Published:Updated:

பிக்பாஸ்: தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கினாரா அக்‌ஷரா ரெட்டி? 2013-ம் ஆண்டு என்ன நடந்தது?

2013- ம் ஆண்டு, கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்ராவ்யா சுதாகர்தான் இந்த அக்‌ஷரா ரெட்டி எனத் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. மேலும், 2013-ம் ஆண்டின் தங்கக் கடத்தல் தொடர்பாக அவர் பேசிய வீடியோக்களும் வைரலாகத் தொடங்கின.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீஸன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியாளரும் சமூக வலைதளங்களில் பிரபலம். 

`ஒரு கதை சொல்லட்டுமா' டாஸ்க்கில் ஒவ்வொருவரும் தங்கள் கதையைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது போட்டியாளர் அக்‌ஷரா, தன் தந்தையின் மறைவு குறித்து பகிர்ந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டில், தான் கார்னர் செய்யப்படுவது போன்ற உணர்வால், அக்‌ஷரா அழுவது போன்ற புரொமோ வீடியோக்களும் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அக்‌ஷராவுக்கு ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியது.

Akshara Reddy
Akshara Reddy
Photo: Instagram/ @aksharareddyofficial
பிக் பாஸ் -17| பஞ்ச தந்திரம் டாஸ்க்கும், பஞ்சர் ஆன அபிஷேக், பிரியங்கா கூட்டும்… குரூப்பிஸம் ஆரம்பம்!

இந்நிலையில், 2013- ம் ஆண்டு, கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்ராவ்யா சுதாகர்தான் இந்த அக்‌ஷரா ரெட்டி எனத் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. மேலும், 2013-ம் ஆண்டின் தங்கக் கடத்தல் தொடர்பாக அவர் பேசிய வீடியோக்களும் வைரலாகத் தொடங்கின. அந்த வீடியோவில், `தங்கக் கடத்தலில் ஈடுபட்ட ஃபயாஸ் என்பவரை என் நண்பர்களின் மூலம் எனக்குத் தெரியும். அவ்வளவுதான் . அதனால் சி.பி.ஐ என்னையும் அழைத்து விசாரித்தார்கள். எனக்குத் தெரிந்த தகவல்களை நான் சொல்லிவிட்டேன். நான் அடிக்கடி துபாய் போகவில்லை. என் பாஸ்போர்ட்டை வேண்டுமானால் செக் செய்துகொள்ளுங்கள். எனக்கும் இந்தக் கடத்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்று அக்‌ஷரா கூறியுள்ளார். அப்போது அவரின் பெயர் ஸ்ராவ்யா சுதாகர் என்றே செய்திகளில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆனால், 2019-ம் ஆண்டு நடந்த `மிஸ் குளோப் வேர்ல்டு' அழகிப் போட்டியில் அக்‌ஷரா என்ற பெயரில் கலந்துகொண்டு மிஸ் குளோப் வேர்ல்டு பட்டத்தையும் பெற்றுள்ளார். அக்‌ஷரா தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய பிறகு, தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார் என்றும், முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்றும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. உண்மையைத் தெரிந்து கொள்ள அக்‌ஷரா ரெட்டிக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.

``ஃபயாஸ் என்பவர் மாடல்களுக்கான பி.ஆர்.ஓ. அக்‌ஷரா மாடலிங் செய்ததால் அக்‌ஷராவின் தோழி மூலமாக ஃபயாஸ் அவருக்கு அறிமுகமானார். அதை அக்‌ஷரா எங்குமே மறுக்கவில்லை. தங்கக் கடத்தல் விவகாரத்தில் அக்‌ஷரா பெயர் சிக்கியது உண்மைதான்.

அக்‌ஷரா
அக்‌ஷரா
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா! மருத்துவமனையில் அனுமதி... நடந்தது என்ன?

ஃபயாஸ் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ, அவர்களை எல்லாரும் சி.பி. ஐ விசாரித்தது. அதில் 238 பேரை விசாரித்தார்கள். அதில் அக்‌ஷராவும் ஒருவர். ஆனால், அக்‌ஷராவுக்கும் தங்கக் கடத்தலுக்கும் சம்பந்தம் இல்லை. அக்‌ஷரா பெயர் மாற்றம் செய்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அது நியூமராலஜிக்காக மாற்றப்பட்ட பெயர்.

விஜய் டிவியில் இது அவருக்கு இரண்டாவது நிகழ்ச்சி. 2018-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சியின் போதே, அக்‌ஷரா என்ற பெயரில்தான் கலந்துகொண்டார். அதற்கான ஆதாரங்கள் யூடியூபில் இருக்கின்றன. அக்‌ஷரா பிளாஸ்டிக் சர்ஜரியெல்லாம் செய்துகொள்ளவில்லை. உடல் எடையைக் குறைத்துள்ளார். அதனால் முகவெட்டுத் தோற்றம் மாறியுள்ளது போன்று இருக்கிறது" என்று கூறினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு