Published:Updated:

பிக் பாஸ் 96: பெட்டியுடன் வெளியேறிய சிபி; குழம்பிய பாவனி; அடுத்து வரப்போகும் அதிரடி என்ன?

சிபி

பிக் பாஸ் 96: ‘Think smart’ என்று சரத்குமார் சொன்னாலும் சொன்னார், பாவனி அதையே பிடித்துக் கொண்டு தொங்குகிறார். மற்றவர்களிடமும் சொல்கிறார்.

பிக் பாஸ் 96: பெட்டியுடன் வெளியேறிய சிபி; குழம்பிய பாவனி; அடுத்து வரப்போகும் அதிரடி என்ன?

பிக் பாஸ் 96: ‘Think smart’ என்று சரத்குமார் சொன்னாலும் சொன்னார், பாவனி அதையே பிடித்துக் கொண்டு தொங்குகிறார். மற்றவர்களிடமும் சொல்கிறார்.

Published:Updated:
சிபி

“அடுத்த வாரம் உங்களுக்கெல்லாம் டாஸ்க் ரொம்ப டஃப்பா இருக்கும்” என்று சாபம் கொடுத்துவிட்டுச் சென்றார் சஞ்சீவ். ஆனால் ஒரு டஃப்பும் இல்லை. ஒரே மப்பாகத்தான் இருக்கிறது. “என்னமோப்பா.. ஆரம்பிச்சிட்டோம்.. முடிச்சு விட்டுருவோம்” என்கிற மாதிரியேதான் இந்த சீசன் போய்க் கொண்டிருக்கிறது.

“பயம். உனக்குப் பயம்…” என்று நிரூப்பை தொடர்ந்து இம்சை தந்து கொண்டிருந்த சிபி “இப்ப எனக்குப் பயம்” என்று சொல்லி 12 லட்ச ரூபாயுடன் வெளியேறியதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். மற்றவர்கள் அதைப் பற்றியே மூலைக்கு மூலை அமர்ந்து பேசி மாய்ந்தார்கள். வேறு ஒன்றுமே நிகழவில்லை.

எபிசோட் 96-ல் என்ன நடந்தது?

‘மக்கட் பேறும் மழை பெய்கிறதும் மகாதேவனுக்குக் கூடத் தெரியாது’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அப்படியாக தாமரையும் பிரியங்காவும் எப்போது அடித்துக் கொள்வார்கள், எப்போது இணைந்து கொள்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. காலையிலேயே தாமரையை வித விதமாக அணைத்து ‘முத்தா’ கொடுத்துக் கொண்டிருந்தார் பிரியங்கா. சரியான சாப்பாடு இல்லையென்றால் ‘ஒரு மாதிரியாக’ ஆகி விடுவது பிரியங்காவின் வழக்கம்.

“மணி டாஸ்க்கில் யாரையும் ஜட்ஜ் பண்ண முடியலை” என்று பாவனியிடம் அமீர் சொல்ல “நான் எடுத்துருவேன்னு நிரூப் சொல்றான்” என்றார் பாவனி. “அப்ப அவன்தான் போயிடுவான்” என்று கோபத்துடன் சாபம் விட்ட அமீர் “எனக்கு ரெண்டு மைண்டா இருக்கு. ஜெயிச்சுடுவேன்னு ஒருபக்கம் நம்பிக்கையிருக்கு.. ஆனா” என்று இழுத்து மதில் மேல் பூனையாக குழம்பினார். ‘Think smart’ என்று சரத்குமார் சொன்னாலும் சொன்னார், பாவனி அதையே பிடித்துக் கொண்டு தொங்குகிறார். மற்றவர்களிடமும் சொல்கிறார்.

ஒரு மில்லியன் பரிசு

ஏலத்தொகையை பத்து லட்சமாக உயர்த்தினார் பிக்பாஸ். அடுத்தது பிரியங்காவின் கூக்குரல் நிச்சயம் கேட்கும் என்று ரிமோட்டை தயாராக வைத்துக்கொண்டு உட்கார்ந்தால் அது நடக்கவில்லை. நிரூப்பும் சிபியும் சாதாரணமாக வந்து பார்த்தார்கள். “இங்கிலீஷ்ல இதை ஒரு மில்லியன்னு சொல்லுவாங்க” என்று தாமரைக்கு சொன்னார் சிபி. பத்து லட்சம் என்று சொல்வதை விடவும் ‘ஒரு மில்லியன்’ என்று சொல்லும் போது அதிகப் பணம் என்பது மாதிரியே ஒரு பிரமை தோன்றுகிறது. கெத்தாகவும் இருக்கிறது போல.

“கோடி ரூபா கொடுத்தாலும் நான் போக மாட்டேன்” என்று ஒருபக்கம் சொன்ன தாமரை, “எம்பூட்டு காசு தர்றாங்கள்ல” என்று இன்னொரு பக்கம் வியந்தார். ரணகளத்திலும் கிளுகிளுப்பாக அந்தப் பக்கமாக அமீர் – பாவனி ரொமான்ஸூம் நடந்து கொண்டிருந்தது. பாவனி அணிந்திருந்த அதே மாதிரியான நீல நிறத்தில் தற்செயலாக அமீரும் டீஷர்ட் அணிய, அதை ஜாலியாக ஆட்சேபித்தார் பாவனி. எனவே தன் ஆடையை மாற்றிக் கொண்டார் அமீர். “ஏண்டா.. மாத்தறே.. என் பேன்ட் கூட ப்ளூ கலர்தான்” என்று இந்த ரொமான்ஸிற்கு இடையில் தானும் புக முயன்றார் நிரூப்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தொகையை பதினோரு லட்சமாக உயர்த்தினார் பிக்பாஸ். இந்தச் சமயத்தில் ரிமோட்டை மறதியாக எங்கோ வைத்து விட்டதால் பிரியங்காவின் காட்டுக்கத்தலை கேட்கும் இன்பத்திற்கு நான் ஆளானேன். “போன வருஷத்தைவிட இந்த வருஷம் ஆறு லட்சம் ஏத்தியிருக்காங்க” என்று உற்சாகமானார் பிரியங்கா. “நான் எடுக்கலாம்ன்னு இருக்கேன்” என்று அமீர் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, நம்பலாம் போலத்தான் இருந்தது. அவர் மனக்குழப்பத்தில் இருந்ததால் இப்படியொரு முடிவை எடுத்து விட்டாரோ என்று நம்பத் தோன்றியது.

பாவனி
பாவனி

அமீர் செய்த PRANK

மற்றவர்களிடம் அமீரும் தர்க்கபூர்வமாக தன் பக்க நியாயங்களை முன்வைத்தார். முதலில் மக்கள் மறுத்தாலும் “ஸ்மார்ட் ஆன முடிவுடா… ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்தினார் சிபி. ‘கிளம்பு காத்து வரட்டும்’ என்பது மாதிரியே சிபி சொன்ன விதம் இருந்தது. பிறகுதான் தெரிந்தது, அவர் மனதிலும் அப்படியொரு ஐடியா இருந்திருப்பது. “அங்க காமிரா இருக்கு. பாருங்க’ என்று Prank Show போல அமீர் முடித்ததால், சிபியின் முகத்தில் நிறைய அசடு வழிந்தது. மற்றவர்களும் ஏமாந்தார்கள். “அதுக்குத்தானே நான் அமைதியா இருந்தேன்?!” என்று ராஜூவும் சிபியை கிண்டலடித்தார். “நீ நடிக்கப் போலாம்டா..” என்று அமீரைப் பாராட்டினார் சிபி.

‘Sacrifice’ போன் அடித்தது. என்னமோ, ஏதோ என்று பார்த்தால் ‘தன் மனதிற்குப் பிடித்த இரண்டு ஜோடி ஆடைகளை தியாகம் செய்ய வேண்டுமாம். இதெல்லாம் ஒரு டாஸ்க்கா?! இந்த ஆடைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியோடு இந்தத் தியாகத்தைச் செய்ய முன்வந்தார்கள். எல்கேஜி படிக்கும்போது தான் அணிந்திருந்த மாதிரியான ஓர் ஆடையை பாவனி அளிக்க “இது கபாலி ஸ்டைல் டிரஸ்” என்று தியாகம் செய்தார் சிபி.

தாமரையின் மனதில் என்னதான் உள்ளது?

மக்களின் ஆடை நன்கொடையைப் பாராட்டும் விதமாக பரிசுத் தொகையை பன்னிரெண்டு லட்சமாக உயர்த்தினார் பிக்பாஸ். நான் இப்போது மனதையும் காதையும் இரும்பாக்கிக் கொண்டு தயாராக இருந்தததால், பிரியங்காவின் கூச்சல் அவ்வளவாக என்னைப் பாதிக்கவில்லை. 12 லட்சம் வந்ததும் ‘எடுக்கலாம்’ என்று சிபி முடிவு செய்து விட்டார். ஆனால் அதற்கு முன்பாக தாமரையின் விருப்பத்தை அவர் அறிந்து கொண்டது நல்ல பண்பு.

“எனக்கு இன்னமும் ஒரு வாரம் இந்த வீட்டில் இருந்தால் போதும். காசு பெரிய விஷயம் இல்லை” என்று சொல்வது தாமரையின் முடிவு; அவரின் விருப்பமும் கூட. ஆனால் அது சரியான முடிவா என்று தெரியவில்லை. “இதில் ஜெயிப்பதில் எனக்கு அத்தனை விருப்பமில்லை. என் முகம் உலகத்திற்கு தெரிஞ்சுடுச்சு. நாடக உலகத்தின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். அதுபோதும்” என்று சொல்லும் தாமரை, அவரின் பின்னணியை மனதில் கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் “வெளியே கோடி கோடியா சம்பாதிக்க வாய்ப்பு இருக்கு” என்று எதை வைத்து அவர் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை டைட்டிலை தான் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று உள்ளூற நம்புகிறாரா?

சிபி
சிபி

சிபி எடுத்த தீர்மான முடிவு

அமீர் செய்ததைப் போலவே சிபியும் விளையாடுகிறாரோ என்று மக்கள் நினைத்தாலும், அவர் அப்படிப்பட்ட ஆசாமி இல்லை என்பதால் சீரியஸ் ஆனார்கள். “வெயிட் பண்ணு. அமெளன்ட் ஏறும்” என்று ஆலோசனை சொன்னார் பிரியங்கா. “பசிச்சா… அவன் இப்படித்தான் ஒரு மாதிரியா பேசுவான்.. சாப்பிடறியா தம்பி?” என்று செல்லம் கொஞ்சினார் தாமரை. ஆனால் இவற்றையெல்லாம் சிபி ஏற்கவில்லை.

“சரிப்பா.. என்ன காரணம்.. தெளிவாச் சொல்லு.. பார்க்கலாம்” என்று அனைவரும் கேட்கவே “பயம்.. இதுவரைக்கும் ஜெயிச்சுடுவேன்னு நம்பிக்கை இருந்தது. ஆனா நேத்தில இருந்து அது இல்லை. நம்பிக்கை இருந்ததால்தான் ஒண்ணாம் நம்பர் இடத்திற்கு கடுமையா போட்டியிட்டு நின்னேன். இப்ப அது குறைந்துடுச்சு.. இந்த ‘பயம்’ன்ற விஷயத்தை நானே நிரூப் கிட்ட பலமுறை சொல்லியிருக்கேன். அப்படி சொல்லிட்டு நானே அதை என் கிட்ட வெச்சுக்கிட்டு பொய்யா நடிக்க முடியாது. தாமரை அக்கா மட்டும்தான் என் மைண்ட்ல இருந்தாங்க. அதுவும் இப்ப கிளியர் ஆயிடுச்சு. நான் எடுத்துட்டு கிளம்பறேன்” என்பதையே வெவ்வேறு விதங்களில் சொன்னார் சிபி.

பாவனி
பாவனி

“நான் பெட்டியை எடுக்கறேன்” –பாவனியின் திடீர் திருப்பம்

“நான் எடுத்துட்டுப் போயி இந்தப் பணத்தை தாமரைக்கு கொடுக்கலாமான்னு பார்க்கறேன்” என்று புதிய வெடிகுண்டை பாவனி இந்தச் சமயத்தில் வீச “அதை முதல்ல சொல்லியிருக்கணும். இப்ப நான் போறேன்னு சொன்ன அப்புறம் இனியும் இங்க நான் இருக்க முடியாது” என்று சிபி சொன்ன லாஜிக் சரியாகவே இருந்தது. “யாரையும் கடினமான போட்டியாளர்-ன்னு சொல்றது எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் சொல்றேன்… நீ ஒரு கடினமான போட்டியாளர்’ என்று அமீர் சொன்னாலும் சிபி ஏற்கவில்லை.

“நான் எப்பவுமே இன்னொருத்தரைப் பற்றி யோசிக்கவே மாட்டேன். எங்க வீட்ல கூட இதை ஒரு புகாராவே சொல்வாங்க.. முதன் முதலா தாமரை அக்காவைப் பத்தி யோசிச்சேன். இனிமே இங்க பொய்யா இருக்க விரும்பலை” என்றார் சிபி. சிபியின் தரப்பு உண்மையாகவே இருந்தாலும்கூட இத்தனை நாள் இல்லாத பயம் திடீரென்று எப்படி வந்தது? என்கிற சந்தேகக் கூடவே எழுகிறது. “இந்த பண வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்று நேரடியாகவே அவர் சொல்லியிருக்கலாம். "அதுல தப்பு ஒண்ணும் கிடையாது” என்பது அவரே முன்பு சொன்ன விஷயம்தான்.

“உன்னை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததில்லை. சிபி லா..” என்று பாராட்டினார் பிரியங்கா. “உன்னோட Comfort Zone-ல நீ ஜாலியா இருக்கற ஆள்” என்று பிரியங்கா சொன்ன பாராட்டிற்கு நன்றி சொன்னார் சிபி. “முடிவு பண்ணியாச்சா?” என்று பிக்பாஸூம் இப்போது கேட்க, ‘ஆம்’ என்று அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டார் சிபி. அப்போதுதான் மக்களுக்கு முழுமையான நம்பிக்கை வந்தது. “நான் சில விஷயங்களை நினைச்சு வந்தேன். அதையும் தாண்டி வேற சில விஷயங்கள் கிடைச்சது” என்று அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட சிபியை பிக்பாஸூம் வாழ்த்தி அனுப்பினார்.

“நான் இங்க ஜெயிக்கறதுக்காக வரலை” - பாவனி

“பிரெண்ட்ஷிப்ன்றது எவ்வளவு முக்கியமில்ல!” என்று திடீர் ஞானோதயம் வந்தது போல் பேசிக் கொண்டிருந்த பிரியங்கா, இதற்காக சசிகுமாரின் பன்ச் டயலாக்கை எல்லாம் பேசி அவரைப் போலவே சிரித்துக் காண்பித்தார். “இவ்வளவு விஷயம் சிபி மைண்ட்ல காலைல இருந்து ஓடியிருக்கு. நமக்குத் தெரியவேயில்ல பாரேன்” என்று ராஜூவிடம் வியந்தார். (‘சைலண்ட்டா இருக்கறவன்லாம் அப்படித்தான் வயலண்ட்டா இருப்பான்’).

“நான் தாமரைக்கு கொடுக்கறதுக்காக சீரியஸாவே பெட்டியை எடுக்க நினைச்சேன்” என்று அமீரிடம் பாவனி ஒருபக்கம் சொல்லிக் கொண்டிருக்க “அவன் சொன்னா செஞ்சுருவான்” என்று சிபியைப் பற்றி ராஜூவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நிரூப். “அவனுக்கு காமெடியா பேச வராது. ஆனா பேசினா காமெடியா இருக்கும்” என்று ரைமிங்கில் சிபியை கிண்டலும் அடித்தார்.

சிபி - பாவனி - பிரியங்கா
சிபி - பாவனி - பிரியங்கா

“நான் இங்க ஜெயிக்கறதுக்காக வரலை” என்பதை ஓப்பன் ஸ்டேட்மெண்ட் ஆகவே சொல்லிக் கொண்டிருந்தார் பாவனி. எனில் எதற்காக வந்திருக்கிறார்? மனமாற்றத்திற்காகவா? எனில் வெற்றியடைபவர்களுக்கு வழிவிட்டாவது அவர் அகன்று விடலாம். “எனக்கு என்னமோ தெரியல. குற்றவுணர்ச்சியா ஃபீல் ஆவுது” என்று நிரூப் அனத்திக் கொண்டிருக்க “அது நல்ல விஷயம்தான். நீ நிச்சயம் ஏதாவது பாவம் பண்ணியிருப்படா. படுபாவி.” என்று கிண்டலடித்தார் ராஜூ. “நான் பெட்டியை எடுத்தாலும் எடுத்துடுவேன்” என்று மற்றவர்களை உசுப்பி விட்டவரே நிரூப்தான். எனவே சிபி போனது அவருக்கு உள்ளூற சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும்.

சிபி போன துக்கத்தை தனது Calm spot-ல் வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டாடிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “இன்னொரு பெட்டி வைங்க பிக்பாஸ். நான் எடுத்துட்டு போறேன்” என்று பிக்பாஸிற்கே கோபம் வருவது போல் காமெடி செய்து கொண்டிருந்தார் பாவனி. (இதென்ன தீப்பெட்டியாம்மா? ஒண்ணு காலியானவுடனே இன்னொன்னு வாங்கி வெக்கறதுக்கு?!).

ராஜூ - அமீர்
ராஜூ - அமீர்

பிரியங்காவின் சாப்பாட்டு ஏக்கம்

உப்பு இல்லாமலேயே காரத்தை வைத்து திறமையாக மீன் வறுத்திருந்தார் நிரூப். மக்கள் அதை ஆவலாக மொக்கிக் கொண்டிருக்க தன்னால் அதை சாப்பிட முடியவில்லையே என்று காண்டானார் பிரியங்கா. முட்டையை ஆம்லேட் போட்டு சாப்பிட்டாலும் அவருக்கு வயிற்றெரிச்சல் தீரவில்லை. (முட்டை மட்டும் சைவமா?!) “எனக்கு சாப்பாடே இல்லை” என்று அனத்தியவர், "எனக்கென யாரும் இல்லையே?” என்கிற டெம்ப்ளேட் பாட்டைப் பாடி மற்றவர்களின் இரக்கத்தைக் கோரினார்.

பிரியங்கா குழந்தை போல் அனத்துவதால் “அங்கிளுக்கு டான்ஸ் ஆடிக்காட்டு” என்று ராஜூ கிண்டல் செய்ய அவரையும் பிடித்து இம்சை செய்தார் பிரியங்கா. “பிக்பாஸ்.. இவங்களுக்கு சாப்பாடு இல்லாததால… அந்நியன் மோடிற்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க” என்று வேண்டுகோள் வைத்த ராஜூ “நாளைக்கு உனக்கு ஸ்பெஷல் ஆம்லேட் போட்டுத் தரேன்” என்று சொல்வதோடு எபிசோட் முடிவடைந்தது.

சஞ்சீவ் மிரட்டி விட்டுப் போன அந்த ‘கடுமையான டாஸ்க்’ அடுத்த சீசனில்தான் வரும் போலிருக்கிறது.