Published:Updated:

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி... பொங்கல் ஸ்பெஷல் என்ன தெரியுமா?!

பிக்பாஸ்
பிக்பாஸ்

எவிக்‌ஷனில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழின் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. நேற்றைய எவிக்‌ஷனில் ஷிவானி வெளியேறியதைத் தொடர்ந்து தற்போது அந்த வீட்டுக்குள் ஆரி, பாலா, சோம், ரியோ, கேபி, ரம்யா என ஆறு பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஃபைனலுக்குத் தேர்வாகி இருக்கிறார்கள்.
பிக்பாஸ்
பிக்பாஸ்

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்க இருக்கும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இதற்கு முன்னர் ஷோவிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் அழைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ரேகா, அர்ச்சனா, நிஷா மற்றும் ரமேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர்.
பிக்பாஸ் | வேல்முருகன்
பிக்பாஸ் | வேல்முருகன்

பாடகர் வேல்முருகன், சம்யுக்தா முதலானோர் இன்று காலை தங்கள் வீடுகளிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர். அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் எபிசோடு நாளை ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை அன்று அனைத்துப் போட்டியாளர்கள் முன்னிலையில் பாடகர் வேல்முருகனின் நாட்டுப்புற பாட்டுக் கச்சேரியுடன் பிக்பாஸ் வீடு களைகட்டுமென எதிர்பார்க்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு