Published:Updated:

கமலுக்கு கொரோனா; பிக் பாஸ் டீமின் முடிவென்ன?

கமல் ஹாசன்

`கடமை தவறியவன்' என்கிற அவப்பெயர் எனக்கு ஒருபோதும் வந்தது கிடையாது. இனியும் வராது என நம்புகிறேன்' என பிக் பாஸில் பேசியிருந்தார் கமல் .

கமலுக்கு கொரோனா; பிக் பாஸ் டீமின் முடிவென்ன?

`கடமை தவறியவன்' என்கிற அவப்பெயர் எனக்கு ஒருபோதும் வந்தது கிடையாது. இனியும் வராது என நம்புகிறேன்' என பிக் பாஸில் பேசியிருந்தார் கமல் .

Published:Updated:
கமல் ஹாசன்

கமல்ஹாசனுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் அவர் கலந்து கொள்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்ற வார எவிக்ஷன் எபிசோடை முடித்து விட்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் சரியாக அடுத்த வார எபிசோடுக்கு (அதாவது நேற்று முன் தினம்) சென்னை வந்து விட்டார்.

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போதுகூட, 'சிகாகோவில் இருக்கிறாரே, சரி இந்த வாரம் பிக் பாஸ் வர மாட்டார் போல' என சிலர் பேசியதாக என் காதுகளுக்கு வந்தது. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, 'கடமை தவறியவன்' என்கிற அவப்பெயர் எனக்கு ஒருபோதும் வந்தது கிடையாது. இனியும் வராது என நம்புகிறேன்' எனப் பேசியிருந்தார்.

பிக் பாஸ் கமல்
பிக் பாஸ் கமல்

இந்தச் சூழலில் தற்போது அவருக்கு கொரோனா பாசிடிவ்.

எனவே வரும் வாரம் பிக் பாஸ் எவிக்ஷன் இருக்குமா? கமல் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் ஷூட்டிங் என்னவாகும்? என்கிற ரீதியில் எழுந்துள்ள கேள்விகளுடன் நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் பேசினேன்.

''சேனல்ல இப்ப இதுபத்தின விவாதம் போயிட்டிருக்கு. கமல் சார்கிட்ட கலந்து ஆலோசிச்சுதான் எந்தவொரு முடிவையும் எடுப்பாங்க. எவிக்ஷன் மட்டும் இல்லாம, வழக்கம்போல அந்த ரெண்டு நாள்களும் நடக்கறதை ஒளிபரப்பலாமா அல்லது விர்ச்சுவல்ல கமல் வீட்டுல இருந்தே நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு ஒளிபரப்புவதானு ரெண்டு கோணத்துல டிஸ்கஸ் பண்ணிட்டிருக்காங்க" என்கின்றனர் இவர்கள்.

மூன்றாவதாக ஒரு திட்டமும் இருக்கிறதாம். அது கமலுக்குப் பதில் தற்காலிகமாக வேறு ஒருவரை தொகுத்து வழங்க வைப்பது என்கிறார்கள். என்ன முடிவாகிறது என விரைவில் தெரிந்துவிடும்.