பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப் போட்டியாளராக நுழையும் நடிகை..!

நடிகை சுஜா

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்தவர், நடிகை சுஜா. இவர், பிக் பாஸ் வீட்டிற்குள் புதுப் போட்டியாளராக நுழையப்போகிறார் என்கிற தகவல், சில நாள்களாக வலம் வந்தன. தற்போது விஜய் டி.வி வெளியிட்ட விளம்பரத்தில், இந்தச் செய்தி உண்மையாகியுள்ளது.

15 போட்டியாளர்கள் கலந்துகொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில், பலர் வெளியேறி, பிந்து மாதவி உள்ளே வந்துள்ளார். தற்போது ஏழு நபர்கள் மட்டுமே அந்த வீட்டில் இருக்கின்றனர். இவர்களோடு, நடிகை சுஜாவும் தற்போது சேர்ந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 நாள்கள் முடிந்தநிலையில், மீதமிருக்கும் 50 நாள்களில் இன்னும் சில பிரபலங்கள் வருவார்கள் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதேபோல, தற்போது சுஜா இணைந்துள்ளார். இவருக்கு அடுத்த போட்டியாளராக, நடிகர் விடிவி கணேஷும், 'வேலைக்காரன்' படத்தின் புரமோஷனுக்காக ஒரு நாள் மட்டும் சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவிருக்கிறார்கள் எனத் தகவல்கள் வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!