Published:Updated:

BIGG BOSS OTT: போட்டியாளர்கள் யார், கமல் தொகுப்பாளரா? இந்த பிக் பாஸில் என்ன ஸ்பெஷல்?

OTT BIGG BOSS
News
OTT BIGG BOSS

பிக் பாஸ் கான்செஃட்டுக்குச் சொந்தக்காரர்களான எண்டமால் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை விஜய் டிவி செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஜனவரி 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. விஜய் டிவியைப் பொறுத்தவரை கடந்த நான்காண்டுகளாக இந்த ஒரு ஷோதான் சேனலின் மிகப் பெரிய ஹிட் நிகழ்ச்சி எனச் சொல்லலாம். ஆனாலும் முந்தைய நான்கு சீசன்களுடன் ஒப்பிடுகையில் ஐந்தாவது சீசன் சுமார்தான் என சமூக வலைதஙளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. வரும் 2022 பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஏனெனில் முதல் ஐந்து சீசன்கள் மட்டுமே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்கிற ரீதியில்தான் தொடக்கத்தில் ஒப்ப்ந்தம் போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழலில்தான் தமிழ் பிக் பாஸ் 5 முடிவடைந்ததும் அடுத்த சில மாதங்களில் புத்தம் புதிதாக ஒ.டி.டி,க்கு என்றே ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியைத் திட்டமிட்டிருக்கிறது விஜய் டிவி. ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது இந்த பிக் பாஸ். முதல் கட்டமாக ஒ.டி.டி.யில் அதே ஃபார்மாட்டை ஒளிபரப்புவதில் சட்டச் சிக்கல் ஏதும் வராமல் இருக்க, பிக் பாஸ் கான்செஃட்டுக்குச் சொந்தக்காரர்களான எண்டமால் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை விஜய் டிவி போட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமல்
கமல்

அந்தப் பணிகள் முடிவடைந்ததும் போட்டியாளர்களைத் தேடும் படலம் தொடங்கிவிட்டதாம். நடிகைகள் ஓவியா, வனிதா விஜயகுமார், நடிகர் ஆரி ஆகியோரிடம் முதல்கட்டமாகப் பேசியுள்ளனர். இவர்க்ளில் யார் யார் சம்மதித்தார்கள் என்பது இதுவரைத் தெரியவில்லை. ஓரிரு போட்டியாளர்கள் ‘ஏன் ஒருதடவை அசிங்கப் பட்டது போதாதா; ஆளை விடுங்க சாமிகளா’ எனத் தெறித்து ஓடியதும் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுடன் புதிதாக சில போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதேநேரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைகளில் சிக்கியவர்களிடம் (சரவணன், மதுமிதா முதலானோர்) பேச வேண்டாமென முடிவெடுத்து விட்டார்களாம். பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை சென்னை ஈ.வி.பியில் அமைந்துள்ள அதே வீடுதான். அதில் சில மாற்றங்களைச் செய்யலாமெனத் தெரிகிறது. வீடு ரெடி, போட்டியாளர்கள் வந்து விடுவார்கள், சரி வாய்ஸ் தருகிறவர் அதே பிக் பாஸ்தானா? நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது யார்? என்பன போன்ற மிச்ச இரண்டு கேள்விகள்? தொண்ணூறு சதவிகிதம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ஸ் தந்த அதே பிக் பாஸ், அதாவது சாஷோதான் இருப்பார் என்கிறார்கள். இங்கும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் அவருடனும் முதல் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz