Published:Updated:

BB Ultimate: இன்று கடைசி நாள் ஷூட்டிங்.. டைட்டிலுக்கு மோதும் அந்த இருவர் யார்?

BB Ultimate சிம்பு

BB Ultimate : 70 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நடைபெறுகிறது.

BB Ultimate: இன்று கடைசி நாள் ஷூட்டிங்.. டைட்டிலுக்கு மோதும் அந்த இருவர் யார்?

BB Ultimate : 70 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நடைபெறுகிறது.

Published:Updated:
BB Ultimate சிம்பு

கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஒ.டி.டி தளமான ஹாட் ஸ்டாரில் `பிக் பாஸ் அல்டிமேட்' என்ற பெயரில் அதுவும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகத் தொடங்கியது. பிக் பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்டு திறமையாக விளையாடிய வனிதா விஜயகுமார், சிநேகன், ஜூலி, அனிதா சம்பத், தாமரை, நிரூப், பாலா உள்ளிட்ட போட்டியாளர்களே இங்கும் போட்டியாளர்களாகக் களம் கண்டனர். சேனலில் தொகுத்து வழங்கிய கமலே அல்டிமேட்டையும் தொகுத்து வழங்க வந்தார். ஆனால் இடையில் பட ஷூட்டிங் தடைபடுவதாகக்கூறி பாதியிலேயே அவர் வெளியேற அவருக்குப் பதில் நிகழ்ச்சிக்குள் வந்தார் சிம்பு. பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்த அடுத்த சில தினங்களிலேயே தொடங்கியது மற்றும் விளையாட்டின் ஃபார்மட் தெரிந்த போட்டியாளர்கள் என்பன போன்ற விஷயங்கள்தான் காரணமோ என்னவோ, ஆரம்பத்திலிருந்தே நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

நிரூப், பாலா
நிரூப், பாலா

நிகழ்ச்சி தொடங்கி வழக்கமான எவிக்‌ஷனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினார்கள். தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்ருதி ரூ.15 லட்சம் எடுத்துக்கொண்டு சில தினங்களுக்கு முன்பு வெளியேறினார். ஒருவழியாக 70 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நடைபெறுகிறது. டைட்டில் வெல்வதற்கான இறுதிச் சுற்றில் நிரூப், தாமரை, ஜூலி, வைல் கார்டு எண்ட்ரியாக வந்த ரம்யா பாண்டியன், பாலா, அபிராமி என மொத்தம் ஆறு பேர் இருக்கின்றனர். இவர்களில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஆரம்பத்தில் பாலாவுக்கும் ரம்யா பாண்டியனுக்குமே போட்டி இருந்து வந்தது. தற்போது அந்த நிலைமை கொஞ்சம் மாறி நிரூப் மற்றும் பாலாவுக்கிடையில் போட்டி இருப்பதாகத் தெரிகிறது. பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் டைட்டிலை வெல்லப் போவது யார் என்பது இன்று மாலை தெரிந்து விடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism