Published:Updated:

BB Ultimate: அனிதாவா, தாமரையா? இந்த வார எவிக்சனில் வெளியேறுவது யார்?

அனிதா சம்பத், தாமரை

BB Ultimate இந்த வார நாமினேஷன் பட்டியலில் அனிதா, ஜூலி, நிரூப், ஸ்ருதி, தாமரை, சதீஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

BB Ultimate: அனிதாவா, தாமரையா? இந்த வார எவிக்சனில் வெளியேறுவது யார்?

BB Ultimate இந்த வார நாமினேஷன் பட்டியலில் அனிதா, ஜூலி, நிரூப், ஸ்ருதி, தாமரை, சதீஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Published:Updated:
அனிதா சம்பத், தாமரை

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட், வரும் ஏப்ரல் இரண்டாவது வாரம் நிறைவடைய உள்ளதால் யார் டைட்டில் வின்னராக வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. நாளை ஒளிபரப்பாக இருக்கும் சிம்பு பங்குபெறும் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.

அனிதா சம்பத்
அனிதா சம்பத்

வழக்கம் போல இந்த எபிசோடில் எவிக்ஷன் நடைபெறும். அனிதா, ஜூலி, நிரூப், ஸ்ருதி, தாமரை, சதீஷ் ஆகியோர் இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் அனிதா சம்பத் வெளியேறுவது தற்போது உறுதியாகி இருக்கிறது.

சுரேஷ் சக்ரவர்த்தி வைல்ட் கார்ட் என்ட்ரிக்குப் பிறகு கடந்த சீசன் போலவே சுரேஷுக்கும் அனிதா சம்பத்துக்கும் அடிக்கடி மோதல் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அனிதா இடம்பெற்றிருந்தார். அவர் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து இன்றைக்கு வெளியேற்றப்படுவார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றது போல, முந்தைய பிக் பாஸ் சீசனின் முக்கிய போட்டியாளர் ரம்யா பாண்டியனும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.