Published:Updated:

பிக் பாஸ்: "ராஜூ வெளிய வந்ததும் நேர்ல போய் பாக்கப்போற முதல் ஆள் நான்தான்" - இமான் அண்ணாச்சி!

பிக் பாஸ் ராஜூ.

பிக் பாஸ் நிகழ்ச்சியால ராஜூ டைட்டில் வின் பண்ணியிருக்கார்னு பலரும் சொல்றாங்க. இனிமேல் தான் ரிசல்ட் தெரியும்.

பிக் பாஸ்: "ராஜூ வெளிய வந்ததும் நேர்ல போய் பாக்கப்போற முதல் ஆள் நான்தான்" - இமான் அண்ணாச்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சியால ராஜூ டைட்டில் வின் பண்ணியிருக்கார்னு பலரும் சொல்றாங்க. இனிமேல் தான் ரிசல்ட் தெரியும்.

Published:Updated:
பிக் பாஸ் ராஜூ.

பிக்பாஸின் `Finale' எபிசோட் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இரண்டு நாளைக்கு முன்பாக பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் கொண்டாட பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அதில் இமான், ஐக்கி, சின்னப்பொண்ணு, இசைவாணி போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. Finale எபிசோட் தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் இமான் அண்ணாச்சி மட்டும் கலந்து கொள்ளவில்லை. அதுகுறித்து அவர் தரப்பில் தொடர்பு கொண்டு பேசினோம். ‘பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த பிறகு தொடர்ந்து படம் ஷூட்டிங், டப்பிங் போன்றவற்றிற்கு தேதி ஒதுக்க வேண்டியிருந்ததால் வீட்டிற்குள் போக முடியவில்லை. `Finale' எபிசோட்டில் கலந்து கொள்வதற்காக ஏழு நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தொடர்ந்து, ஷூட்டிங், டப்பிங் போன்றவற்றால் குவாரண்டைனுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் தான் அண்ணாச்சியால் ஃபைனலில் கலந்து கொள்ள முடியவில்லை.

ராஜு - இமான் அண்ணாச்சி
ராஜு - இமான் அண்ணாச்சி

ராஜூ டைட்டில் வின் பண்ணியிருக்கார்னு பலரும் சொல்றாங்க. இனிமேல் தான் ரிசல்ட் தெரியும். ஆனா, அவர் ஜெயிச்சா நிச்சயமா சந்தோஷப்படுற முதல் ஆள் அண்ணாச்சிதான்! ராஜூ எப்படி அண்ணாச்சியை எதிர்பார்த்து காத்திருந்தாரோ அப்படித்தான் அண்ணாச்சியும் அவரை பார்க்க ஆசையா காத்திருக்கிறார். ராஜூ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் அவருடைய வீட்டுக்கே போய் அவரை பார்க்கணும் சொல்லியிருக்கிறார்’ என்றார். காமெடியன் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை ஜெயிக்கணும்னு ராஜூ பிக்பாஸ் வீட்டில் சொல்லியிருப்பார். முழுக்க முழுக்க தன்னுடைய காமெடி திறமையால் இந்த நிகழ்ச்சியையும் ஏகப்பட்ட ரசிகர்களையும் வென்றிருக்கிறார்!