கலர் செய்தவர்களும் இந்த ஹேர்கட்டை செய்து கொள்ளலாம். 'ஆட்' (odd) ஆக தெரியாது.  

* உங்களுக்கு வலது, இடது என எந்தப் பக்கம் பிடிக்கிறதோ, அந்தப் பக்கமாக ஹேர் சாய்வாக இருப்பதுபோல கட் செய்துகொள்ளலாம். ஆனால், வலதுபக்கம் ஃப்ளோவாக விடக்கூடிய ஃப்ரீ ஹேர் உங்களின் தைரியத்தைக் கூடுதலாகக் காட்டும்.  

* சிலர் ட்ரிம் செய்த இடங்களில் அவர்களுக்குப் பிடித்த சிம்பலை 'ஹேரில் கட்' செய்யச் சொல்வார்கள். 

* எந்தப் பக்கம் வகிடு எடுக்கிறோமோ அந்த பக்க கண்ணின் புருவத்தில் வகிடுக்கு நேராக ஹேர் ட்ரிம் செய்யப்படுவது 'அண்டர் கட்' ஸ்பெஷல்.

* இந்த ஹேர்ஸ்டைலுக்கு ஏற்ற டிரஸ்ஸிங் அணிவது மிகமிக முக்கியம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்