’ஓவியாதான் என் மருமகள்..!’ - ஆரவ் அம்மா சொன்னது உண்மையா?! | Oviya is My Daughter-in-law - Was Aarav Mother's Statement Real?

வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (12/08/2017)

கடைசி தொடர்பு:10:14 (12/08/2017)

’ஓவியாதான் என் மருமகள்..!’ - ஆரவ் அம்மா சொன்னது உண்மையா?!

விஜய் டி.வி-யின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி திரைப்படத்தில் இருக்கும் ட்விஸ்ட் காட்சிகளை விட அதிக ட்விஸ்டுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. நிறைய திருப்பங்கள் நிகழ்ச்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறன. பிக் பாஸ் பார்வையாளர்கள் ஓவியா இல்லாத காரணத்தால் நிகழ்ச்சியைப் பார்க்க மாட்டோம் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

ooviya

இதற்கெல்லாம் மேலாக, பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறிய பிறகும்கூட ஆரவ்வை  காதலிப்பதாக சென்னை சிட்டி சென்டரில் தனது ரசிகர்களிடம் சொன்னார். இவரது இந்தக் கள்ளங்கபடமற்ற பேச்சு இவரது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. 

ஓவியாவை ஒருமுறையாவது பார்க்கமாட்டோமா என்று அவரது ரசிகர்கள் தவம் இருக்கின்றனர் என்றே சொல்லலாம். அதற்குச் சான்றாக தர்மபுரியில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம். தர்மபுரியில் இருக்கும் காது கேளாதோர் அமைப்புக்கு ஓவியா அன்னதானம் செய்ய வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதை நம்பி ஏராளமான ஓவியா ரசிகர்கள் மற்றும் மீடியா தர்மபுரியில் காத்துக்கிடந்தனர். கடைசி வரை ஓவியா வரவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் மனமுடைந்தனர். இதுபற்றி ஓவியா தரப்பில் கேட்டப்போது, இன்னும் முப்பது நாள்களுக்கு எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பேசக் கூடாது என அக்ரீமென்ட்டில் இருப்பதாகக் கூறினார்கள். 

சமீபத்தில், ஆரவ்மேல் ஓவியா வைத்திருக்கும் காதலுக்கு, ஆரவ்வின் அம்மா பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், ’ஓவியாதான் என்னுடைய மருமகள்' என்று ஆரவ்வின் அம்மா கூறியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதுபற்றி ஆரவ்வின் அண்ணன் நதீமிடம் கேட்டபோது, ''அந்தச் செய்தி, முற்றிலும் வதந்தி. அம்மா யாரிடமும் அப்படிக் கூறவில்லை. இது முற்றிலும் தவறான செய்தி. யாரோ எங்கள் அம்மா கூறியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி இருக்கின்றனர்'' என்று கூறினார் ஆரவ்வின் அண்ணன் நதீம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்