Published:Updated:

பிக் பாஸ்: கடைசி நேரத்தில் திடீரென வீட்டைவிட்டு சென்ற பிரியங்கா! என்ன காரணம்?

பிரியங்கா

பிரியங்காவுக்கு என்ன பிரச்னை என விசாரித்தோம். அவர்கள் கூறியதன்படி...

பிக் பாஸ்: கடைசி நேரத்தில் திடீரென வீட்டைவிட்டு சென்ற பிரியங்கா! என்ன காரணம்?

பிரியங்காவுக்கு என்ன பிரச்னை என விசாரித்தோம். அவர்கள் கூறியதன்படி...

Published:Updated:
பிரியங்கா

விஜய் டிவியில் 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நாளையுடன் முடிவடைய இருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் அமீர், சஞ்சீவ் இருவரும் வைல்டு கார்டு வழியாக இணைந்தார்கள். அடுத்தடுத்த வாரங்களில் நடந்த எவிக்‌ஷனில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறி நிறைவாக அமீர், நிரூப், ராஜு, பிரியங்கா, பாவனி ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றில் டைட்டில் வெல்லும் ரேஸில் இருக்கிறார்கள்.

கமல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடின் ஷூட்டிங் இன்று 15/1/22 காலை தொடங்கி தற்போது நடந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங்க்கும் இன்றுதான்.

இதற்கிடையில் நேற்று முன் தினம் போட்டியாளர்களில் ஒருவனான தொகுப்பாளர் பிரியங்காவுக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நிகழ்ச்சியிலேயே அறிவிக்கப்பட்டது. பிரியங்காவுக்கு என்ன பிரச்னை என விசாரித்த போதுதான் அவர் நேற்று முன் தினம் மாலை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற தகவலும் கிடைத்தது.

பிரியங்கா
பிரியங்கா

நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின்படி,

’மருத்துவமனைக்குப் போகுற அளவுக்கு திடீர்னு பிரியங்காவுக்கு உடல் நலக் குறைவு (கோவிட் பிரச்னை இல்லை) ஏற்பட்டதும், அவங்களைப் பக்கத்துல இருந்த பனிமலர் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. மருத்துவமனையில அவங்களைப் பரிசோதித்த டாக்டர்கள் சிகிச்சையளித்த பிறகு இன்னும் ஒரேயொரு நாளுடன் நிகழ்ச்சியே முடிவடையறதால, திரும்ப நிகழ்ச்சிக்குள் போறதா இருந்தாலும் போகலாம்னு சொன்னாங்க. அதற்குப் பிறகு யோசித்த பிரியங்கா திரும்பவும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துட்டாங்க. எனவே இன்று நடைபெறும் கடைசி நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!