Published:Updated:

Bigg Boss: இந்த முறை எட்டிப்பிடித்த அஸீம்! சீசன் 6 ல் என்ட்ரியாகும் பின்னணி

அஸீம்

அஸீமுடன் ‘பகல் நிலவு’ தொடரில் நடித்த ஷிவானி அந்த சீசனில் கலந்து கொண்டார். அப்போது அஸீம் – ஷிவானி கெமிஸ்ட்ரி பேசப்பட்டதால் அஸீமும் நிகழ்ச்சிக்குள் செல்வார் என எதிர்பார்க்கப் பட்டது.

Bigg Boss: இந்த முறை எட்டிப்பிடித்த அஸீம்! சீசன் 6 ல் என்ட்ரியாகும் பின்னணி

அஸீமுடன் ‘பகல் நிலவு’ தொடரில் நடித்த ஷிவானி அந்த சீசனில் கலந்து கொண்டார். அப்போது அஸீம் – ஷிவானி கெமிஸ்ட்ரி பேசப்பட்டதால் அஸீமும் நிகழ்ச்சிக்குள் செல்வார் என எதிர்பார்க்கப் பட்டது.

Published:Updated:
அஸீம்

பிக் பாஸ் சீசன் 6 ல் நடிகர் அஸீம் ஒரு போட்டியாளராகக் களம் இறங்குகிறார்.

விஜய் டிவியில் நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது பிக் பாஸ் சீசன் 6. இந்த முறை இருபதுக்கும் மேலான போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள் நிகழ்ச்சி தினசரி ஒரு மணி நேர எபிசோடாக டிவியில் ஒளிபரப்பாகும் அதே வேளை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்க்க வழி செய்துள்ளார்கள்.

கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விபரங்களை எப்போதும் போல நாம் எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டோம்.

தற்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மேலும் ஒரு போட்டியாளர் குறித்து உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

அந்தப் போட்டியாளர் வேறு யாருமல்ல, பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்வதற்காக குவாரன்டைன் வரை சென்று விட்டு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பி வந்தாரே அதே அஸீம்தான்.

அஸீமுடன் ‘பகல் நிலவு’ தொடரில் நடித்த ஷிவானி அந்த சீசனில் கலந்து கொண்டார். அப்போது அஸீம் – ஷிவானி கெமிஸ்ட்ரி பேசப்பட்டதால் அஸீமும் நிகழ்ச்சிக்குள் செல்வார் என எதிர்பார்க்கப் பட்டது. அஸீமும் க்வாரண்டீன் எல்லாம் சென்றார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை அவர்.

தொடர்ந்து கடந்த சீசனின் போது அஸீம் சன் டிவிக்கு வந்து விட்டார். பிக் பாஸ் ஒளிபரப்பான அதே நேரத்தில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ தொடரில் ஹீரோவாக நடித்தார்.

அஸீம் - ஷிவானி
அஸீம் - ஷிவானி

சில மாதங்களுக்கு முன் அந்த சீரியல் முடிவடைந்த நிலையில் அஸீமை இந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக அனுப்ப நினைத்த விஜய் டிவி அவரிடம் பேசியுள்ளது.

தொடர்ந்து அஸீம் பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆக இரண்டு முறை குவாரன்டைனில் மட்டுமிருந்த அனுபவத்துடன் முதன் முறையாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் அஸீம்.

கடந்த முறை ஷிவானியைப் போல ஜனனி, ஷெரினா, நீது, என ஏகப்பட்ட பேர் இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளார்கள்.