Election bannerElection banner
Published:Updated:

''பிக்பாஸ் வீட்டுக்குள் 49 நாள்தான் இருந்தேன்... சம்பாதித்தது 2.25 கோடி!'' - கோடீஸ்வரியான நடிகை

பிக்பாஸ்
பிக்பாஸ் ( en.wikipedia.org )

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி நமக்கு நான்கு ஆண்டுகளாகத்தான் அறிமுகம். ஆனால், இந்தியில் 14 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கடந்த பல சீசன்களாக சல்மான் கான் இதைத் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ்... உலகப் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி. ஆங்கிலத்தில் 'பிக் பிரதர்' எனத்தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்தியாவில் பிக்பாஸ் ஆனது. இந்நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்களும் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் பற்றித்தான் பேச்சிருக்கும். அந்த அளவுக்கு இந்நிகழ்ச்சியின் தன்மை எப்போதும் பரபரப்பிலேயே இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்டு உலக செலிபிரிட்டி ஆனவர்களும் அதிகம். ஷில்பா ஷெட்டி இதற்கு ஒரு உதாரணம். புகழ் மட்டுமில்ல, நிகழ்ச்சியில் பங்கெடுத்தால் குறுகிய காலத்தில் அதிக பணமும் சம்பாதிக்கலாம் என இப்போது சொல்லியிருக்கிறார் இந்தி நடிகை ரிமி சென்.

rimi sen
rimi sen
instagram/@subhamitra03

2015-ம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் சீசன் 9-ல் பங்கேற்றவர் ரிமி சென். ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தாலும். பிக்பாஸ் அவருக்கு பெரும் புகழ் வெளிச்சம் தந்தது. நிகழ்ச்சியில் ஆர்வம் இல்லாமல் கலந்து கொள்கிறார் எனப் பலமுறை தொகுப்பாளர் சல்மான் கான் ரிமியை விமர்சித்திருக்கிறார். இருப்பினும் 49 நாட்கள் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் தாக்குப்பிடித்திருந்தார்.

"பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பணத்திற்காகத்தான் கலந்து கொண்டேன். 49 நாட்கள்தான் வீட்டுக்குள் இருந்தேன். ஆனால், எனக்கு 2.25 கோடி ரூபாய் சம்பளம் தந்தார்கள். யாரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பணம் சம்பாதிக்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சண்டை போடும் நிகழ்ச்சி என்றே அனைவரும் நினைக்கின்றனர். உண்மையில் அது ஒருவர் அவரின் உண்மையான சுயத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. எல்லோருக்குள்ளும் சில நெகட்டிவ் குணங்கள் இருக்கும். இந்த நிகழ்ச்சி அதை வெளிப்படுத்திவிடுகிறது. அதை வெளிப்படுத்தும் நோக்கத்துடன்தான் பிரேத்யேகமாக நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் வடிவமைக்கப்படுகின்றன. நாம்தான் உறுதியோடு அதை எதிர்கொள்ள வேண்டும்" என ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் ரிமி சென்.

ரிமி சென்
ரிமி சென்

"நான் பங்கெடுத்த சமயத்திலிருந்து இப்போதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரேபோல்தான் நடத்தப்படுகிறது. நான் பணம் சம்பாதிக்க வேண்டும், நல்ல ஒரு மதிப்போடு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்றுதான் கலந்துக் கொண்டேன். அதை வெற்றிகரமாக சாத்தியமும் ஆக்கினேன்" என்று சொல்லியிருக்கிறார் ரிமி.

பொதுவாக பிக்பாஸ் பிரபலங்கள் நிகழ்ச்சி குறித்தோ, அவர்களின் சம்பள விவரங்கள் குறித்தோ பொது வெளியில் பேசக்கூடாது என அவர்களுடன் ஒப்பந்தம் போடப்படும். இந்நிலையில் ரிமி வெளிப்படையாக பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் மீண்டும் பிக்பாஸ் பக்கம் திருப்பியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு