பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரி மேலும் ஒரு வழக்கு! | Another case filed against bigg boss and kamal

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (21/08/2017)

கடைசி தொடர்பு:12:39 (21/08/2017)

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரி மேலும் ஒரு வழக்கு!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக தற்போது  தமிழ்நாடு  இசை வேளாளர் இளைஞர் பேரவை நலசங்கம்  சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி அதன் தலைவரிடம் பேசியப் போது, ’நடிகர் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் கமல்

கமல் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என பல அமைப்புகள் அவ்வப்போது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். சிறிது நாள்களுக்கு முன்பு கலாசாரச் சீரழிவை ஏற்படுத்தும் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்தார். அதே போன்று 'இந்து மக்கள் கட்சி'யின் தலைவர் அர்ஜூன் சம்பத்தும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி விஜய் டி.வி அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்தினார்.

மேலும் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற காயத்ரி பயன்படுத்திய ’சேரி பிஹேவியர்’ வார்த்தைக்கு பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதற்கிடையில் தற்போது தமிழ்நாடு  இசை வேளாளர் இளைஞர் பேரவை நலசங்கம் சார்பாக இந்த நிகழ்ச்சியைத் தடை செய்யக்கோரி சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் குகேஷூடன் பேசினோம். '' ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கடந்த ஜூலை 14-ம் தேதி நடிகர் சக்திக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அவர் நாதஸ்வரம் இசைக்கருவியை இசைப்பது போல் நடிக்கவேண்டும். டாஸ்க் முடித்தவுடன் சக்தி நாதஸ்வரம் கருவியை வைத்து விளையாடினார். பிறகு, டைனிங் டேப்பிளில் அலட்சியமாக வைத்தார். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நாதஸ்வரம் கருவிதான் எங்களில் வாழ்வாதாரம். அதை தெய்வீகமாக வணங்குகிறோம். அதை சக்தி இப்படி பயன்படுத்தியது முற்றிலும் தவறு. இது சம்பந்தமாக விஜய் டி.வி தரப்புக்கு ஏற்கெனவே நோட்டீஸ் ஒன்று அனுப்பினோம். அதற்கு இதுவரை எந்த பதிலையும் விஜய் டி.வி தரப்பிலிருந்து எங்களுக்கு கொடுக்கவில்லை. இதற்காக நிகழ்ச்சியின் தயாரிப்பு அமைப்பு, கமல் மற்றும் சக்தி பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக நாங்கள் வழக்கு தொடுத்துள்ளோம்'' என்றார் குகேஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close