இனிமேல்தான் உண்மையான விளையாட்டு ஆரம்பம்! - பிக் பாஸ் பற்றி நடிகர் ஷக்தி

பலரின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக மாறியிருக்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தற்போது 50 நாள்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற 15 போட்டியாளர்களில் வீட்டிலிருந்து சிலர் வெளியேறியிருக்கும் நிலையில், தற்போது காயத்ரி, ரைசா, சினேகன், ஆரவ், வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். இதில் தற்போது புதிய போட்டியாளர்களாக பிந்துமாதவி, சுஜா மற்றும் ஹரிஸ் கல்யாண் அடியெடுத்து வைத்திருக்கின்றனர். 

bigg boss sakthi

இனிவரும் நாள்களில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி எதை நோக்கி பயணிக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர். கண்டிப்பாக மீம்ஸ் க்ரியேட்டருக்கு நல்ல தீனி காத்துக்கொண்டிருக்கிறது. 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறியது நல்லது என ஃபேஸ்புக்கில் பதிவு தட்டியுள்ளார் நடிகர் ஷக்தி. அதில், உங்களுடைய சப்போர்ட் மற்றும் ஆலோசனை கொடுத்தற்கு நன்றி. நான் பேசியது பெண்களுக்கு எதாவது வருத்தம் அளித்திருந்தால் மனிப்புக் கேட்டுகொள்கிறேன். 'பிக் பாஸ்' வீட்டுக்குள் 24 மணி நேரம் முழுவதும் நடப்பதை ஒன்றரை மணி நேரத்தில் ஒளிபரப்புகின்றனர். அதில் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் சிலரைக் காட்டுகிறார்கள். இந்த உலகத்தில் நல்வர்கள் கெட்டவர்கள் என்று யாருமில்லை. நான் கரெக்டான நேரத்தில் வெளியே வந்துவிட்டேன் என்று எண்ணுகிறேன். தற்போதுதான் உண்மையான விளையாட்டு ஆரம்பமாகப்போகிறது. பிக் பாஸில் கலந்துகொண்டது பெரிய அனுபவம். விஜய் டிவி-க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார். 

bigg boss sakthi

'பிக் பாஸ்' பார்வையாளர்களுக்கு ட்ரிக்கர் ஷக்தி என்று சொன்னால் நன்றாகத் தெரியும். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கும் நிலையில் 'பிக்  பாஸ்' பற்றிய இந்த ஸ்டேட்டஸ் எதற்காக என்பது பற்றி தெரிந்துகொள்ள சக்தியிடம் பேசினோம்.

''100 நாள்கள் முடியும் வரை நிகழ்ச்சியைப் பற்றி எதுவும் பேட்டி கொடுக்கக் கூடாது. அதனால், எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், மகிழ்ச்சியாக இருக்கிறேன். வீட்டுக்கு வந்தவுடன் மனைவி, குழந்தைகளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டதால், அவர்களுடன் வெளியே சென்றுவிட்டு தற்போதுதான் வீடு திரும்பினேன்'' என்றவரிடம் கமல் சாரிடம் பேசியது பற்றி கேட்டால்,

பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை வெளியே என்ன நடந்தது என்று தெரியாது. அதையெல்லாம் தெரியாமலே கமல் சாரிடம் மிகவும் சரியாகப் பேசியிருக்கிறேன். அதை எல்லோரும் பார்த்திருப்பார்கள். நல்ல வேலை அந்தச் சக்கரத்தை சுற்றும்போது காயத்ரி வந்தது. அதனால் அவர்களைப் பற்றிச் சொன்னது கரெக்டாகயிருந்தது. என்னைப் பற்றி தமிழ் சினிமாவில் இதுவரை எந்த கிசுகிசுவும் வந்ததில்லை. 'பிக் பாஸ்' பற்றி இப்படி வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது'' என்றார் நடிகர் ஷக்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!