Published:Updated:

பிக் பாஸ் சீக்ரெட்ஸ் : நடனம்தான் வாழ்க்கை; உடன் நிற்கும் அஷ்ரப் குடும்பம்; அமீரின் பின்னணி இதுதான்!

பிக் பாஸ் அமீர்

பிக் பாஸ் : சஞ்சீவை எல்லோருக்கும் தெரியும். அமீர்? ஆனால் இந்த அமீர்தான் கடந்த சில தினங்களாக நிகழ்ச்சியைப் பேச வைத்திருக்கிறார்.

பிக் பாஸ் சீக்ரெட்ஸ் : நடனம்தான் வாழ்க்கை; உடன் நிற்கும் அஷ்ரப் குடும்பம்; அமீரின் பின்னணி இதுதான்!

பிக் பாஸ் : சஞ்சீவை எல்லோருக்கும் தெரியும். அமீர்? ஆனால் இந்த அமீர்தான் கடந்த சில தினங்களாக நிகழ்ச்சியைப் பேச வைத்திருக்கிறார்.

Published:Updated:
பிக் பாஸ் அமீர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 முடிவடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓரிருவரைத் தவிர போட்டியாளர்கள் அனைவரும் அவ்வளவாக பிரபலமில்லாதவர்களாக இருந்ததால் இந்த சீசன் முந்தைய சீசன்களுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் டல் தான். எனவே ‘சும்மா’வே உட்கார்ந்து கொண்டிருந்த பல போட்டியாளர்களை எவிக்‌ஷனில் ஒவ்வொருவராக வெளியேற்றினார்கள். இமான் அண்ணாச்சி, பிரியங்கா, அபிஷேக் ராஜா, தாமரை, பாவனி ஆகியோர்தான் ஓரளவு முகம் தெரிந்த மற்றும் கன்டென்ட் தரும் போட்டியாளர்களாக இருந்தார்கள். இவர்களிலும் அபிஷேக் ராஜா விஷயத்தில் என்ன நடந்தது என்பது பிக் பாஸுக்கே வெளிச்சம். பரபரப்பு தந்து கொண்டிருந்தவர் திடீரென வெளியேறினார். பிறகு வந்தார். மறுபடியும் வெளியேறினார். இந்த நிலையில்தான் வைல்டு கார்டு மூலம் சஞ்சீவ், அமீர் இருவரும் உள்ளே போனார்கள். சஞ்சீவை எல்லோருக்கும் தெரியும். அமீர்? ஆனால் இந்த அமீர்தான் கடந்த சில தினங்களாக நிகழ்ச்சியைப் பேச வைத்திருக்கிறார். அதுவும் பாவனியினுடன் அவர் காதல் செய்வதாக பேசிக் கொண்டிருப்பது மட்டுமே ( பாவனி அதைப் பலமுறை தவிர்த்துவந்தார் ) பிக் பாஸிற்கு கன்டென்ட். இதற்கிடையே யார் இந்த அமீர் என்பது பலருக்கும் கேள்வி எழுந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே தன் சொந்தக் கதையைச் சொன்ன போது பலரையும் கண் கலங்கினர் இந்த அமீர் யார்?

‘’சொந்த ஊரு ஊட்டியில கோத்தகிரிக்குப் போற வழியில இருக்கிற ஒரு மலைவாழ் கிராமம். சிறு வயசுலயே அப்பாவையும் அடுத்த சில வருஷங்கள்ல அம்மாவையும் இழந்துட்டார். ஒரு அண்ணன் உண்டு. அவர் எங்க இருக்கார்னு தெரியலை. தனியா ஒரு குடிசையில இருந்தவருக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸ்ல ஆர்வம். அவரின் அம்மாவுக்கும் அமீர் டான்ஸராக வேண்டும் என்பதே விருப்பம் அந்த ஆர்வத்துல அக்கம் பக்கத்துல இருந்த சில பசங்களுக்கு டான்ஸ் சொல்லித் தர்றதை மட்டுமே முழு வேலையாகச் செய்திட்டிருக்கார்’’ தன் கதையை அவரே கூறியதால் அவரின் டான்ஸ் அனுபவம் குறித்துக் கேட்டோம். அமீரைத் தெரிந்த சிலர், பிரபுதேவா, சாண்டி இருவரும்தான் அவருடைய ஆதர்ஷன மாஸ்டர்கள்’ என்கிற தகவலையும் சொன்னார்கள்.

சாண்டி
சாண்டி

தொடர்ந்து சாண்டியிடம் பேசிய போது,

‘கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சியில நான் ஜட்ஜா இருந்த சமயத்துல அவருடைய டீமைக் கூட்டிட்டு அந்த நிகழ்ச்சியில ஒரு போட்டியாளராக கலந்துகிட்டார். அப்பதான் அவரு பத்தி எனக்குத் தெரிய வந்தது. நல்ல திறமையான பையன். ரொம்ப கஷ்டமான பின்னணியில இருந்துதான் வந்திருக்கார்’ என்றார்.

நடனம் தவிர வாழ்க்கையில் எவ்வித பிடிப்புமின்றி வாழ்ந்து கொண்டிருந்த அமீரை அவரது நடன சாதனையைப் பார்த்தே தங்களது குடும்பத்தில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டதாம் ஊட்டியில் துணிக்கடை பிசினஸ் செய்து வரும் அஷ்ரப் என்பவரது குடும்பம்.

’அமீருடைய குடும்பப் பின்னணி குறித்து தெரிய வந்தப்ப ரொம்பவே கஷ்டமா இருந்திச்சு. சாப்பாட்டுக்கே கஷ்டப்படற அவருக்கு ஏதாச்சும் செய்யணும்னு தோணுச்சு. ஒரு டான்ஸ் ஸ்கூல் அமைச்சுத் தந்தோம். கொஞ்ச நாள்ல அந்த இடத்துல பிரச்னை வந்து அதை மூடும்படியா ஆகிடுச்சு. அதனால இப்ப தன்னுடைய பழைய அந்த இடத்துலயே முன்னாடி இருந்த மாதிரியே நடத்திட்டிருக்கார். ஆனா இன்னைக்கு எங்க வீட்டுல ஒருத்தர். கல்யாண வயசாகிடுச்சே, யாரையாச்சும் ;லவ் பண்ணினா சொல்லு, கல்யாணம் செய்து வைக்கிறோம்னு சொன்னோம். அப்படி எதுவும் இல்லைனு சொல்லிட்டான். நாங்களா ஒரு பொண்ணைப் பார்த்து மேரேஜ் செய்து வைக்கலாம்னா அதுக்கும் சரி சொல்லல. இந்த நிலையில தான் பிக் பாஸ் வாய்ப்பு வந்தது’ என்கிறார்கள் அஷ்ரபின் குடும்பத்தினர்.

அமீரின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்திட்டிருந்தவன். பிக் பாஸ் போறேன்னு சொன்னப்பவே, ‘எச்சரிக்கையா இரு, டிரிகரிங் பண்ணுவாங்க’னு சொல்லிதான் அனுப்பினோம்.நாங்க நினைச்சது நடந்திடுச்சு’ என்கிறார்கள்