Published:Updated:

பிக் பாஸ் எவிக்‌ஷன்: இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறியது இவர்தான்!

பிக் பாஸ்
News
பிக் பாஸ்

அதன்படி, கேமில் ஜெயித்த சிபி, நிரூப், தாமரை, அமீர், சஞ்சீவ் ஆகிய ஐந்து பேர் நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்து விட, மற்ற அனைவரும் வெளியேறுவதற்கான பட்டியலில் இருந்தார்கள்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் இந்த வாரம் எவிக்‌ஷன் எபிசோடுக்கான படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது. கமல்ஹாசன் கலந்து கொள்ளும் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் தற்போது முடிவடைந்து விட்டதாகத் தெரிகிறது.

மொத்தம் 100 நாட்கள் கொண்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இரண்டு மாதங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நிறைவு பெற இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று (18/12/21) காலை தொடங்கியது.

முன்னதாக இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் முதலில் வீட்டிலுள்ள எல்லாரையுமே சேர்த்திருந்தார் பிக் பாஸ். ஆனால் பிறகு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு அதில் வெல்பவர்கள் வெளியேறுவதற்கான நாமினேஷன் லிஸ்டில் இருந்து தப்பித்து விடலாம் எனச் சொல்லப் பட்டது.

அதன்படி, கேமில் ஜெயித்த சிபி, நிரூப், தாமரை, அமீர், சஞ்சீவ் ஆகிய ஐந்து பேர் நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்து விட, மற்ற அனைவரும் வெளியேறுவதற்கான பட்டியலில் இருந்தார்கள்.

இவர்களில் அபிநய் வெளியேறி இருப்பதாக தற்போது உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

பிக் பாஸ் அபிநய்
பிக் பாஸ் அபிநய்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்ப நாட்களில் அவ்வளவாக எதிலும் ஆர்வம் இல்லாதவர் போலவே காணப்பட்ட பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான அபிநய். சமீபமாக ஓரளவு நிகழ்ச்சியைப் புரிந்து கொண்டு விளையாடினார் எனச் சொல்லலாம். அதுவும் சமீப சில தினங்களாக பாவனியுடனான இவரது பழக்கம் நட்பா காதலா என்கிற சர்ச்சைக்குள் சிக்கி. கமல் குறும்படம் போடுமளவு சென்றது நினைவிருக்கலாம்.

அந்த சர்ச்சைக்குப் பிறகு பாவனியைத் தவிர்க்கத் தொடங்கிய நிலையில் இப்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

அபிநய் வெளியேறிய எபிசோடு நாளை (19/12/21) இரவு ஒளிபரப்பாக உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz