பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்ல நான் ஆர்வமாக இருக்கிறேன்..!

விஜய் டி.வியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களையும், சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிகழ்ச்சி பற்றிய மீம்ஸ்கள் பார்க்க வைத்து விடுகிறது.

பிக் பாஸ்

பதினைந்து பிரபலங்கள் கலந்துகொண்ட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பலர் வெளியேறியிருக்கும் நிலையில் திடீர் வரவாக பிந்து மாதவி நிகழ்ச்சிக்குள் சென்றது, ஹோம் மேட்ஸ் மட்டுமன்றி நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையில் பிந்துமாதவியின் வருகைப் பற்றி விஜய் டி.வி-யின் தரப்பிலிருந்து கேட்கப்பட்டப் போது, ''இன்னும் நிறைய பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள். அதெல்லாம் சஸ்பென்ஸ்'' என்றனர்.

goli soda seetha

இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் என்று 'கோலிசோடா' படத்தில் நடித்த சீதா கூறியுள்ளார்.

'' தற்போது மாட்டுக்கு நான் அடிமை படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் ஹீரோவாக சாம்பார் ராசன் நடிக்கிறார். நான் பண்ணையார் வீட்டு பெண்ணாக நடிக்கும் இந்தப் படத்தில் என் கேரக்டர் பெயர் செண்பகம். காமெடி ட்ராக்கில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு செம ஜாலியாக இருக்கும். 

எனக்குக் கதாநாயகியாக நடிப்பதை விட, எப்போதும் காமெடி ரோல் பண்ணுவதுதான் பிடிக்கும். என்னை பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு போட்டியாளராகக் கூப்பிட்டால் கண்டிப்பாக செல்வேன். தினந்தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பேன். ஓவியா அக்காவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கள் வெளியே வந்தது எனக்குக் கஷ்டமாக இருந்தது'' என்று சொன்னார் கோலிசோடா சீதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!