Published:Updated:

பிக் பாஸ் 5 எவிக்சன்: வந்தான்... இருந்தான்... சென்றான்... ரிப்பீட்டு! அபிஷேக் வெளியேறக் காரணமென்ன?

பிக் பாஸ் அபிஷேக்

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஆரம்ப சில நாட்களில் கண்டென்ட் தரும் முக்கியமான ஒருவராகப் பார்க்கப்பட்டவர் அபிஷேக் ராஜா.

பிக் பாஸ் 5 எவிக்சன்: வந்தான்... இருந்தான்... சென்றான்... ரிப்பீட்டு! அபிஷேக் வெளியேறக் காரணமென்ன?

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஆரம்ப சில நாட்களில் கண்டென்ட் தரும் முக்கியமான ஒருவராகப் பார்க்கப்பட்டவர் அபிஷேக் ராஜா.

Published:Updated:
பிக் பாஸ் அபிஷேக்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இந்த வார எவிஷனில் அபிஷேக் ராஜா வெளியேறி இருக்கும் தகவலை நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ன் இந்த வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் நேற்று (4/12/21) காலை தொடங்கியது. கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த கமல் உடல்நிலை சரியானதைத் தொடர்ந்து நேரடியாக மருத்துவமனையிலிருந்து ஷூட்டிங் வந்தார். வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான எபிசோடுகளை சனிக்கிழமையே ஷூட் செய்து விடுவார்கள். ஆனால், நேற்று சனிக்கிழமைக்கான எபிசோடு மட்டும் ஷூட் செய்யப்பட்டது. இன்றைக்கு (5/12/21) ஒளிபரப்பாகும் எபிசோடுக்கான ஷூட் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த வாரம் எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் வருண், அபிநய், அபிஷேக் ராஜா உள்ளிட்டோர் இருந்த நிலையில் அபிஷேக் ராஜா வெளியேறி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஆரம்ப சில நாட்களில் கண்டென்ட் தரும் முக்கியமான ஒருவராகப் பார்க்கப்பட்டவர் அபிஷேக் ராஜா. முந்தைய பிக் பாஸ் சீசன்களிலெல்லாம் யாரவது ஒரு ஜோடியே கண்டென்ட் தருபவர்களாக இருந்து வந்தனர். ஆரவ்-ஓவியா, மகத்-யாஷிகா, கடந்த சீசனில் ஷிவானி-பாலா என இதற்கு உதாரணங்கள் சொல்லலாம். இந்த நிலையில் ’சிங்கிள் ட்ராக்கில் செமயாக வலம் வர்றாரே’ என யோசித்து முடிப்பதற்குள், அடுத்த வாரமே அதிரடியாக வெளியேற்றப்பட்டார் அபிஷேக். நிகழ்ச்சிக்குக் கண்டென்ட் மட்டும் தந்து கொண்டிருந்தால் பரவாயில்லை, ஆனால் சக போட்டியாளர்கள் சிலரை சைலண்டாகக் ’கண்டம்’ பண்ண அபிஷேக் பண்ணிய சூழ்ச்சி நடவடிக்கைகளே இவரது வெளியேற்றத்துக்கான காரணம் என்பதை பிக் பாஸைத் தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள் புரிந்து கொண்டார்கள்.

பிரியங்கா - அபிஷேக்
பிரியங்கா - அபிஷேக்

’சரி, போயிட்டார் விடுங்க’ என விட்டிருக்கலாம்,. ஆனால் அடுத்த சில வாரங்கள் நிகழ்ச்சி கொஞ்சம் டல் அடிக்கவே, இருந்த ஒருத்தரையும் அனுப்பிட்டோமே’ என நினைத்ததோ என்னவோ, மறுபடியும் வைல்டுகார்டு வழியாக அவரை அந்த வீட்டுக்குள் அழைத்தார், பிக் பாஸ்.

இரண்டாவது வாய்ப்பையாவது சரியாக பயன்படுத்தினாரா என்றால் இல்லை.

சக போட்டியாளரான பிரியங்காவை டிரெகர் செய்து தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி பிக் பாஸ் ரசிகர்களிடம் தனக்கு மட்டுமின்றி பிரியங்காவுக்கும் சேர்த்தே கெட்ட பெயர் வாங்கித் தந்தார். கடந்த வாரம் பிரியங்காவுக்கும் தாமரைக்கும் நடந்த சண்டைக்கும் மூல காரணமாக இருந்தார். இந்தச் சூழலில்தான் இன்று மீண்டும் அதிரடி நடந்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ஐ பொறுத்தவரை சிலர் முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சிக்குள் இருந்தபடி திறமையாக விளையாண்டு வருகிற நிலையில். கண்டென்ட் தருபவராகப் பார்க்கப்பட்டு, ஆனால் சீக்கிரத்திலேயே அந்தச் சாயம் வெளுத்து கிடைத்த இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் அபிஷேக். என்னத்தச் சொல்ல? முடியல தலைவரே! என்கின்றனர் மக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism