பிக் பாஸ் வீட்டு சுவர் ஏறி குதித்த நடிகர் ஹரீஷ் கல்யாண்..!

ஹரிஷ் கல்யாண்

'சிந்து சமவெளி' படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். ’பொறியாளன்’, ’வில் அம்பு’ என அடுத்தடுத்து தமிழில் சில படங்கள் நடித்திருக்கும் ஹரீஷ், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புது போட்டியாளராக நுழைந்திருக்கிறார். 

தற்போது விஜய் டி.வி வெளியிட்ட விளம்பரத்தில், ஹரீஷ் கல்யாண் பிக் பாஸ் வீட்டின் சுவர் ஏறி குதித்து என்ட்ரி கொடுக்கிறார். நேற்று நடிகை சுஜா புது போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார். இன்று ஹரீஷ் நுழைந்துள்ளார். கமல் சொன்னது போல் 50 நாள்களுக்கு பிறகு மேலும் சில பிரபலங்கள் வீட்டிற்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 15 போட்டியாளர்கள் கலந்துகொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது ஏழு நபர்கள் மட்டுமே அந்த வீட்டில் இருக்கின்றனர். இவர்களோடு, சுஜா,ஹரீஷ் கல்யாண் தற்போது சேர்ந்துள்ளார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!