பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறாரா நடிகர் விடிவி கணேஷ்..!? | VTV Ganesh reveals about bigg boss rumours

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (17/08/2017)

கடைசி தொடர்பு:15:44 (17/08/2017)

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறாரா நடிகர் விடிவி கணேஷ்..!?

’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து காமெடி ரோலில் நடித்தவர் விடிவி கணேஷ். அதற்கு முன்பு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம்தான் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. 

sakka podu podu raja

தற்போது நடிகர் சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தைத் தயாரித்துவருகிறார் விடிவி கணேஷ்.  படத்தின் அப்டேட்ஸுக்காக விடிவி கணேஷிடம் பேசினோம்.

''கனல் கண்ணன் இந்தப் படத்துக்கு ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார். எடிட்டிங்கை ஆண்டனி செய்திருக்கிறார். இப்படி, விஜய் பட தரத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். இந்தப் படத்துக்காக சிம்பு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் ஐந்து இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், லியோன் ஜேம்ஸ் போன்றோர் இந்தப் படத்தில் பாடியிருக்கிறார்கள். இதுதவிர சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா இருவரும் சேர்ந்து 'வா முனியம்மா வா' என்கிற பாடலை பாடியிருக்கிறார்கள். 

vtv ganesh

இந்தப் பாடல் விக்ரமின் 'ஓ போடு' பாடல் மாதிரி நல்லா ஹிட் அடிக்கும். சிம்புவை சின்ன வயதிலிருந்தே எனக்கு தெரியும். அவருக்கு இசை மீது அதிக ஆர்வம் உண்டு. அதனால், அவர் இசையமைத்தால் நன்றாகயிருக்கும் என்று எண்ணினேன். நான் கேட்டவுன், அவரும் ஓகே சொல்லிவிட்டார். செப்டம்பர் முதல் வாரம் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த ப்ளான் பண்ணியிருக்கோம்'' என்றவரிடம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ளப் போவதாக ஒரு செய்தி வருகிறதே அது உண்மையா என்று கேட்டதற்கு, ''அது ஒரு வதந்தி. என்னிடம் கலந்துகொள்ள கேட்டார்கள். ஆனால், எனக்கு பட வேலைகள் இருப்பதால் நான் செல்லவில்லை'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close