Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் பிரியா பவானி சங்கர் நுழைகிறாரா? - பிரியா பவானி சங்கர் பதில்! #BiggBossTamil

பிரியா பவானி சங்கர்

பிக் பாஸ்' வீட்டுக்குள் பிந்து மாதவி நுழைந்த அடுத்த வாரமே ஓவியா அந்த நிகச்சியிலிருந்து வெளியேறினார். ஓவியா 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, அவருடைய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். அதன் பிறகு ஓவியா 'பிக் பாஸ்' வீட்டிற்குள் மீண்டும் வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அவருடைய இடத்தை ஃபில் செய்யும் வேலையில் விஜய் டிவி தரப்பு இறங்கியிருக்கிறது. தினமும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் போகிறார், இவர் போகிறார் என்று ரூமர்கள் காற்றில் தீயாகப் பரவுகின்றன. 

விஜய் டி.வியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடித்த நடிகையும், மாடலுமான பிரியா பவானி சங்கர் பல மாதங்களுக்கு முன்பு, தான் நடித்த சீரியலில் இருந்து சில காரணங்களுக்காக விலகினார். இப்போது, 'மேயாத மான்' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் வரும் வாரத்தில் 'பிக் பாஸ்' வீட்டில் நுழையவிருக்கிறார்  பிரியா பவானி சங்கர் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. அது குறித்து அவர் பெயர் கொண்ட ட்விட்டர் அக்கவுன்டில் செய்தி வெளியாகியிருக்கிறது.

 

ஶ்ரீப்ரியா - பிரியா பவானி சங்கர்

அதில், 'ட்விட்டரை கொஞ்ச நாட்களுக்கு சைன் ஆஃப் செய்கிறேன். உங்களுடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. பெரிய மாஸ் மீடியா வாயிலாக உங்களைச் சந்திக்கிறேன்' என பதியப்பட்டிருந்தது. அதே சமயம் இன்று நடிகை ஶ்ரீப்ரியாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'என் பெயரில் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவிருக்கிறார்' எனப் பதிந்திருக்கிறார். 

பிரியா பவானி சங்கர்

இது குறித்து 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் நடிகை பிரியாவிடம் பேசினோம், 

“ட்விட்டருக்கு பாய் சொல்லியிருக்கீங்களே பெரிய ஐடியா எதுவும் இருக்கிறதா?”

“அப்படியா?.. நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியுது. நான் ட்விட்டர் ஹேண்டில் பண்றதில்லை. ஃபேஸ்புக்ல மட்டும்தான் இருக்கேன். எனக்கு ட்விட்டரில் அக்கவுண்ட்டே இல்லை. அது ஃபேக் அக்கவுண்ட்.  நல்லவேளை இப்பவாவது ட்விட்டருக்கு சைன் ஆஃப் பண்ணிட்டேனே (சிரிக்கிறார்)”.

 

பிரியா பவானி சங்கர்

“பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறதே?”

“நான் சென்னையில்தான் இருக்கேன். எனக்கென்று வேறு கமிட்மென்ட் இருக்கிறது. நான் அந்த நிகழ்ச்சிக்குப் போகவில்லை. ரூமர் பரவியிருக்கிறது. மற்றப்படி எந்த வாய்ப்பும் அங்கிருந்து வரவில்லை”. 

“நடிகை ஶ்ரீபிரியா அவர்களும் தன் பெயரில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கிறாரே?”

“அப்படியா.. நான் அந்த ட்விட்டைப் பார்க்கல. வேற யாரையாவது சொல்லியிருக்கலாம். நான் அந்த ஆள் இல்லை.” என்றார் பிரியா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement