Published:Updated:

திடீர் நோய்த்தொற்று... மருத்துவமனையில் சிகிச்சை... பிக் பாஸ் நமீதாவுக்கு என்ன பிரச்னை?

சிறுநீரகத் தொற்று காரணமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா, தற்போது பூந்தமல்லியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பதினெட்டு போட்டியாளர்களுடன் மிகுந்த எதிர்பார்போடு துவங்கியிருக்கிறது பிக் பாஸ் சீசன் 5. இந்த சீசனில் மிக முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது திருநங்கை நமீதாவின் என்ட்ரி. இந்நிலையில், திடீரென நமீதா வீட்டைவிட்டு வெளியேறியதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் நமீதா
பிக் பாஸ் நமீதா

அவர் தான் கடந்து வந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் எமோஷனல் மொமன்ட்டாக இருந்தது. நிச்சயம் நமீதா பல வாரங்கள் தாக்குப்பிடித்து கடும் போட்டியாளராக இருப்பார் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவர் வீட்டைவிட்டு வெளியேறியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீரகத் தொற்று காரணமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா, தற்போது பூந்தமல்லியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறுநீரகத் தொற்று அடிக்கடி ஏற்படும். குறிப்பாக தாய்லாந்தில் செய்துகொண்டால் இந்தப் பிரச்னை அடிக்கடி வரும். அவர்கள் இதற்காக மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்னை ஏற்படாமல் தடுக்க முடியும். நமீதாவும் தாய்லாந்தில் சர்ஜரி செய்திருக்கிறார் என்பதால்தான் இந்த அளவிற்கு பிரச்னையாகி உள்ளது என்கிறார்கள், நமீதாவின் நண்பர்கள்.

பிக் பாஸ் நமீதா
பிக் பாஸ் நமீதா

நமீதாவைப் போல தாய்லாந்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருநங்கை அஜிதாவிடம் பேசினோம்.

"தாய்லாந்தில் அறுவை சிகிச்சை பண்ணிகிட்டா ரியல் பொண்ணுங்க மாதிரியான உணர்வு இருக்கும். அதனால பெரும்பாலும் அங்கே பண்ணிக்க விரும்புவாங்க. எனக்கு அறுவை சிகிச்சை முடிஞ்சு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் ஆகுது. நான் சந்திக்கிற பெரிய பிரச்னைன்னா இந்த யூரின் இன்பெக்‌ஷன்தான். நாங்க மூணு, நாலு பேர் பயன்படுத்துற பொது டாய்லெட் பயன்படுத்த முடியாது. உடனே இன்பெக்‌ஷன் ஆகிடும். தாய்லாந்தில் கச்சிதமா சர்ஜரி பண்ணுவாங்க. அதே மாதிரி ரொம்ப ஹைஜீனிக் ஆக இருக்கணும்னு டாக்டர்ஸ் சொல்லுவாங்க.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா! மருத்துவமனையில் அனுமதி... நடந்தது என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியன் டாய்லெட்னா கூட இந்த அளவுக்கு நமீதாவிற்கு பிரச்னை வந்திருக்காது. வெஸ்டர்ன் டாய்லெட்ங்கிறதனால உடனே ரியாக்ட் ஆகிடுச்சு. அவங்களுக்குன்னு தனி பாத்ரூம் இருந்திருந்தா இந்தப் பிரச்னை இருக்காது.

சிறுநீரகத் தொற்றை மட்டும் எங்களால தாங்கிக்கவே முடியாதுங்க. ரொம்ப வலிக்கும். செயற்கையாக வைச்சதுங்கிறதனால ரொம்ப எரிச்சல் இருக்கும்.

பிக் பாஸ் நமீதா
பிக் பாஸ் நமீதா

கிட்டத்தட்ட நான் சர்ஜரி பண்ணி ரெண்டு வருஷம் ஆகியும் இன்னமும் எனக்கு தையல் இருக்கு. அந்தத் தையலில் துணி பட்டா கூட வலி அதிகமா இருக்கும்.

பெரும்பாலும் அந்த இன்பெக்‌ஷனுக்கு நாங்க வீட்டு வைத்தியம் பண்ணுவோம். மூணு நாளில் சரியாகிடும். ரொம்ப வலி இருந்துச்சுன்னா டாக்டர்கிட்ட சிகிச்சைக்குப்போக வேண்டியிருக்கும். அதுலயே சீக்கிரம் உடம்பு சரியாகிடும்" என்றார்.

முதன்முறையாக தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவரை போட்டியாளராக இந்த சீசனில்தான் களம் இறக்கினார்கள். அவரும் உடல்ரீதியான பிரச்னையின் காரணமாகப் போட்டியிலிருந்து விலக வேண்டியதாகிவிட்ட நிலையில் வேறு ஒரு திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு