Published:Updated:

பிக் பாஸ் எவிக்‌ஷன்: நிறைவேறாத ஆசை; கடைசி எவிக்ஷனில் வெளியறியது யார் தெரியுமா?

பிக் பாஸ்

பிரியங்கா, பாவனி, ராஜு, தாமரை ஆகிய நால்வருமே இந்த வாரம் வெளியேற்றப் படுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

பிக் பாஸ் எவிக்‌ஷன்: நிறைவேறாத ஆசை; கடைசி எவிக்ஷனில் வெளியறியது யார் தெரியுமா?

பிரியங்கா, பாவனி, ராஜு, தாமரை ஆகிய நால்வருமே இந்த வாரம் வெளியேற்றப் படுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

Published:Updated:
பிக் பாஸ்

தமிழ் பிக் பாஸ் சீசன் 5 க்ளைமாஸைத் தொட்டுவிட்டது, அடுத்த வாரத்துடன் நிறைவடைய இருக்கிறது ஷோ. கமல்ஹாசன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் கடைசி வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று (8/1/22) காலை தொடங்கி தற்போது நடந்து வருகிறது. நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நிரூப் டிக்கெட் டூ ஃபினாலே மூலம் நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டார். ஏற்கெனவே அமீர் சில தினங்களுக்கு முன்பு முதல் ஆளாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டார். மீதி இருப்பவர்கள் பிரியங்கா, பாவனி, ராஜு, தாமரை ஆகிய நால்வருமே இந்த வாரம் வெளியேற்றப் படுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். இவர்களில் குறைவான ஓட்டுகள் வாங்கிய தாமரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார். தாமரையின் சொந்த ஊர் புதுக்கோட்டை பக்கமுள்ள ஒரு கிராமம். மேடை நாடகக் கலைஞரான இவர் திருமணத்துக்குப் பிறகு திண்டுக்கலில் குடியேறி இருக்கிறார்.

தாமரை செல்வி
தாமரை செல்வி

கிராமப்புற ஆடியன்ஸ்சைக் கவர நாட்டுப்புறக் கலைஞர்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் வழக்கத்தை ஒரு யுக்தியை வைத்திருக்கும் விஜய் டிவி அதே பாணியில் இவரை பிக் பாஸுக்குள் இறக்கி விட்டதென்கிறார்கள். நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இவர் களம் இறங்கியது முதல் சில நாட்கள் வெள்ளந்தி கிராமத்து மனுஷியாகவே அந்த வீட்டில் இருந்தார். ஆனால் போகப் போக நிகழ்ச்சியின் சூட்மசுங்களைப் புரிந்து கொண்டு விளையாடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரியங்காவுடன் இவர் சண்டை செய்த எபிசோடுகளெல்லாம் பரபரப்பாகச் சென்றது நினைவிருக்கலாம். நிகழ்ச்சியில் இவரது செயல்பாடுகளால் வெளியில் கனிசமான ஆதரவாளர்களும் இவருக்குக் கிடைத்தார்கள். கடந்த வாரத்தில் 12 லட்சத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற ஒரு சந்தர்ப்பத்தை இவருக்கு சிபி தந்த போதும் அதை மறுத்து விட்டார். எப்படியும் முதல் அல்லது இரண்டாவது இடம் பிடித்து விடுவோம் என்கிற நம்பிக்கையில் அவர் இருந்ததாகச் சொல்கின்றனர் அவரது நண்பர்கள். அந்த நம்பிக்கை நிறைவேறாது போனாலும் தன்னம்பிக்கையுடன் இத்தனை நாள் நிகழ்ச்சியில் நின்று விளையாடியதே அவரைப் பொறுத்த வரை பெரிய விஷயம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!