Published:Updated:

பிக் பாஸ்: வென்றார் ராஜூ; "எங்களுக்கு சந்தோஷமா இருக்கு"பாராட்டிய கமல்; கண்கலங்கிய ராஜூவின் அம்மா!

பிக் பாஸ்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பைனலுக்குள் நுழைந்த முதல் போட்டியாளரானார் ராஜூ

பிக் பாஸ்: வென்றார் ராஜூ; "எங்களுக்கு சந்தோஷமா இருக்கு"பாராட்டிய கமல்; கண்கலங்கிய ராஜூவின் அம்மா!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பைனலுக்குள் நுழைந்த முதல் போட்டியாளரானார் ராஜூ

Published:Updated:
பிக் பாஸ்

பரபரப்பாக நடந்துவந்த பிக் பாஸ் சீசன் 5 பைனல் நடந்து முடிந்தது. இறுதிப் போட்டியில் இந்த முறை ராஜூ வெற்றி பெற வாய்ப்பு அதிகமிருந்தது. பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை நாம் முன்பே சொன்னது போல ராஜூ வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்த சிறப்பாக விளையாடிய ராஜூ பல ரசிகர்களை தனக்கு ஏற்படுத்திக் கொண்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பைனலுக்குள் நுழைந்த முதல் போட்டியாளரானார் ராஜூ.

கமல்
கமல்

பொது மக்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் இறுதிக்கட்டத்தில் ராஜூ வெற்றி பெற வேண்டுமெனவே விருப்பம் தெரிவித்தனர். அதன்படி தற்போது டைட்டில் வின்னராகியிருக்கிறார் ராஜூ. ராஜூவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. ராஜூவுக்கு பிக் பாஸ் கோப்பையை வழங்கினார் கமல்ஹாசன். ராஜூவின் அம்மா என் மகன் வென்றது சந்தோஷமா இருக்கு எனச் சொல்ல, எங்களுக்கு சந்தேதோஷமா இருக்கு என்றார் கமல். ராஜூவின் மனைவி, " எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ராஜூவோட முகத்துல இந்த சந்தோஷத்தைப் பாக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாரும் ராஜூவுக்கு ரொம்ப ஆதரவு குடுத்தீங்க. அதுக்கு ரொம்ப நன்றி. பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நன்றியைத் தவிர என்ன சொல்றதுனு தெரியல" என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பரிசை வென்ற ராஜூ, " இதே விஜய் டிவில புரோகிராம் புரொடியூசரா நான் வேலை பாத்துருக்கேன். பிக் பாஸ் வீட்டுக்குள்ள என்னைப் பத்தி எனக்கு ஒரு வீடியோ ப்ளே பண்ணினாங்க. அதே மாதிரி ஒரு வீடியோவை கமல் சாருக்கு நான் ரெடி பண்ணி ப்ளே பண்ணிருக்கேன். அதை கமல் சார் மேடைல நின்னு பாக்குறதை, நான் மேடைக்கு சைடுல நின்னு பாத்துருக்கேன்.

ராஜூ
ராஜூ

இன்னைக்கும் அதே மாதிரி பலர் மேடைக்கு சைடுல கைல வாக்கி டாக்கியோட வேலை பாத்துகிட்டு இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி " என நெகிழ்ச்சியுடன் பேசினார். பிக் பாஸ் சீசன் 5 -ல் இரண்டாம் இடம் பிடித்த பிரியங்கா, " ராஜூ ஜெயிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இங்க வர்றப்போ உங்களை ரொம்ப பேருக்குத் தெரியாதுனு சொன்னிங்க. இனிமே நீங்க போறப்போ உங்களைப் பாத்து எல்லாரும் `ஹேய்! நம்ம கோப்பால்' னு சொல்லுவாங்க ரொம்ப சந்தோஷம் கோப்பால்" என மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.