Published:Updated:

பிக் பாஸ் எவிக்‌ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக் பாஸ்
News
பிக் பாஸ்

'பிக்பாஸ் தமிழ் சீசன் 5' இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேரடியாக ஃபைனலுக்கு தேர்வாகும் 'Ticket To Finale' சுற்று தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

'பிக்பாஸ் தமிழ் சீசன் 5' இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேரடியாக ஃபைனலுக்கு தேர்வாகும் 'Ticket To Finale' சுற்று தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ்
பிக்பாஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிரூப், பாவனி, அமீர், ராஜூ, பிரியங்கா, சஞ்சீவ், தாமரைச் செல்வி, சிபி என எட்டு போட்டியாளர்களும் இந்த 'Ticket To Finale' போட்டியில் கலந்து கொண்டார்கள். நிரூப், தாமரை, பாவனி, ராஜூ, பிரியங்கா இந்தப் போட்டியிலிருந்து வெளியேறியதை அடுத்து சிபி, அமீர், சஞ்சீவ் ஆகியோர் 'Ticket To Finale'விற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய ப்ரோமோவில் சஞ்சீவும், சிபியும் அடுத்த போட்டிக்கு முன்னேறியதாக தெரிகிறது. சஞ்சீவ் இறுதி வரை சென்று 'Ticket To Finale' பட்டத்தை வென்று நேரடியாக ஃபைனலுக்கு சென்றார் எனில் அவர் இந்த வார பிக்பாஸ் எவிக்‌ஷனில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும், இல்லை எனில், அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற அதிகபட்ச வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ்
பிக்பாஸ்

இதுவரை பிக்பாஸ் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளர்களுள் ஒருவர் மட்டுமே பைனல் வரை முன்னேறியிருக்கிறார்கள். அப்படி பார்க்கும் போது, சஞ்சீவ் அல்லது அமீர் இருவரில் நிச்சயம் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற அதிக அளவில் வாய்ப்பு உள்ளது.

ஓட்டு அடிப்படையில் சஞ்சீவிற்கு குறைந்த எண்ணிக்கையில் ஓட்டு பதிவாகி உள்ளதாகவும், அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற அதிகபட்சம் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஒருவேளை சஞ்சீவ் டிக்கெட் டாஸ்க்கில் வெற்றி பெறவில்லை என்றாலும் இறுதி நேரம் அதிக வாக்கு கிடைத்தால் அவர் தப்பிக்கவும் வாய்ப்புள்ளது. சமீப நாள்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத ட்விஸ்ட்கள் நடக்கின்றன. டாஸ்க்குகளும் கடுமையாக உள்ளன. ஒருவேளை எதிர்பாராததை இந்த எவிக்‌ஷனிலும் எதிர்பார்க்க நேரலாம்.